லோ சுகர் அறிகுறிகள்

low-sugar-symptoms-1
- Advertisement -

மனித உடலில் ஓடும் ரத்தத்தில் உப்பு மற்றும் சர்க்கரை இரண்டு தன்மைகளும் கலந்து இருக்கின்றன. இதில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இந்த நீரிழிவு குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் 70 மில்லிகிராம் அளவிற்கு கீழாக ரத்த சர்க்கரையின் அளவு குறைந்தால், அது குறைந்தளவு சர்க்கரை நோயாக(லோ சுகர்) கருதப்படுகிறது.

Sugar test

சரியான சக்கரை அளவு:
சாப்பாட்டிற்கு முன்பு(வெறும் வயிற்றில்) – 80 முதல் 100 மி.கி./டெ.லி. வரை
உணவு உண்ட இரண்டு மணி நேரத்திற்கு பிறகு -111 முதல் 140 மி.கி./டெ.லி வரை

- Advertisement -

மேல் கூறிய அளவில் இருந்து சக்கரை கூடுதலாகவோ குறைவாகவோ இருக்க கூடாது. அப்படி இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம். இப்போது சக்கரையின் அளவு குறைந்திருந்தால் நமது உடலில் ஏற்படும் அறிகுறிகள் சிலவற்றை பார்ப்போம்.

லோ சுகர் அறிகுறிகள்

தலைச்சுற்றல்

- Advertisement -

ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் போது பலருக்கும் தலை சுற்றல் ஏற்படும். சிலருக்கு லேசான தலைவலி கூட இருக்கும். மயங்கி விழக்கூடிய சூழலும் ஏற்படும். லோ சுகர் அறிகுறிகளில் இதுவும் ஒன்று.

thalaivali

வியர்வை

- Advertisement -

குறைந்த அளவு சர்க்கரை இருப்பவர்களுக்கு உடல் வெப்பமடையா நிலையிலும் வியர்வை அதிகம் வெளியேறும். இதன் காரணமாக உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு பாதிப்பு சற்று கடுமையாகலாம்.

கைகால் மற்றும் உடல்நடுக்கம்

உடலின் சீரான இயக்கத்திற்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சரியான அளவில் இருக்க வேண்டும் அது ரத்தத்தில் குறையும் நேரத்தில் பலருக்கும் கைகால் மற்றும் உடல் குளிரால் பாதிக்கப்பட்டது போல் நடுக்கம் ஏற்படும்.

Narambu vali treatment

உதடு மற்றும் நாக்கு

ரத்த சர்க்கரை அளவு குறையும் போது உதடுகள் மற்றும் நாக்கு உலர்ந்து போய்விடும் நிலை ஏற்படுகிறது.அந்த உறுப்புகளில் சுரணையற்ற தன்மை ஏற்படும்.

உடல் சோர்வு இந்த

குறைந்த சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் உடல் சோர்வை அடைவர். இவர்கள் எந்த ஒரு செயலையும் அதிக நேரம் செய்ய முடியாது.

Pregnancy symptoms

மனக்குழப்பம்

இப்பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மனம் ஒரு குழப்ப நிலையில் இருக்கும். மனதில் எனென்னமோ எண்ணங்கள் தோன்றும். சிலருக்கு தூக்கமின்மையும் ஏற்படும்.

பசி

ரத்தத்தில் சர்க்கரை அளவு கடுமையாக குறைந்தவர்களுக்கு அளவுக்கதிகமான பசி இருக்கும். அவ்வப்போது எதையாவது உண்ண வேண்டும் என விரும்புவார்கள்.

food

வயிற்று கோளாறுகள்

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் போது சிலருக்கு வயிறு புரட்டுவது போன்ற உணர்வு அதிகம் ஏற்படும். ஒரு சிலர் வாந்தி எடுக்கக்கூடிய நிலையையும் உண்டாக்கும்.

கவனமின்மை

இப்பிரச்சனையால் அவதியுறும் நபர்களில் பலருக்கு தாங்கள் செய்யும் செயல்களில் அதிக ஈடுபாடு இல்லாமல், கவனமில்லாமல் செயலாற்ற கூடிய நிலை ஏற்படும். சிலருக்கு பேச்சு குழறும்.

இதையும் படிக்கலாமே:
சக்கரை நோயை கட்டுப்படுத்தும் நாட்டு சக்கரை நன்மைகள்

இது போன்ற மேலும் பல தமிழ் மருத்துவம் சார்ந்த குறிப்புகள் பலவற்றை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

English Overview:
Here we have low sugar symptoms in Tamil. It is also called as low sugar arikurigal in Tamil

- Advertisement -