நாளை மஹாளய அமாவாசை திதியில் இதை மட்டும் செய்தாலே போதும். முன்னோர்களின் ஆசிர்வாதமும் குலதெய்வத்தின் ஆசிர்வாதமும் பரிபூரணமாக கிடைக்கும்.

food-amavasai
- Advertisement -

புரட்டாசி மாதம் வரக்கூடிய அமாவாசையை தான் மஹாளய அமாவாசையாக வழிபாடு செய்கின்றோம். இந்த வருடம், மஹாளய அமாவாசை நாளை 25.09.2022 அன்று வருகின்றது. வருடம் முழுவதும் திதி கொடுக்காதவர்கள் கூட இந்த மகாளய அமாவாசையில் முறையாக திதி கொடுத்தால், அது வருடம் முழுவதும் திதி கொடுத்த பலனை பெற்று தந்துவிடும். ஆகையால் தான் எல்லோரும் இந்த அமாவாசையை பெரிய அமாவாசை என்றும் கோவில்களில், குளக்கரையிலும் தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களுக்கு திதி தருவார்கள். இந்த அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு திதி தர வேண்டியவர்கள், கட்டாயமாக அவர்களுக்கு திதி தர வேண்டும். முன்னோர்களுக்கு நாம் செய்யக்கூடிய இந்த வழிபாடு குலதெய்வத்தையும் திருப்தி அடைய செய்யும். முறையாக இந்த மகாலய அமாவாசையில் நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

மகாளய அமாவாசை அன்று காலையில் எழுந்து குளித்து முடித்து முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் தந்து பித்ரு கடமையை நாம் செய்ய வேண்டும். அப்போது தான் முன்னோர்கள் மனம் குளிர்வார்கள். இந்த கடமையை சரியாக செய்யாதவர் வாழ்வில் முன்னேற்றம் என்பதே இருக்காது.

- Advertisement -

நாளைய தினம் மதியம் இறந்தவர்களுக்கு என்ன பிடிக்குமோ அதையெல்லாம் செய்து படையல் இட்டு வணங்க வேண்டும். அந்தப் படையலை மூன்று பங்காக பிரித்து கொள்ள வேண்டும். ஒரு பங்கு நம் வீட்டில் உள்ளவர்களும், இன்னொரு பங்கை இல்லாதவர்களுக்கு அன்னதானமாகவும், அல்லது இறந்தவர் வயதை உடைய யாரோ ஒருவருக்கோ கொடுக்க வேண்டும். மூன்றாவது பங்கை காக்கைகளுக்கு கட்டாயமாக வைக்க வேண்டும். இறந்தவர்கள் காக்கை ரூபத்திலோ, இல்லை நாம் தானம் செய்யும் யாரோ ஒருவர் மூலமாகவோ வந்து நாம் படைக்கும் படையலை உண்பார்கள் என்கிற ஒரு நம்பிக்கையும் உண்டு. எனவே இந்த நாளில் நாம் யாரேனும் ஒருவருக்காவது நிச்சயம் தானம் செய்ய வேண்டும்.

இதில் இன்னொரு ஐதீகமும் உண்டு. காக்கைகள் எம தூதர்கள் என்றும், சனி பகவானின் வாகனம் என்றும் கூறுவார்கள். இவர்களுக்கு நாம் உணவு வைக்கும் போது அதை உண்ட பிறகு நம் முன்னோர்களிடம் சென்று நமக்கு சாதம் படைத்து விட்டார்கள், இவர்களுக்கு இனி தொந்தரவு தரக்கூடாது என்று கூறுவார்கள். இதனால் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். சனி பகவானின் அருளும் கிடைக்கும். ஆகவே மகாளய அமாவாசை அன்று கட்டாயமாக காக்கைக்கு சாதம் வைக்க வேண்டும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: உங்கள் கனவில் எந்த கடவுள் வந்தால் என்ன பலன் தெரியுமா? கனவில் கடவுள் வருவது ஏன்?

அமாவாசை தினத்தன்று மாலை வாசல் பெருக்கி தெளித்து கோலம் போட்டு அருகில் உள்ள ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி நம் குல தெய்வத்தை நினைத்து வணங்கி வர வேண்டும். இவையெல்லாம் அன்றைய தினம் நாம் சரியாக செய்தால், இதுவரை நம்மை தேடி வராமல் இருந்த நம் குலதெய்வம் கூட நம் வீடு தேடி வந்து நமக்கு அருள் செய்யும்.

இதுவரை இது போன்ற தகவல்கள் நமக்கு தெரியாமல் இருந்திருந்தாலும், இவை தெரிந்த பிறகாவது இந்த மகாளய அமாவாசை திதியை முறையாக செய்து, முன்னோர் மற்றும் நம் குலதெய்வத்தின் ஆசியை பெற்று பரிபூரண வாழ்வு வாழ்வோம்.

- Advertisement -