அகத்தியர் அருளிய சக்தி வாய்ந்த முருகன் மந்திரம்

Agathiyar-Murugan-Mantra

சித்தர்கள் பலர் முருகப்பெருமானை வழிபடுவது நாம் அறிந்ததே. அதிலும் தமிழ் மொழிக்கான இலக்கணத்தை வகுத்த அகத்திய மாமுனிவர், தமிழ் கடவுள் முருகன் மீதும் பெரும் பக்தி கொண்டிருந்தார். மானிட நலனுக்காக பல மந்திரங்களை அகத்தியர் தந்துள்ளார். அந்த வகையில் நமது சொல்லும் செயலும் தெளிவாக இருக்க அகத்தியர் அருளிய முருகன் மந்திரம் பற்றி பார்ப்போம் வாருங்கள்.

murugan

முருகன் மந்திரம்:

ஓம் முருகா,குரு முருகா,அருள் முருகா,ஆனந்த முருகா
சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாக்ஷ்ரனே
என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க
ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வந்தால் குரு பகவானின் அருள் கிடைக்கும், செவ்வாய் தோஷம் விலகும். அதோடு நமது நாக்கில் இருந்து வரும் வார்த்தைகள் அனைத்தும் சத்திய வாக்காக இருக்கும். நமது எண்ணமும் செயலும் நன்னெறிகளை நோக்கி இருக்கும். இதன் காரணமாக சமுதாயத்தில் நமக்கான ஒரு அறிய இடம் கிடைக்கும். நமது நிலையானது படிப்படியாக உயரும். நம் மீது மக்களுக்கு மரியாதை ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக உதவும் துளசி மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் குறித்து அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
The Great Siddha Agathiyar had written many mantra’s. In that we have given Lord Murugan Manthiram in Tamil. If one chant this mantra his thoughts will be good and his speech will be good.