உங்கள் ராசிக்கு எந்த செல்ல பிராணியை வளர்த்தால் அதிர்ஷ்டம் மேலும் பெருகும்னு நீங்களும் தெரிஞ்சிக்கணுமா?

love-birds

செல்லப்பிராணிகள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலமாகி விடுவார்கள். ஒரு சிலரைத்தவிர செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் பெரும்பாலோனோருக்கு ஆர்வமும், விருப்பமும் அதிகமாக இருக்கும். அதிலும் நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளை வளர்ப்பதில் அதிக அளவு ஆர்வம் காட்டுகின்றனர் என்றே கூறலாம். அது மட்டுமில்லாமல் ‘லவ் பேர்ட்ஸ்’ எனப்படும் கிளி வகைகளையும் அதிக அளவில் வளர்ப்பதை விரும்புகின்றனர். இதுபோன்ற வளர்ப்பு பிராணிகளை வீட்டில் வளர்ப்பதால் நம்மிடம் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும் என்பது ஆன்மீக ரீதியாக கண்டுபிடிக்கபட்ட உண்மை. எந்த ராசிக்காரர்கள்? எந்த வளர்ப்பு பிராணியை வளர்த்தால்! மேலும் அதிர்ஷ்டம் பெருகும் என்பதை இப்பதிவில் காணலாம்.

cat

வளர்ப்பு பிராணிகளுக்கு வீட்டில் இருக்கும் துர் சக்தியை கண்டுபிடிக்கும் ஆற்றல் உண்டு. வீட்டில் இருப்பவர்களை தீய சக்திகளிடமிருந்து முதலில் பாதுகாப்பது செல்லப்பிராணிகள் தான். வீட்டில் தீய சக்திகள் இருந்தால், நன்றாக ஆரோக்கியமாக இருக்கும் உங்கள் வீட்டு செல்லப் பிராணி கூட திடீரென இறந்துவிடும். இப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்திருந்தால் செல்லப்பிராணி உங்களை மிகப் பெரிய விஷயத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறது என்று அர்த்தம்.

பறவைகளை வளர்ப்பதால் அதிர்ஷ்டம் வரும் என்று கூறுவார்கள். கிளி, புறா, கோழி போன்ற பறவைகளை வீட்டில் வளர்ப்பதால் வீடு சுபிட்சமாக இருக்கும் என்றும், உங்களுக்கு வர இருக்கும் அதிர்ஷ்டத்தை தடுக்காமல் பாதுகாக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. பறவைகளை நேசிப்பவர்கள் அவற்றை துன்புறுத்துவதில்லை. இவற்றை நீங்கள் வளர்க்க விரும்பினால் உங்கள் வீட்டை சுற்றி மரங்களையும் வளர்க்க வேண்டும். புதனின் ஆதிக்கம் பெற்ற ராசிக்காரர்கள் பறவைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவர் என்று கூறப்படுகிறது. உங்கள் வீட்டில் பறவைகளை கூண்டில் அல்லாமல் வெளியில் வைத்து வளர்க்கிறீர்கள் என்றால் நீங்கள் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலி என்றே கூறலாம். உங்களிடம் நல்ல சிந்தனைகளும், செல்வ வளமும் பெருகியிருக்கும்.

dove

குரு மற்றும் சனி பகவானின் ஆதிக்கம் பெற்ற ராசிக்காரர்கள் நாய்கள் வளர்ப்பதால் நன்மைகளைப் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. நாய்கள் வளர்ப்பதால் உங்களிடம் சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கும். நாய்கள் வளர்ப்பவர்களுக்கு கோபம் அதிகமாக வராது. அவர்களிடம் அதிக அன்பும், அக்கறையும், வெளிப்படையான பேச்சும் கட்டாயம் இருக்கும். நாயைப் பற்றி நாம் அதிகம் கூற வேண்டிய அவசியம் இல்லை. தன் எஜமானருக்காக இன்னுயிரையும் கொடுக்கும் நன்றியுள்ள ஒரு செல்லப்பிராணியாக இருப்பது அனைவரும் அறிந்ததே. உங்களால் நாய் வளர்க்க முடியவில்லை என்றால், நீங்கள் நாய் படத்தையோ அல்லது உருவத்தையோ உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளலாம். நாய், பைரவரின் அம்சமாக பார்க்கப்படுவதால் சகல யோகங்களையும் உங்களுக்கு பெற்றுத்தரும்.

- Advertisement -

மேஷம், துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்கள் சேவல் படத்தை சனி உச்சம் பெற்ற காலத்தில் வீட்டில் வைப்பதால் அதிர்ஷ்டம் உண்டாகும். முடிந்தவர்கள் சேவலை வீட்டில் வளர்க்கலாம். முடியாதவர்கள் சேவல் உருவ சிறிய சிலையை வேலை செய்யும் இடங்களிலோ, வியாபார தளங்களில் வைத்துக்கொள்ளலாம்.

seval

மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் ராசிக்காரர்கள் வீட்டில் மீன் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. மற்ற ராசிக்காரர்கள் அனைவரும் மீன் வளர்ப்பதால் அதிர்ஷ்டம் பெறலாம். மீன் என்பது மீன ராசிக்குரிய குறியீடாக இருப்பதால் இந்த ராசிக்காரர்கள் மீன் வளர்ப்பது அவ்வளவு நல்ல பலன்களை தராது.

தனுசு ராசிக்காரர்கள் காளை மாட்டை வளர்ப்பது நல்லதல்ல. ரிஷப ராசிக்குரிய குறியீடான காளைமாடு தனுசுராசிக்கு பொருந்துவதில்லை. இதுபோல் ஒவ்வொரு ராசிக்கும் குறியீடுகளின் அடிப்படையில் செல்லப்பிராணிகள் அதிர்ஷ்டத்தையும், யோகத்தையும் பெற்றுத்தரும்.

kaalai-maadu-cow

மேஷ ராசிக்காரர்கள் ஆடு, கோழி, சேவல், குதிரை போன்ற பிராணிகளை வளர்ப்பதால் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். ரிஷப ராசிக்காரர்கள் பசு, காளை, முயல் போன்ற விலங்குகளை வளர்ப்பதால் இல்லத்தில் மகிழ்ச்சியும், சுபீட்சமும், அதிர்ஷ்டமும் பெறலாம். மிதுன ராசிக்காரர்கள் லவ் பேர்ட்ஸ், கிளி, நாட்டுக்கோழி, பூனை போன்ற செல்லப்பிராணிகளை வளர்ப்பதால் முன்னேற்றமும், அதிர்ஷ்டமும் பெறலாம்.

கடக ராசிக்காரர்கள் கோழி, வான்கோழி, வாத்து போன்ற பறவைகளை வளர்ப்பதால் குடும்பத்தில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் உண்டாகும். கடக ராசிக்காரர்கள் நாய் வளர்க்க கூடாது. அதிலும் பொதுவாகவே சூரியன் பகை வீடாக இருந்தால் கடகம் மட்டுமின்றி எந்த ராசிக்காரர்களும் நாய் வளர்க்கக் கூடாது. சிம்ம ராசிக்காரர்கள் ஆடு, மாடு, நாய், கோழி போன்றவற்றை வளர்ப்பதால் அதிர்ஷ்டம் உண்டாகும்.

dog2

கன்னி ராசிக்காரர்கள் நாய், கிளி, லவ் பேர்ட்ஸ் போன்ற பறவைகளை வளர்ப்பதன் மூலம் அதிர்ஷ்டம் பெறலாம். அதிலும் குறிப்பாக லவ்பேர்ட்ஸ் வளர்ப்பதால் குடும்பத்தில் பிரச்சனை, கணவன் மனைவி பிரச்சனை தவிர்க்கலாம். துலாம் ராசிக்காரர்கள் விலங்குகளை வளர்ப்பதை விட பறவைகள் வளர்ப்பது நல்ல அதிர்ஷ்டத்தை தரும். கிளி, புறா, பஞ்சவர்ண கிளி போன்றவற்றை தாராளமாக வளர்க்கலாம். துலாம் ராசிக்காரர்களுக்கு நாய் வளர்ப்பது நல்லதல்ல. நாயால் ஏதாவது ஒரு பிரச்சினை வந்து கொண்டே இருக்கும்.

விருச்சிக ராசிக்காரர்கள் கோழி இனத்தை சேர்ந்த எந்த வகையான பறவைகளையும் வளர்க்கலாம். இது போன்ற பறவைகள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பெரும் அதிர்ஷ்டத்தை பெற்று தரும். பறவைகள் வளர்க்க முடியாதவர்கள். நீங்கள் அதிகம் புழங்கும் இடங்களில் பறவைகள் படத்தை வைத்திருப்பது அதிர்ஷ்டம் தரும். தனுசு ராசிக்காரர்களுக்கு யானை, மயில் போன்றவற்றை நீங்கள் வளர்க்கலாம். ஆனால் யானை, மயில் எல்லாம் வளர்த்தால் சிறை தண்டனை தான் கிடைக்கும் என்பதால் பசு மாடு வளர்ப்பது நல்ல அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். யானை, மயில் படமாக வைத்துக் கொள்ளலாம். இவற்றை எப்போதாவது காணும்போது நீங்கள் உங்கள் கைகளால் உணவு வாங்கி கொடுப்பது நல்லது.

elephant

மகர ராசிக்காரர்களுக்கு கழுதை, பன்றி போன்றவை அதிர்ஷ்ட பிராணிகளாக உள்ளன. ஆனால் இந்த காலத்தில் இவற்றை எல்லாம் வளர்க்க முடியாது என்பதால் நீங்கள் கழுதை படத்தை மாட்டி வைப்பது யோகத்தை பெற்று தரும். கழுதை படத்தை யார் மாற்றி வைத்தாலும் யோகம் தரும். ஆனால் மகர ராசிக்காரர்களுக்கு அது பெரும் யோகமாக அமையும்.

donkey milk

கும்ப ராசிக்காரர்கள் தினமும் காக்கைக்கு உணவு வைப்பதால் நிறைய நன்மைகளைப் பெறலாம். கும்ப ராசிக்கும் விலங்குகளை விட பறவைகளே அதிர்ஷ்டம் தரும் செல்லப்பிராணியாக இருக்கின்றன. நீங்கள் எந்த வகை பறவைகளாக இருந்தாலும் தாராளமாக வளர்க்கலாம். நாய் வளர்க்கக் கூடாது. மீன ராசிக்காரர்கள் ஆடு, மீன், கோழி வளர்த்தால் அதிர்ஷ்டம் தரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாக்கும். நேர்மறை ஆற்றல்களை ஊடுருவ செய்யும்.

இதையும் படிக்கலாமே
விதிப்படி நீங்கள் சாகும்வரை மகிழ்ச்சியாக வாழ இதை அவசியம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை கண்டுபிடித்துவிட்டால் உங்களை வெல்ல எவராலும் முடியாது.

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Chella pranigal in Tamil. Chella prani. Paravaigal valarpu. Veetu vilangugal in Tamil. Pet animals in Tamil.