தினமும் மாலையில் இப்படி தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், வீட்டில் நிச்சயமாக லட்சுமி கடாட்சம் நிரந்தரமாக தங்கும். உங்கள் வீட்டில் பஞ்சம் என்ற வார்த்தையே ஆயுசுக்கும் இருக்காது.

vilakku-deepam
- Advertisement -

நம்முடைய வழிபாட்டில் அன்றாடம் தினசரி தீப வழிபாட்டிற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. வீட்டில் இருக்கும் பெண்களில் சிலர் காலையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய முடியவில்லை என்றாலும், நிச்சயமாக மாலை நேரத்திலாவது கட்டாயம் தீப வழிபாடு செய்ய வேண்டும். வீட்டில் இருக்கும் கஷ்டமும் இருளும் நீங்குவதற்கு இந்த தீப வழிபாடு அவசியம் தேவை. நம்மில் இது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இருப்பினும் சில பெண்கள் தங்களுடைய வீட்டில் மாலை நேரத்தில் தீபம் ஏற்றும் போது செய்யக்கூடிய தவறினை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

deepam3

மாலை 6 மணி ஆகிவிட்டது. தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். என்பதற்காக ஏதோ ஒரு கடமையை செய்வது போல், தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்யக்கூடாது. மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றுவதற்கு முன்பாகவே மாலை 5.30 மணிக்குள் உங்களுடைய வீட்டை சுத்தம் செய்திருக்க வேண்டும். சமையலறை கட்டாயம் சுத்தமாக இருக்க வேண்டும். காலை நேரத்தில் சிலரால் சமையலறையை சுத்தம் செய்ய முடியாமல், இருப்பினும் மாலை தீபம் ஏற்றுவதற்கு முன்பாக சமையலறையை சுத்தம் செய்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு நீங்கள் காலை நேரத்திலேயே குளித்து இருந்தாலும் கூட மாலை முகம், கை, கால் கழுவி விட்டு அதன் பின்பு தலையை திருத்திக் கொண்டு, பொட்டு வைத்துக் கொண்டு, மங்களகரமாக தான் தீபத்தை ஏற்ற வேண்டுமே தவிர காலை குளித்து விட்டோம் என்று கை கால் முகம் அலம்பாமலே தீபம் ஏற்றக்கூடாது.

vilakku-deepam

பொதுவாகவே மாலை 6 மணிக்கு இருள் சூழாது. சந்தியா காலம் என்று சொல்லப்படும் மாலை 6 மணிக்கு, நிச்சயமாக கொஞ்சம் அளவிலாவது வெளிச்சம் இருக்கும். வெளிச்சம் இருந்தாலும் கூட, உங்கள் வீட்டு வெளிப்புறத்தில் இருக்கும் மின் விளக்கை போட வேண்டும். அதன் பின்பு வரவேற்பறையில் இருக்கக்கூடிய மின் விளக்கை போட வேண்டும்.

- Advertisement -

அதன் பின்பு சமயலறையில் இருக்கும் விளக்கை போட்டுவிட்டு தான், பூஜை அறையில் இருக்கும் மின் விளக்கைப் போட்டு விட்டு தீபமேற்ற வேண்டுமே தவிர, வீட்டில் அந்தி சாயும் நேரத்தில், மின் விளக்குகளை போடாமல் இருட்டில் தீபம் ஏற்றக்கூடாது. குறிப்பாக சமையல் அறையில் கட்டாயம் மின் விளக்குகளை 6 மணிக்கு போட்டுவிட வேண்டும். சமையலறையும் பூஜை அறைக்கு இணையானது. இப்படியாக வாசலிலிருந்து மின்விளக்குகளை போட்டு, பூஜை அறையில் தீபம் ஏற்றுவது லஷ்மி தேவியை உள்ளே அழைப்பதற்கு சமமாகும். 6 மணி நேரத்தில் படுக்கை அறையில் கூட ஒரு சிறிய ஜீரோ வாட்ஸ் பல்பு போட்டு வைப்பது நல்லது.

plant-in-kitchen

இந்த இடத்தில் நிச்சயம் எல்லோருக்கும் ஒரு சந்தேகம் வரும். அந்த காலத்தில், அதாவது ‘மின் விளக்குகள் கண்டு பிடிப்பதற்கு முன்பாக வெறும் தீபவழிபாடு மட்டும் தானே இருந்தது என்று!’ அந்த காலங்களில் எல்லாம் இருள் சூழுவதற்கு முன்பாகவே நிலை வாசல் படியில் தீபம் ஏற்றி வைக்கும் பழக்கம் இருந்தது. அது மட்டுமல்லாமல் ஒரு குடிசை வீட்டில், தனித்தனியாக படுக்கை அறையோ மற்ற இடங்களும் பெரியதாக இருக்காது. சமையலறைக்கு சிறிய தடுப்பு மட்டும் போட்டு வைத்திருப்பார்கள் அவ்வளவு தான்.

- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் உங்களால் நில வாசலிலோ அல்லது சமையல் அறையிலோ தீபம் ஏற்றி வைக்க முடியாத பட்சத்தில், மின்விளக்குகளை போட்டு விட்டது அதன் பின்பு மாலை நேரத்தில் வீட்டில் தீபம் ஏற்றுவது மிகவும் நல்லது. இதுவே வீட்டிற்கு மங்களகரமான லட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
கொடுத்த கடன் 30 நாட்களில் வசூலாக இந்த சக்தி வாய்ந்த இலையில் அவர்களுடைய பெயரை எழுதி வைத்தால் போதுமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -