வெள்ளிக்கிழமை என்றாலே மகாலட்சுமி வழிபாட்டிற்கு சிறப்பு வாய்ந்த நாள் தான். அதிலும் நாளைய தினம் வரக்கூடிய வெள்ளிக்கிழமை திதியானது, அஷ்டமி திதியோடு பிறக்கவிருக்கிறது. இன்று வியாழக்கிழமை தான் முழு அஷ்டமி திதி இருக்கிறது. இருந்தாலும் வெள்ளிக்கிழமை காலை 9 மணி வரை, அஷ்டமி திதி இருக்கிறது.
நாளைய தினம் வெள்ளிக்கிழமை 6:00 மணியிலிருந்து 7:00 மணிவரை சுக்கிர ஹோரை. அஷ்டமி திதியில் எவர் ஒருவர் வீட்டில் அஷ்டலட்சுமிகளை நினைத்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்களுடைய வாழ்க்கையில் மகாலட்சுமி கடாட்சம் நிலைத்து நிற்கும். இந்த அஷ்டமி திதி வெள்ளிக்கிழமையோடு இருப்பதுதான் நாளைய தினத்தின் சிறப்பு.
பணக்கஷ்டம் இருக்கிறது, கடன் சுமை இருக்கிறது, என்னால் வாழ்க்கையில் முன்னேறவே முடியவில்லை. அனைத்து நல்ல காரியங்களிலும் தடை. வீட்டில் சந்தோஷம் இல்லை என்பவர்கள், எல்லாம் நாளைய தினம் அஷ்டலட்சுமிகளை நினைத்து பூஜை செய்து விட்டால் போதும். வாழ்க்கையில் நீங்கள் சுலபமாக ஜெயித்து விடலாம். நாளை காலை செய்ய வேண்டிய மகாலட்சுமி பூஜை, சொல்ல வேண்டிய மந்திரம், பற்றிய விரிவான தகவலை ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
வெள்ளிக்கிழமை மகாலட்சுமி பூஜை
நாளை கொஞ்சம் அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். நாளை காலை 6 மணியிலிருந்து 7 மணி வரை சுக்கிர ஹோரை இருக்கிறது. இந்த நேரத்தில் மகாலட்சுமி பூஜை செய்வது சிறப்பு. அஷ்டமி திதியில் அஷ்டலட்சுமிகளை நினைத்து நாம் வழிபாடு செய்வது நமக்கு பல மடங்கு பலனை பெற்று தரும் என்பதும் நம்பிக்கை.
நாளை காலை 6 மணிக்கு பூஜை அறையில் மகாலட்சுமிக்கும் மற்ற தெய்வங்களுக்கும் பூக்களால் அலங்காரம் செய்து விடுங்கள். முடிந்தால் இன்றே ஒரு தாமரைப் பூ வாங்கி வீட்டில் வைத்து விடுங்கள். நாளை அதை மகாலட்சுமிக்கு சூட்டில் அலங்கரித்து இரண்டே இரண்டு டைமண்ட் கல்கண்டு மகாலட்சுமிக்கு நெய்வேத்தியம் வைத்து, நெய் விளக்கு ஏற்றி வைத்து, இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.
பணம் தரும் மகாலட்சுமி மந்திரம்
“ஸ்ரீம் ஓம்”
பெரிய அளவில் கஷ்டப்பட்டு படிக்க வேண்டிய மந்திரம் எல்லாம் கிடையாது. இரண்டே இரண்டு வார்த்தை கொண்ட, நான்கெழுத்து மந்திரம். அதிசக்தி வாய்ந்த மந்திரம். நீங்கள் கேட்ட பணத்தை எல்லாம் கொண்டு வந்து உங்கள் கையில் கொடுக்கக்கூடிய மகாலட்சுமி மந்திரம் இது.
கொஞ்சம் உதிரி புஷ்பங்கள் இருந்தால், அந்த புஷ்பங்களை மகாலட்சுமிக்கு போட்டு இந்த மந்திரத்தை சொல்லி, அர்ச்சனை செய்து கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையில் நிறைவு செய்து கொள்ளுங்கள். இவ்வளவுதான் வழிபாடு. நாளை காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் இந்த பூஜையை நிறைவு செய்துவிட்டு வழக்கம் போல உங்களுடைய வேலையை துவங்கலாம்.
எங்களுக்கு இந்த பூஜை செய்வதற்கெல்லாம் வழியே கிடையாது. எங்களுக்கு வேறு ஏதாவது மாற்று வழி இருக்கிறதா என்றால் நிச்சயம் அதற்கும் வழி இருக்கிறது. பசு, கோமாதா பசுவின் பின்புறத்தை தொட்டு இந்த மந்திரத்தை சொன்னாலும் பல மடங்கு கிடைக்கும். பசு தொழுவத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொன்னாலும் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: தங்கம் பெருக ரகசியம்
வீதியில் ஏதோ ஒரு பசு மாடு செல்கிறது. அந்த பசு மாட்டிற்கு இரண்டு வாழைப்பழம் வாங்கி கொடுத்து மகாலட்சுமி மனதார நினைத்து, அந்த வாழைப்பழத்தை பசுவிற்கு கொடுக்கும் போது மனதிற்குள் இந்த மந்திரத்தை சொன்னாலும் முழு பலனை உங்களால் பெற முடியும். மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்க பிரார்த்தனை வைத்து இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.