உங்கள் வீட்டுத் தோட்டத்தில் மாவுப்பூச்சி தொந்தரவு, அதிகமாக இருக்கிறதா? மாவுப்பூச்சியை நிரந்தரமாக விரட்ட இந்த ஒரு பொருள் போதும்.

vellai-poochu
- Advertisement -

வீட்டில் தோட்டம் வைக்க வேண்டும் என்றாலே, சிலபேர் வெள்ளைப் பூச்சி அல்லது மாவுப்பூச்சி என்று சொல்லக்கூடிய, இந்த பூச்சிக்காக மிகவும் பயப்படுவார்கள். இந்த மாவுப்பூச்சியை, நம் செடிகளில் இருந்து நிரந்தரமாக நீக்க, என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதற்கு காசுகொடுத்து எந்த பொருட்களையும், கடையிலிருந்து வாங்க வேண்டாம். உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய ஒரு பொருளை வைத்தே, சுலபமான முறையில் மாவுப்பூச்சியை விரட்ட போகின்றோம். அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாமா?

maavu-poochi

இரண்டு வழிமுறைகள் உள்ளது. உங்களுக்கு எது சவுகரியமாக இருக்கின்றதோ, அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். சரி. முதல் வழியை பார்த்துவிடலாம். உங்கள் வீட்டில் வடித்த சாதம் இருக்கும். அதில் ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பிட்டு சொல்லப்போனால் 50 கிராம் சாதம் எடுத்தால், அதற்கு 1/2 லிட்டர் தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு பழைய மூடி போட்ட டப்பாவாக இருந்தாலும் சரி, அல்லது பழைய பிளாஸ்டிக் வாட்டர் கேன் இருந்தாலும் சரி. ஆனால் அதற்கு கட்டாயம் மூடி இருக்க வேண்டும். அந்த பிளாஸ்டிக் டப்பாவில், 50 கிராம் அளவிலான சாதத்தை போட்டு, 1/2லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றி மூடி போட்டு வைத்து விடுங்கள். உங்கள் வீட்டில் ஒரு ஓரமாக நிழல் பகுதியில் இதை வைத்து விட வேண்டும்.

rice

ஐந்தில் இருந்து ஏழு நாட்கள் இந்த பிளாஸ்டிக் டப்பாவை திறக்கக்கூடாது. தினந்தோறும் அந்த பாட்டிலை எடுத்து இரண்டு முறை குலுக்கி, வைத்தால் மட்டும் போதும். இந்த இடைப்பட்ட 7 நாட்களுக்குள் நம் தண்ணீரில் போட்ட சாதம் நன்றாக கரைந்து புளித்து, தண்ணீரில், ஆல்கஹால் உருவாகி இருக்கும். இந்த புளித்தண்ணீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, எங்கெல்லாம் மாவுப்பூச்சி இருக்கின்றதோ அந்த இடத்தில் எல்லாம் உங்கள் செடிகளில் ஸ்பிரே செய்யது விடுங்கள். ஆனால் இதிலிருந்து, புளித்த வாடை அதிகமாக வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

pochi

ஸ்ப்ரே பாட்டிலில் அதிக பிரஷர் கொடுத்து ஸ்பிரே செய்ய வேண்டாம். இந்த தண்ணீரானது அந்த வெள்ளை பூச்சிகளின் மேல் பட்டால் மட்டும் போதும். அந்த வெள்ளை பூச்சிகள் தானாகவே மடிந்து போவதை உங்களால் காண முடியும். ஒரு முறை ஸ்ப்ரே செய்தாலே எல்லா பூச்சிகளும் காணாமல் போய்விடும் என்று சொல்லிவிட முடியாது. தொடர்ந்து நான்கிலிருந்து ஐந்து நாட்கள் இப்படி செய்து வர, வெள்ளை பூச்சிகள் முழுமையாக உங்கள் செடியை விட்டு நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளைப் பூச்சிகளை விரட்ட இரண்டாவது வழி. சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் இருக்கிறதல்லவா? அந்தத் தண்ணீரை ஐந்து நாட்கள் வரை புளிக்க வைக்க வேண்டும். சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் 1/2 லிட்டர் இருந்தால், அதில் இன்னும் 1/2 லிட்டர் சாதாரண தண்ணீர் சேர்த்து, 5 நாட்கள் வரை புளிக்க வைக்க வேண்டும்.

