ராகு-கேதுவை கடந்த சூரியன். இனி அதிர்ஷ்டம் பெறவிருக்கும் டாப் 5 ராசிகள் என்னென்ன?

astro-sign

சார்வரி வருடத்தின் முதல் சூரிய கிரகணம் நேற்று நடைபெற்றது. இதுவரை ராகு-கேதுவின் ஆதிக்கத்தில் இருந்த சூரிய பகவான் பல இன்னல்களை உலக மக்களுக்கு கொடுத்து வந்தார். நேற்று நடைபெற்ற அதிசய சூரிய கிரகணம் இந்தப் பிரச்சினைகளுக்கு முடிவு தரும் என்று ஜோதிடர்களால் நம்பப்பட்டு வருகிறது. இந்த சூரிய கிரகணத்தால் ராகு கேதுவின் பிடியில் இருந்து சூரிய பகவான் மீண்டு வந்திருக்கிறார். எனவே அவரின் முழு பலத்தையும் இனி காட்டப் போகிறார். இதனால் பலன் அடைய போகும் டாப் 5 ராசிகளைப் பற்றி தான் இப்பதிவில் இனி நாம் காண இருக்கிறோம்.

Mesham Rasi
அதில் முதலாவதாக வருவது மேஷ ராசி ஆகும். மேஷ ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து படிப்படியான முன்னேற்றம் நிச்சயம் உண்டு. அவர்களின் தன்னம்பிக்கையும், தைரியமும் இனி வரும் காலங்களில் அதிகரிக்கக்கூடும். கஷ்டமே வாழ்க்கையாக இருந்த உங்களுக்கு இனி ஓரளவு நிம்மதி பெருமூச்சு விடுவதற்கான வாய்ப்புகள் அமையும். மேஷ ராசிக்காரர்களாகிய உங்களுக்கு உங்களுடைய சகோதரர்கள் மூலம் மிகப்பெரிய யோகங்கள் ஏற்படக்கூடும். அவர்களுடன் ஒற்றுமையுடன் இருப்பதன் மூலம் நல்ல பலன்களை நீங்கள் அடையப் போகிறீர்கள்.

simmam
இரண்டாவதாக சிம்ம ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது. சிம்ம ராசிக்காரர்களுக்கு இனி வரும் நாட்களில் சுபகாரியங்கள் கட்டாயம் நடைபெறும். இதுவரை தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமணம் போன்ற நல்ல காரியங்கள் இனி தடையின்றி அமோகமாக நடைபெறும். குழந்தை இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை வரம் கிடைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ராசிக்காரர்களுக்கு யோகமான காலம் கூடிய விரைவில் மாற்றம் அடைய இருக்கிறது என்றே கூறலாம். தொழில் மற்றும் வியாபார விஷயங்களில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை மாறி எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

Kanni Rasi
மூன்றாவதாக கன்னி ராசிக்காரர்களுக்கு யோகம் உண்டாகப் போகிறது. மேஷம் மற்றும் சிம்ம ராசிக்காரர்கள் போன்றே உங்களுக்கும் இனி வரும் நாட்களில் அதிர்ஷ்ட மழை பொழிய இருக்கிறது. இதுவரை வாழ்வில் நீங்கள் அனுபவித்து வந்த துன்பநிலை நிச்சயமாக மாற இருக்கிறது. என்னடா வாழ்க்கை என்று வெறுத்துப் போயிருந்த உங்களுக்கு! இது அல்லவா வாழ்க்கை என்கிற நிலை, அதி விரைவில் வர இருக்கிறது. எதிர்பாராத திருப்பங்கள் உங்கள் வாழ்வில் விரைவில் நடக்க இருக்கிறது. குடும்ப உறவுகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஒற்றுமை பலப்படும்.

Thulam Rasi
நான்காவதாக துலாம் ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெற போகிறார்கள். துலாம் ராசிக்காரர்கள் மற்ற ராசிக்காரர்களை விட அதிர்ஷ்டசாலிகள் என்றே கூறலாம். அவர்களது வாழ்க்கையில் இனி வரும் காலம் வசந்த காலமாக அமைய இருக்கிறது. மனதளவில் மிகவும் சோர்ந்து போயிருக்கும் உங்களுக்கு புதிய உற்சாகமும், தெம்பும் இனி கிடைக்கும். எந்த வழியில் செல்வது என்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் உங்களுக்கு புதிய வெளிச்சம் பிறக்க இருக்கிறது. நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சரியாக இருக்கிறதா? என்ற சந்தேகம் உங்களுக்கு இனி தேவை இல்லை. நீங்கள் நினைத்ததெல்லாம் நிச்சயம் நடைபெறும்.

Meenam Rasi
டாப் 5 ராசிகளில் இறுதியாக இருப்பது மீன ராசிக்காரர்கள் தான். மீன ராசிக்காரர்களுக்கு அப்பாடா! என்று சொல்லுமளவிற்கு மிகப்பெரிய பிரச்சினைகளிலிருந்து விடிவு காலம் பிறக்க இருக்கிறது. தொழில் மற்றும் வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகளும், இடமாற்றங்களும் எதிர்பார்த்தபடி நிச்சயம் கிடைக்கும். உங்களுடைய விடாமுயற்சிக்கு உரிய பலன்களை இனிவரும் காலங்களில் இருமடங்காக அனுபவிக்கப் போகிறீர்கள். நாம் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டது வீணாகி விட்டதே! என்ற கவலையில் இருக்கும் உங்களுக்கு அந்தக் கவலை இனி தேவை இல்லை என்கிறது கிரகநிலை. எனவே கவலைகளை தூக்கி எறிந்து விட்டு உற்சாகமாக உங்களது பயணத்தை தொடருங்கள்.

- Advertisement -

astrology

இந்த 5 ராசிக்காரர்கள் மட்டும் இன்றி மற்ற அனைத்து ராசிக்காரர்களும் ஓரளவு நல்ல பலன்களை இனி வரும் காலங்களில் பெற இருக்கிறீர்கள். ஒரே அடியாக நிலைமை தலைகீழாக மாற போவதில்லை. ஆனால் நிச்சயம் இது வரை இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக நீங்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இதையும் படிக்கலாமே
சென்ற கிரகணத்தில் வேகமெடுக்க தொடங்கிய ‘கொரோனா’ நாளைய கிரகணத்தில் குறையும்! என்று அடித்து கூறுகிறார்கள் ஜோதிடர்கள். என்ன காரணம் தெரியுமா?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Surya grahan rasi palan in Tamil. Surya grahan 2020 21 june. Surya grahan 2020 Tamil. Surya grahan 2020 june 21st. Surya grahan june 2020 astrology.