- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசுவாமி படம் போட்ட பழைய காலண்டர் அட்டையை என்ன செய்வது?

சுவாமி படம் போட்ட பழைய காலண்டர் அட்டையை என்ன செய்வது?

- Advertisement -

புது வருடம் பிறந்து விட்டது. கடந்த 2024 ஆம் வருடத்தில் உங்களுக்கு எவ்வளவு பெரிய கஷ்டங்கள் இருந்தாலும், எவ்வளவு பெரிய துன்பங்கள் வந்திருந்தாலும் அதையெல்லாம் கடந்து, புது வருடத்தில் காலடி எடுத்து வைத்து விட்டோம். இந்த புது வருடம் அனைவருக்கும் நல்லதை மட்டுமே கொடுக்கும். ஆக பழையதை எல்லாம் கழித்து விட்டு, புதிய வாழ்க்கையை துவங்கி இருக்கின்றோம்.

இந்த புது வருட துவக்கத்தில் நிறைய புது காலண்டர் வீட்டிற்கு வந்திருக்கும். பழைய சாமி காலண்டரை வீட்டில் வைக்கலாமா, பழைய காலண்டருக்கு மேல் புது காலண்டரை மாட்டி வைக்கலாமா, சரி பழைய காலண்டரை அகற்றி விட்டால், சாமி படம் போட்ட காலண்டரை என்னதான் செய்வது, இப்படிப்பட்ட கேள்விகள் உங்கள் மனதில் இருந்தால் அதற்கான பதில் தெளிவாக இதோ, இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

சாமி படம் போட்ட பழைய காலண்டர் அட்டைகளை என்ன செய்வது?

பழைய காலண்டர் அட்டைகள் பின்னாடி இருக்க, அதன் மேலே புது காலண்டர் அட்டைகளை மாட்டவே கூடாது. பிரச்சனைகள் ஆரம்பம் ஆவதே இந்த இடத்தில் இருந்துதான். எதனால் கஷ்டம் என்றே தெரியவில்லை, ஆனால் கஷ்டம், குடும்பத்தில் வறுமை வறுமை வறுமை.

இந்த பிரச்சனையிலிருந்து சீக்கிரம் விடுபட வேண்டும் என்றால், முதலில் பழைய காலண்டரை தூக்கி வெளியே போடுங்கள். சுவாமி படம் போட்டு இருந்தால் அந்த காலண்டரை வெளியில் போட கட்டாயம் நமக்கு மனசு வராது. கோவிலுக்கு எடுத்துச் சென்று மரத்தடியில் வைத்து விட்டு வருவோம். அது சரியா. முற்றிலும் தவறு.

- Advertisement -

நம் வீட்டிற்கு தேவை இல்லாத பொருட்களை, கோவிலுக்கு கொண்டு போய் வைத்து, அந்த கோவில் இடத்தை அசுத்தம் செய்துவிட்டு நாம் வரவே கூடாது. அது மேலும் பாவத்தை சேர்க்க கூடிய செயல். பிறகு இந்த காலண்டரை என்னதான் செய்வது.

ஓடும் தண்ணீரில் விடலாம் என்று சொல்லுவார்கள். இன்று ஓடும் தண்ணீரை தேடி நாம் எங்கே செல்வது. அதேபோல இந்த கலர் பேப்பர்கள், பெயிண்டிங் செய்து வைத்திருக்கும் காலண்டரை எல்லாம் ஓடும் தண்ணீரில் போடுவதன் மூலம் தண்ணீரில் வாழக்கூடிய உயிரினங்களுக்கு சில பல பிரச்சனைகள் வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆக வீட்டில் தேவையில்லாத பூஜை பொருட்களை கொண்டு போய் ஓடும் தண்ணீரிலும் இனிமேல் விடாதீர்கள் அதுவும் பாவம் தான்.

- Advertisement -

ஒரு பக்கெட் நிறைய தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். பேப்பரிலேயே சுவாமி படங்கள் இருந்தால், அந்த காலண்டர் பேப்பரை எல்லாம் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்தால், ஊறி பேப்பர் கரைய துவங்கும். அப்படியே அந்த பேப்பரை எல்லாம் தண்ணீரில் கரைத்து மண்பாங்கான இடத்தில் கொட்டி விடலாம். டெய்லி காலண்டரில் அட்டையில் சுவாமி படம் இருக்கும்.

அந்த அட்டைக்கு மேலே ஸ்டிக்கர் போல ஒட்டி தான் சுவாமி படங்களை தயார் செய்திருப்பார்கள். அந்த ஸ்டிக்கரை மட்டும் கிழித்து தண்ணீரில் ஊறவைத்து கரைத்து கொட்டி விடலாம். அந்த அட்டையை குப்பைகளில் நீங்கள் போட்டுக் கொள்ளலாம். இதுபோல செய்தால் எந்த பிரச்சனையும் இல்லை. மிக மிக எளிமையான முறையில் மேல் சொன்ன முறைப்படி சுவாமி படங்கள் போட்டியிருக்கும் காலண்டரை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தி விடுங்கள்.

வீடு முழுவதும் காலண்டரை மாட்டி வைப்பதும் தவறு. தேவைக்கு ஏற்ப காலண்டரை மாட்டி பயன்படுத்துங்கள். இதுபோக சிலபேர் அழகாக இருக்கும் சுவாமி கேலண்டரை எல்லாம் பூஜை அறையில் மாட்டி, பூஜை செய்ய துவங்குவார்கள். அது ரொம்ப ரொம்ப தப்பு. பூஜை அறையில் பூஜை படங்களுக்கு மத்தியில் காலண்டரையும் வைத்து பூஜை செய்ய வேண்டாம் என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே: திருவோண விரதம் பெருமாள் வழிபாடு 2025

கொஞ்ச நேரம் ஒதுக்கி பழைய காலண்டரை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தி விடுங்கள். பழைய காலண்டர் வீட்டில் இருக்க உங்கள் வாழ்நாளில் இருக்கும் பழைய பிரச்சனைகளும் உங்களுடனே தான் இருக்கும். உங்களை விட்டு நீங்காமல் உங்களைப் பிரச்சனைகள் தொற்றிக் கொள்ள இதுவும் ஒரு காரணமாக சொல்லப்பட்டுள்ளது. முடிந்தவரை போகிப் பண்டிகை அன்றாவது இந்த வேலையை செய்து விடுங்கள் நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம்/a> சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்