உங்களிடம் கார், பைக் இருக்கா? அதில் இந்த பொருட்களை வைத்துக் கொண்டால் அதிர்ஷ்டம் பெருகுமாம் தெரியுமா?

car-pendant2
- Advertisement -

ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்ய கட்டை வண்டியில் இருந்து வானில் பறக்கும் விமானம் வரை மனிதன் கண்டுபிடித்து விட்டான். எத்தனையோ வசதி வாய்ப்புகளை கொண்டுள்ள இந்த காலகட்டத்தில் நாம் அதிகம் பயணிப்பது என்னவோ இருசக்கர வாகனம் ஆகிய பைக்கில் தான். இப்படி நம்மிடம் இருக்கும் கார் மற்றும் பைக் அல்லது ஆட்டோ என்று எதுவாக இருந்தாலும் அதில் நாம் வைத்துக் கொள்ள வேண்டிய அதிர்ஷ்ட பொருட்கள் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

car-pendant

முந்தைய காலங்களில் மிகப் பெரிய பணக்காரர்களிடம் மட்டுமே இருந்து வந்த கார் இன்று பாமர மக்கள் கூட எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் மாறிப் போய் இருப்பது வரவேற்கத்தக்க ஒன்று தான். கார், ஆட்டோ, பைக் போன்ற வாகனங்கள் எல்லோரிடமும் இன்று பரவலாக காணப்படுகிறது. இப்படி நம்மை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சுலபமாக பயணிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ள இந்த வாகனங்களை நாம் சரிவர பராமரிக்க வேண்டும்.

- Advertisement -

வாகனம் என்பது சனி பகவானின் அம்சமாக விளங்கி வருகிறது. வாகன விபத்துகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாம் என்னதான் சரியாக வண்டியை ஓட்டினாலும் நமக்கு அருகில் வருபவர்கள், நமக்கு பின்னால் வருபவர்கள் எல்லாம் நம்மைப் போலவே பார்த்து பக்குவமாக வண்டி ஓட்டுவார்கள் என்பது எந்த வகையிலும் நிச்சயம் இல்லை. எனவே வாகன ஓட்டிகள் தான் அவரவர் பாதுகாப்பை கருதி, தங்களுடைய குடும்ப நலன்களை கருதி, அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மதித்து நடந்து கொள்ள வேண்டும்.

fish-key-chain

இன்று பெரும்பாலும் போலீசுக்கு பயந்து தான் ஹெல்மெட்டை போடுகிறார்கள். யாரும் தங்களுடைய உயிர் பாதுகாப்பாக இருக்க வேண்டுமே என்கிற எண்ணம் கொண்டு போடுவதில்லை. சாலை விதிகளை மதித்து நடப்பது கூட மற்றவர்களுக்கு பயந்து தான் தவிர, நம்முடைய பாதுகாப்பை நாம் என்றுமே நினைத்து பார்ப்பது கூட இல்லை. இந்த நிலை நிச்சயம் மாற வேண்டும். தனிமனிதன் ஒவ்வொருவரும் தங்களுடைய குடும்பத்தை மனதில் நினைத்துக் கொண்டு வாகனத்தை சரியாக பராமரித்து ஓட்ட வேண்டும்.

- Advertisement -

இப்படி நம் உயிரை பாதுகாக்கும் நம்முடைய கார், பைக், ஆட்டோ போன்ற வாகனங்களில் வைக்க வேண்டிய அதிர்ஷ்ட பொருட்களைப் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக வாகனங்களில் எலுமிச்சை இருப்பது அம்மனுடைய அருளைப் பெற்றுக் கொடுக்கும். எலுமிச்சை மாலை கட்டிப் போடலாம் அல்லது ஒரே ஒரு எலுமிச்சையை நீங்கள் வண்டியில் வைத்துக் கொண்டால் கூட போதும். காய்ந்த பிறகு மாற்றிக் கொள்ளலாம். இதனால் எவ்விதமான தீய சக்திகளும் உங்கள் வாகனத்தை நெருங்காது. பைக்கில் கீ செயினில் இந்த அதிர்ஸ்ட பொருட்களை மாட்டி கொள்ளலாம்.

car-pendant1

மேலும் வாகனத்தில் விநாயகர், பெருமாள், குபேரன், ஆஞ்சநேயர், சக்தி, முருகனுடைய வேல், முருகன் போன்ற தெய்வத்தினுடைய படங்கள் அல்லது பொருட்கள் இருப்பது மிகவும் விசேஷமானது. இதில் குறிப்பாக ஆஞ்சநேயர் படம் இருப்பது ரொம்பவே நல்லது. ஆஞ்சநேயர் உருவம் பதித்த கொடியை காருக்கு முன்னால் மாட்டிக் கொள்ளலாம். ஆஞ்சநேயர் கொடி உங்களுக்கு வரவிருக்கும் ஆபத்தை தடுத்து நிறுத்தக் கூடிய அற்புத ஆற்றல் படைத்தது. மேலும் யானை, மீன், குதிரை போன்ற உருவங்கள் கொண்ட பரிசுப் பொருட்களையும் வைக்கலாம். வாகனத்தில் அவசரம் அல்லது ஆபத்தான காலகட்டங்களில் நீங்கள் வண்டி ஓட்டும் பொழுது உங்களுடன் ஒரு கொத்து வேப்பிலையை எடுத்துக் கொண்டு செல்லுங்கள்.

- Advertisement -