வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக உதவும் துளசி மந்திரம்

mahalakshmi

திருமாலை எந்நேரமும் போற்றி அவர் நாமத்தை துதிக்கொண்டிருப்பவள் துளசி. துளசி மாலை இல்லாத பெருமாள் கோவிலை நாம் எங்குமே பார்க்க இயலாது. அந்த அளவிற்கு பெருமாளின் நம்பிக்கைக்கு பாத்திரமானவள் துளசி. துளசியில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது நம்பிக்கை. நமது வீடுகளில் துளசி மாடம் அமைத்து அதற்கு முறையாக பூஜை செய்து வழிபடுவதன் பலனாக நமது வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்று ஆன்றோர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் துளசி பூஜைக்குரிய துளசி மந்திரம் இதோ.

mahalakshmi with gold

துளசி மந்திரம் :
நமஸ் துளசி கல்யாணி, நமோ விஷ்ணுப்ரியே சுபே
நமோ மோக்ஷப்ரதே தேவி: ஸம்பத் ப்ரதாயிகே.

துளசி பூஜை செய்யும் சமயத்தில் இந்த மந்திரத்தை 9 முறை கூறி துளசி தேவியையும், லட்சுமி தேவியையும், மஹாவிஷ்ணுவையும் வழிபடலாம். இந்த மூலம் நமக்கு மூவரின் அருளும் ஒருசேர கிடைக்கும். துளசியில் பல வகை உண்டு இதில் பச்சை இல்லை துளசியை நாம் ஸ்ரீதுளசி என்கிறோம் இதில் ஸ்ரீ என்பது லட்சுமியை குறிக்கிறது. இந்த வகை துளசியை நாம் அதிஷ்ட துளசி என்கிறோம். அதே போல கரும்பச்சை இலைகளை கொண்ட துளசியை நாம் கிருஷ்ணர் துளசி என்கிறோம். இந்த வகை துளசி கிருஷ்ணர் பூஜைக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இப்படி எவ்வகை துளசியாயினும் அதற்க்கு ஒரு தனி சிறப்பு உண்டும். ஆகையால் துளசியை பூஜித்து நாம் நலன்களை பெறுவோம்.

இதையும் படிக்கலாமே:
பிரச்சனைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேற உதவும் மந்திரம்

English Overview:
Here we describe about Thulasi mantra in Tamil. Hindus believe that Goddess Lakshmi is there in Tulasi. So if one pray Tulasi then he will be become wealthier. Tulasi is very important in God Perumal pooja too.