செல்வாதிபதி குபேரன் ஒரு திருடனா? அவர் பணக்காரனானது எப்படி? இந்த கதை தெரிஞ்சா இனிமே இப்படி செய்ய மாட்டீங்க!

kuberan
- Advertisement -

இவ்வுலகில் இருக்கும் அத்தனை செல்வங்களுக்கும் உரியவள் மகாலட்சுமி என்றாலும் அதை பாதுகாக்கும் பொறுப்பாளர் குபேரன் ஆவார். இந்த குபேரன் கடவுளுக்கே கடன் கொடுக்கும் அளவிற்கு செல்வந்தராக இருக்கின்றார். இவரிடம் பெற்ற கடனை அடைக்கத்தான் திருப்பதியில் திருவேங்கடன் வீற்றிருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். இவ்வளவு செல்வங்களுக்கு அதிபதியாக இவர் எப்படி பொறுப்பேற்றார்? இவர் ஒரு திருடன் என்பது உண்மையா? பொய்யா? என்பது போன்ற கேள்விகளுக்கான விடையை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த ஆன்மீக குறிப்பு தகவல்களை நோக்கி பயணியுங்கள்.

குபேரன் முன்னொரு காலத்தில் மாபெரும் திருடனாக இருந்திருக்கிறார். வறுமையினால் வேறு வழி இல்லாமல் திருட ஆரம்பித்த இவர் கோவில்களில் மட்டும் திருடுவதில்லை. இவர் ஒரு நாள் சிவன் கோவிலுக்கு சென்ற போது அந்த கோவிலில் ஏராளமான நகைகளும், செல்வங்களும் இருப்பதை காண்கிறார். அந்த சமயத்தில் காற்று பலமாக வீசவே கோவிலில் ஏற்றப்பட்டு இருக்கும் அத்தனை விளக்குகளும் அணைந்து விடுகிறது.

- Advertisement -

சிவனின் அருகில் இருக்கும் தீபமும் அணையவே இருள் சூழ்ந்து விடுகிறது. சிவன் இருளில் இருப்பதை பார்த்துக் கொண்டிருந்த குபேரன் மீண்டும் விளக்குகளை ஏற்ற முயற்சிக்கிறார் ஆனால் பலத்த காற்று மறுபடியும் வீசி அதை அணைத்து அவருடைய முயற்சியை வீணாக்கி விடுகிறது. இப்படி தொடர்ந்து அவர் விடாமுயற்சியுடன் தீபத்தை ஏற்ற விளைகிறார்.

இதைக் கண்ட ஈசன் மனம் மகிழ்ந்து அவருக்கு அருள் புரிகிறார். நீ அடுத்த பிறவியில் செல்வத்தின் அதிபதியாக இருக்க கடவாய் என்று ஆசீர்வாதம் கொடுத்து மறைகிறார். இறைவனுக்கு தெரியாமல் செய்யும் சிறு கைங்கரியம் கூட மிகப் பெரிய வரத்தை கொடுக்கும் என்பதற்கு இந்த கதை ஒரு சிறந்த உதாரணமாக இருக்கின்றது.

- Advertisement -

இது மட்டும் அல்லாமல் சிவபுராணங்களில் ஏராளமான கதைகள் இறைவனுக்கு பணி செய்கிறோம் என்று தெரியாமலேயே செய்த பணிகளுக்கு கூட வரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. புலிக்கு பயந்து காட்டில் ஓடிய வேடன் ஒருவன் மரத்தின் மீது சென்று அமர்ந்து கொள்கிறான். புலி மரத்தின் மீது ஏற முடியாமல் கீழேயே அவனை உருமி கொண்டு பயமுறுத்தி காத்துக் கொண்டிருக்கிறது. அன்றைய நாள் சிவராத்திரி.

இதையும் படிக்கலாமே:
குவியல் குவியலாக, தங்கமும் பணமும் சேர, குங்குமச்சிமிழில் இந்த பொருளை போட்டு வையுங்க போதும்.

மரத்தின் கீழே சிவலிங்கம் ஒன்று இலைகளால் மூடப்பட்டு இருந்தது. இதை அறியாத அந்த வேடன் புலிக்கு பயந்து இரவு முழுவதும் கண் விழிக்க வேண்டும் என்பதற்காக மரத்தில் இருந்து ஒவ்வொரு இலையாக பறித்து சிவலிங்கத்தின் மீது அறியாமல் போட்டுக் கொண்டிருக்கிறான். அந்த மரம் வில்வ மரமும் கூட! சிவராத்திரி அன்று வில்வ இலைகளை பறித்து சிவனுக்கு தன்னையும் அறியாமல் இரவு முழுவதும் உண்ணா விரதம் இருந்து அர்ச்சனை செய்த பலன் அவனுக்கு உடனடியாக கிடைத்தது. அதன் வரமாக ஒரு நாட்டுக்கு ராஜாவாக மாறினான். இது போல இறைவன் மீது நாம் அறியாமல் கூட அன்பு வைத்து தொண்டுகள் செய்து வந்தால் நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் ஏராளம்! அப்படி இருக்க நாம் மனதார மனம் உவந்து இறைவனை ஏற்று செய்யும் கைங்கரியங்களுக்கு எவ்வளவு பலன்கள் கிடைக்கும்? என்பதை சிந்தியுங்கள்!

- Advertisement -