சுண்டு விரல் வெள்ளி மோதிரம் செய்யும் அதிசயம்.

littlefinger-silverring

நம் வீட்டில் செய்யும் எந்த ஒரு சுப விசேஷங்களுக்கு மற்றவர்களை அழைப்பதாக இருந்தால், முதலில் அவர்களுக்கு வெள்ளி குங்குமச்சிமிழில் குங்குமத்தை கொடுத்து தான் ‘தவறாமல் எங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ள வேண்டும்’ என்று அழைப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றோம். இதேபோல் சந்தன கிட்னி, பஞ்ச பாத்திரம், இறைவனுக்காக நெய்வேதியம் படைக்கப்படும் பாத்திரம், இறைவனுக்காக ஏற்றப்படும் விளக்குகள், இப்படி கோவில்களில் பயன்படுத்தப்படும் பல பொருட்களும் வெளியில்தான் இருக்கும். சுப காரியங்களுக்காக பயன்படுத்தப்படும் எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதை அதிகப்படியாக நாம் ஏன் வெள்ளியில் பயன்படுத்துகின்றோம். அது ஏன் என்று கேட்டால், வெள்ளிக்கு என்று எந்த ஒரு தீட்டும் இல்லை. அதாவது எந்த ஒரு தீட்டாக இருந்தாலும், கெட்ட சக்தியாக இருந்தாலும் அதை வெள்ளி தனக்குள் ஈர்த்துக் கொள்ளாது. இதனால்தான் கோவில்களிலும், சுப விசேஷங்களிலும் வெள்ளிக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதோடு அல்லாமல் வெள்ளிக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக உள்ளது. இதனால் தான் குழந்தைகளுக்கு வெள்ளிப் பாத்திரத்தில் சாப்பாடு ஊட்டுவார்கள்.

silver-ring

இப்படி நமக்கு பலவகைப்பட்ட நன்மைகளைத் தரும் பஞ்ச உலோகங்களில் ஒன்றான வெள்ளியை மோதிரமாக அணிந்து கொள்வதன் மூலம், எப்படி எல்லாவிதமான நன்மைகளையும் பெற முடியும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தினை ஞாயிற்றுக்கிழமை தினத்தன்றோ அல்லது திருவோண நட்சத்திரத்தன்றோ செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை அன்று அல்லது திருவோண நட்சத்திரத்தன்று இந்த இரண்டு தினங்களில் ஏதாவது ஒரு இரவு முழுவதும் வெள்ளி மோதிரத்தை உங்களது சுண்டு விரலில் அணிந்து கொண்டு, அடுத்த நாள் காலை அந்த மோதிரத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுவிடுங்கள். ஒரு நாள் பொழுது முழுவதிலும் அந்த மோதிரத்தை தண்ணீரிலேயே விட்டுவிடுங்கள். மறுநாள் காலை எழுந்து குளித்து முடித்துவிட்டு இறைவனுக்கு எப்போதும்போல பூஜை செய்து, அந்த தண்ணீரில் இருக்கும் மோதிரத்தை எடுத்து பெருமாள் பாதங்களில் வைத்துவிட்டு, பின்பு எடுத்து உங்களது சுண்டு விரலில் போட்டுக் கொண்டால் நிச்சயம் நீங்கள் தொடங்கும் எந்த ஒரு காரியமாக இருந்தாலும் வெற்றியில் முடியும். (அதாவது ஞாயிற்றுக்கிழமை இந்த பரிகாரத்தை நீங்கள் செய்வதாக இருந்தால் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் உங்கள் கைகளில் அறிந்திருப்பீர்கள். திங்கட்கிழமை முழுவதும் தண்ணீரில் இருக்கும். செவ்வாய்க்கிழமை எடுத்து மோதிரத்தை கையில் போட்டுக் கொள்ளுங்கள்.)

ஏனென்றால் இந்த வெள்ளி மோதிரத்திற்கு பதட்டத்தை குறைக்கும் தன்மை அதிகமாக இருக்கிறது. பதறாத காரியம் சிதறாது என்பதற்காகவும் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஏதாவது ஒரு புது முயற்சியில் ஈடுபடும் போது அந்த முயற்சியானது வெற்றி அடையுமா! என்ற பதற்றமும், பயமும் கொண்ட ஒரு சூழ்நிலை நம் மனதில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அந்த பதற்றமான சூழ்நிலையை அமைதிப்படுத்தும் சக்தியானது இந்த வெள்ளி மோதிரத்திற்கு அதிகமாக உள்ளது என்பதை இந்த பரிகாரத்தை செய்து, வெள்ளி மோதிரத்தை அணிவதன் மூலம் நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

malligai poo

நீங்கள் அதிகமாக கோபப்படுபவர்களாக இருந்தால், உங்களது வீட்டில் ஒரு சிறிய சந்தனக்கட்டையை வாங்கி வைத்துக்கொண்டு, ஒரு நாள் இரவு முழுவதும் அதன் மேல் நீங்கள் அணிந்து கொள்ளும் வெள்ளி மோதிரத்தை வைத்து விட்டு, மறுநாள் காலை எழுந்து அந்த மோதிரத்தை அணிந்து கொண்டால் உங்களது கோப குணம் தானாகவே குறைந்து வருவதை நீங்கள் உணரலாம். தினம்தோறும் நீங்கள் தூங்கும் போது உங்கள் வெள்ளி மோதிரத்தை கழட்டி அந்த சந்தனக் கட்டையில் வைத்து விடுங்கள். காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு திரும்பவும் போட்டுக் கொள்ளுங்கள். இதை வழக்கமாக வைத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். சந்தன கட்டையின் மீது இருந்து எடுக்கப்படும் மோதிரத்தை எந்த விரலில் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்களது வருமானம் இரட்டிப்பாக வெள்ளி மோதிர ரகசியம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have. Velli mothiram palangal. Velli mothiram tamil. Velli mothiram payangal. Kobam kuraiya enna seiya vendum.