- Advertisement -

spry

ஏனென்றால், வடித்த கஞ்சி தண்ணீரை அப்படியே ஐந்து நாட்கள் வரை, புளிக்க வைத்தோமே ஆனால், அந்த கஞ்சி மேலும் இறுக கட்டி கொள்ளும். அதிலிருந்து தண்ணீரை மட்டும் நம்மால் பிரித்து எடுக்க முடியாது. சரி. 5 நாட்கள் கஞ்சி தண்ணீர் புளித்த பின்பு, என்ன செய்ய வேண்டும் என்பதையும் பார்த்துவிடலாம்.

இப்போது நீங்கள் ஒரு லிட்டர் அளவு புளித்த கஞ்சி தண்ணீரை தயாராக வைத்திருந்தால், அதற்கு மூன்று லிட்டர் நல்ல தண்ணீர் தேவைப்படும். ஒரு அகலமான பக்கெட்டில், நல்ல தண்ணீரை வைத்து விட்டு, அதன் மேல் ஷால், போன்ற மெல்லிய துணியை போட்டு, புளித்த கஞ்சி தண்ணீரை, இந்த துணியின் மேல் ஊற்றி விடுங்கள்.

sadam-kanji

இப்போது கஞ்சையில் இருக்கும் புளித்தண்ணீர் எல்லாம் நல்ல தண்ணீரில் வடிந்துவிடும். மேலே இருக்கும் துணியை அப்படியே, மூட்டையாக கட்டி, சுருட்டி, அந்த தண்ணீரில் நன்றாக அலசி எடுத்தீர்கள் என்றால், கஞ்சி தண்ணீரில் இருக்கும் புளிப்புத்தன்மை அனைத்தும் நல்ல தண்ணீருக்கு போய்விடும்.

அதாவது கஞ்சி தண்ணீரில் இருக்கும் கட்டிகளை தனியாக துணி போட்டு வடிகட்டி எடுத்து விட்டோம். அவ்வளவுதான்! இப்போது நமக்கு புளித்த தண்ணீர் மட்டும் தனியாக கிடைத்துள்ளது. இந்த தண்ணீரில் கொஞ்சமாக மஞ்சள் தூளை சேர்த்து, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, எந்த இடத்தில் எல்லாம் பூச்சி இருக்கின்றதோ அந்த இடத்தில் எல்லாம் இந்த புளித்த தண்ணீரை ஸ்பிரே செய்து விட்டாலே போதும்.

rose

இதையும் நான்கு நாட்கள் தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும். நான்கு நாட்கள் கழித்து, உங்களது செடி பூச்சித் தொல்லையிலிருந்து விடுபட்ட பின்பு, இதேபோல் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நல்ல தண்ணீரை ஊற்றி, அந்த செடிகளுக்கு மேல் ஊற்றி சுத்தம் செய்து விடுங்கள். இல்லையென்றால் புளித்தண்ணீரில் வாடையானது அந்தச் செடிகளில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு டிப்ஸை, எந்த செடிகளுக்கு வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம். பூச்செடிகள், காய்கறி செடிகள், பழச் செடிகள் எந்த செடிகளில் வெள்ளை பூச்சி பிரச்சனை இருந்தாலும், அதற்கு நல்ல தீர்வு கிடைக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் செடிகளுக்கும் முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
வெறும் தண்ணீரில் பூண்டு வளர்க்கலாம். வீட்டிலேயே பூண்டு செடி எப்படி வளர்க்கணும் தெரியுமா?

இது போன்ற மேலும் பல தோட்டக்கலை சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -