எந்த விரலில் மச்சம் இருந்தால் என்ன அதிஷ்டம் உண்டாகும் தெரியுமா ?

macha palan

நம் உடலில் பல்வேறு இடங்களில் உள்ள மட்சமானது பல்வேறு பலன்களை தரவல்லது என மச்ச சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் எந்த விரலில் மச்சம் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள்.

mole in finger

 

வலது கை:

சுண்டு விரல்:
வலது கையில் உள்ள சுண்டு விரலில் மச்சம் இருப்பவர்கள் செல்வாக்கு நிறைந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதிலும் அவரசப்படாமல் அனைத்தையும் பொறுமையாக கையாளுவார்கள்.

மோதிர விரல்:
வலது கையில் உள்ள மோதிர விரலில் மச்சம் இருப்பவர்கள் மிகவும் அறிவாளிகளாக இருப்பார்கள். இவர்கள் தன் வாழ்வில் நிறைய செல்வதை சேர்க்கவல்லவர்கள்.

- Advertisement -

kai viral macha palan

 

நடு விரல்:
வலது கையில் உள்ள நடு விரலில் மச்சம் இருப்பவர்கள் எந்த தொழிலையும் சிறப்பாக செய்வார்கள். செய்யும் தொழிலில் இவர்களுக்கு லாபம் அதிகப்படியாக வரும். வசதியாக வாழ்வதற்கு தேவையான செல்வதை இவர்கள் பெறுவார்கள்.

இதையும் படிக்கலாமே:

உடலில் எங்கு மச்சம் இருந்தால் என்ன யோகம் உண்டு 

ஆள்காட்டி விரல்:
வலது கையில் உள்ள ஆள்காட்டி விரலில் மச்சம் இருப்பவர்கள் எதிலும் நேர்மையாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள். இயல்பாகவே இவர்களிடம் நர்குணங்கள் இருக்கும்.

mole in finger

கட்டை விரல்:
வலது கையில் உள்ள கட்டை விரலில் மச்சம் இருப்பவர்கள் தெய்வ நம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் செல்வ செல்வாக்குடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்வார்கள்.

இடது கை:

சுண்டு விரல்:
இடது கையில் உள்ள கட்டை விரலில் மச்சம் இருப்பவர்கள் மிகவும் அப்பாவி போல தோற்றமளிப்பார்கள். தன் கையில் மட்டும் பணம் இருந்தால் இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் என்னும் எண்ணம் கொண்டவர்கள்.

sundu viral

 

மோதிர விரல்:
இடது கையில் உள்ள மோதிர விரலில் மச்சம் இருப்பவர்கள் அவ்வளவு எளிதில் யாரையும் நம்பிவிடமாட்டார்கள். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை இவர்களுக்கு சற்று அதிகமாக இருக்கும். வருமானத்திற்கு ஏற்ப செலவுகளும் இவர்களுக்கு இருக்கும்.

mole in finger

நடு விரல்:
இடது கையில் உள்ள நடு விரலில் மச்சம் இருப்பவர்களில் குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிலவும். இவர்கள் மகிழ்ச்சியாய் வாழ்வதற்கு தேவையான வசதி இவர்களிடம் இருக்கும்.

ஆள்காட்டி விரல்:
இடது கையில் உள்ள ஆள்காட்டி விரலில் மச்சம் இருப்பவர்கள் கடுமையாக உழைக்கும் போக்கை கொண்டவர்கள். உழைப்பின் மூலம் இவர்கள் செல்வதை ஈட்டுவர். இவர்கள் நற்குணங்கள் நிறைந்து காணப்படுவார்கள்.

mole in finger

 

கட்டை விரல்:
இடது கையில் உள்ள கட்டை விரலில் மச்சம் இருப்பவர்கள் நிறைய கனவுகளோடு வாழ்பவர்கள். இவர்களின் முன்னேற்றத்தில் அவ்வப்போது சிறு சிறு தடைகள் வரும். ஆனால் தடைகள் அனைத்தையும் தகர்த்து இவர்கள் முன்னேறுவார்கள்.