- Advertisement -
Homeஜோதிடம்வாஸ்து சாஸ்திரம் | Vasthu sasthram Tamilஅதிர்ஷ்டம் தரும் குபேர செடி

அதிர்ஷ்டம் தரும் குபேர செடி

- Advertisement -

வீட்டில் வளர்க்கக் கூடிய சில செடிகளால் அதிர்ஷ்டம் வரக் கூடும் என்பது சாஸ்திரங்கள் மூலம் நாம் நம்பும் நம்பிக்கையாகும். நம் நாட்டில் மட்டும் அல்லாமல் உலகில் பரவலாக பல்வேறு நாடுகளிலும் இந்த வகையான நம்பிக்கைகள் உண்டு. குபேரனுக்கு மிகவும் பிடித்த இந்த செடி வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டம் பல மடங்கு அதிகரிக்கும். அப்படியான ஒரு செடியை பற்றிய வாஸ்து சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

வீட்டிற்குள் வாஸ்து சாஸ்திரத்தின்படி சில செடிகளை வளர்ப்பதன் மூலம் நேர்மறையான ஆற்றல்களும், அதிர்ஷ்டமும் பெருகும். பராமரிப்பு குறைவாக இருக்கக் கூடிய செடி வகைகளை நாம் தேர்ந்தெடுத்து வாங்குவதன் மூலம் அதிர்ஷ்டமும், பாசிட்டிவ் வைப்ரேஷனும் நம் வீட்டில் பெருகும். அப்படியான ஒரு செடி ஜேட் {jade plant} என்னும் செடியாகும். இது குபேரனுக்கு உகந்த செடியாகும்.

- Advertisement -

இந்த செடியை வடக்கு மற்றும் தென்மேற்கு திசையில் நடுவது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தையும், யோகத்தையும் கொடுக்கும். பல வகையான நன்மைகளை அள்ளித் தரக் கூடிய இந்த செடியை பராமரிப்பதும் சுலபம் தான். இந்த செடிக்கு அதிக அளவு தண்ணீர் ஊற்றக் கூடாது. மண் வறண்டு போகாமல் லேசான ஈரப்பதத்துடன் இருந்தால் போதுமானது. இந்தச் செடி அடர்த்தியான இலைகளுடன், வெள்ளை நிற பூக்களை கொடுக்கும்.

குபேர செடி என்பதால் வாஸ்து ரீதியாக இது அதிர்ஷ்டத்தையும், பண வரவையும் கொடுக்கக் கூடியதாக நம்பப்படுகிறது. வீட்டில் குறிப்பிட்ட திசையில் இதை வைத்து வளர்ப்பதால் திருஷ்டிகள் எதுவும் அண்டாது. அது மட்டும் அல்லாமல் வாஸ்து ரீதியான பசுமையான சில பச்சை பசேலன இருக்கும் செடிகளை மற்றும் உயரம் குறைந்த செடிகளை வீட்டில் வளர்ப்பதன் மூலம் வாஸ்து பிரச்சனைகளையும் துரத்தி அடிக்க முடியும். வாஸ்து குறைபாடுகள் இருப்பதால் வீட்டை மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. சிறு சிறு வாஸ்து குறைபாடுகளையும் சரி செய்யக்கூடியது செடிகள்.

- Advertisement -

பசுமையான செடிகள் வீட்டிற்குள்ளும் வீட்டை சுற்றியும் வளர்ப்பதால் வாஸ்து ரீதியான குறைபாடுகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. வாஸ்து ரீதியான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் இது போன்ற விஷயங்களை செய்து பார்க்கலாம். போன்சாய் மரங்கள், பராமரிப்பு குறைந்த குட்டை மரங்கள், காற்றை கிரகித்து நல்ல ஆக்சிஜனை கொடுக்கக் கூடிய இவ்வகையான செடிகளை வீட்டில் வளர்ப்பதன் மூலம் நெகட்டிவ் வைப்ரேஷன் நீங்கி வீட்டில் எப்பொழுதும் ஒரு நல்ல அதிர்வலைகள் உருவாகும். காலையில் எழுந்திருக்கும் பொழுதே பசுமையான இந்த நிறங்களையும், மரங்களையும் பார்க்கும் பொழுது மனதிற்கு உற்சாகம் பிறக்கும், இதனால் சோம்பல் அகலும், சுறுசுறுப்பு ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
சுவாமி படம் போட்ட பழைய காலண்டர் அட்டையை என்ன செய்வது?

ஜேட் செடி வீட்டில் இருப்பதால் உங்களை துரதிர்ஷ்டம் துரத்திக் கொண்டிருந்தாலும், அது அதிர்ஷ்டமாக மாறும் என்பது இதில் இருக்கும் சூட்சமமான ரகசியமாகும். குபேர செடியாகிய இந்த செடியை காசு கொடுத்து செடியாக வாங்கி வராமல், நீங்களே தொட்டி வாங்கி அதில் நட்டு வளர்த்து வந்தால் இன்னும் அதிர்ஷ்டம் பெருகும். பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கக்கூடிய இந்த செடி வாங்கும் பொழுது வியாழன் கிழமையாக பார்த்து வாங்குங்கள். வியாழன் குபேரனுக்கு உகந்தது.

சற்று முன்