குழந்தைகள் விருப்பமாக சாப்பிட லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற இந்த சுவையான ஸ்டாஃப்பிங் சப்பாத்தியை செய்து கொடுங்கள். கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடிப்பார்கள்

stuffed-chappathi1
- Advertisement -

லாக்டௌன் முடிந்து பள்ளிகள் திறந்து விட்டன. இப்பொழுது தாய்மார்களுக்கு பெரிய வேலை துவங்கிவிட்டது. மதியம் லஞ்ச் பாக்ஸில் ஏற்ற உணவுகளை காலையிலேயே சமைக்க வேண்டும். இந்த உணவுகளை சமைப்பதற்கு அம்மாக்கள் பெரிய அளவில் யோசிக்க வேண்டியிருக்கிறது. குழந்தைகள் எந்த உணவை செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடிப்பார்கள் என்று. வீட்டில் இருந்தால் அவர்களை மிரட்டியும் கூட சாப்பிட வைக்கலாம். ஆனால் பள்ளிக்கு சென்று விட்டால் அவர்களுக்கு பிடித்த உணவு இருந்தால் மட்டுமே முழுவதுமாக சாப்பிட்டு முடிப்பார்கள். எனவே குழந்தைகளுக்குப் பிடித்த வகையில் ஆரோக்கியமான உணவான இந்த ஸ்டஃப்பிங் சப்பாத்தியை சுலபமாக செய்து கொடுத்திடுங்கள். குழந்தைகள் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடிப்பார்கள். இதனை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

children-snacks

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 150 கிராம், உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், கேரட் – 19 பீன்ஸ் – 10, பச்சை பட்டாணி – சிறிதளவு, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, பச்சை மிளகாய் – 1, மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், கரம் மசாலாத்தூள் – அரை ஸ்பூன், கொத்தமல்லித் தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் 150 கிராம் கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதனுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவேண்டும். பின்னர் இறுதியாக ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து வைக்க வேண்டும். இவற்றை 15 நிமிடம் அப்படியே ஊறவிட வேண்டும்.

wheat

பிறகு வெங்காயம், தக்காளி, பீன்ஸ், கேரட் மற்றும் பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை அனைத்தும் எண்ணெயில் நன்றாக வதங்கியதும் இவற்றுடன் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.

onion

பின்னர் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக வேகவைக்க வேண்டும். பிறகு இவற்றில் தண்ணீர் முழுவதும் வற்றிய பின்னர் கொத்தமல்லி தழையை தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும். பின்னர் பிசைந்து வைத்துள்ள மாவை உருண்டைகளாகப் பிடித்துக் கொண்டு, அவற்றை பூரி கட்டையில் வைத்து மெல்லியதாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.

cheese-chappathi

பின்னர் இந்த மாவின் மீது செய்து வைத்துள்ள காய்கறி கலவையை ஒரு ஸ்பூன் எடுத்து வைத்து, முதலில் இரண்டு ஓரங்களையும் மடித்து விட்டு, மற்ற இரண்டு ஓரங்களில் லேசாக தண்ணீர் தடவி மடித்து விடவேண்டும். உள் வைத்திருக்கும் ஸ்டஃப்பிங் எதுவும் வெளியே வராமல் இவ்வாறு மடித்து விட வேண்டும். பின்னர் ஒரு தோசைக்கல்லை அடுப்பின் மீது வைத்து, எண்ணெய் ஊற்றி, இந்த ஸ்டஃப்பிங் சப்பாத்தியை நன்றாக சுட்டு எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான ஸ்டஃப்பிங் சப்பாத்தி தயாராகிவிடும்.

- Advertisement -