மாங்கல்ய விருத்தி ஏற்பட வீட்டில் அன்றாட பூஜையை முடித்ததும் இப்படி செய்து பாருங்கள்! கணவருக்கு தீர்க்காயுள் கிடைக்கும்.

mangalyam-kungumam

பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுவதற்கு மங்கள பூஜைகள் செய்வது வழக்கம். கணவனின் தீர்காயுள் பெற அவர்களுடைய மனைவிமார்கள் பல்வேறு வகையான பிரார்த்தனைகளை மேற்கொள்வார்கள். அப்படி அவர்கள் இறைவனிடத்தில் வேண்டும் பொழுது அவர்களுடைய கணவன்மார்கள் தோஷங்களில் இருந்து நீங்கி, தீர்காயுள் பெறுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக நம்பப்படுகிறது. இதற்காக பல்வேறு விரத முறைகளையும் ஆன்மீக ரீதியாக கூறப்பட்டுள்ளன.

mangalyam1

அப்படியான அந்த விரதங்களை மேற்கொள்பவர்களுக்கு மாங்கல்ய விருத்தி ஏற்படுவதாக ஐதீகம் உள்ளது. அவ்வகையில் வீட்டில் தினமும் விளக்கு ஏற்றும் பொழுது இந்த ஒரு விஷயத்தை செய்வதால் கணவனுடைய ஆயுள் அதிகரிக்கும் என்பது ஐதீகம். அப்படி நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பொதுவாக பெண்கள் தினமும் வீட்டில் பூஜை செய்வார்கள். அல்லது ஒரு சிலர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்வது வழக்கம். அப்படி பூஜைகள் செய்யும் பொழுது வீட்டில் இருக்கும் நபர்கள் தூங்கிக் கொண்டிருக்க கூடாது. வீட்டில் யாராவது தூங்கிக் கொண்டிருந்தால் அந்த சமயத்தில் பூஜைகள் செய்வதை தவிர்க்க வேண்டும். அவர்கள் எழுந்த பின்னர் பூஜைகள் தொடங்கலாம். குறிப்பாக வீட்டில் இருக்கும் கணவன்மார்கள் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது, மனைவிமார்கள் பூஜை செய்வது கூடவே கூடாது. கணவன் எழுந்த பின்பு தான் பூஜைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

kungumam

பூஜைகள் முடித்த பின்னர் பூஜையில் வைத்திருக்கும் குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொள்வது எல்லோரும் செய்து வரும் ஒரு விஷயமாகும். அப்படி நெற்றியில் குங்குமம் வைக்கும் பொழுது, திருமணமான பெண்கள் கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். சுவாமி படங்கள் பெரும்பாலும் கிழக்கு நோக்கி தான் இருக்கும். ஆக சுவாமி படத்திற்கு நேராகப் படத்தை பார்த்தபடி குங்குமத்தை வைக்கக்கூடாது. கிழக்கு புறமாக திரும்பி கொண்டு குங்குமத்தை வைத்துக் கொள்ளுங்கள். அப்படி வைத்துக் கொள்ளும் பொழுது இந்த விஷயத்தை கடைபிடியுங்கள்.

- Advertisement -

குங்குமம் வைக்கும் பொழுது உங்களுடைய நாசியில் எந்தப் புறத்தில் மூச்சு விடுகிறீர்கள்? என்பதை கவனியுங்கள். இடது நாசி மற்றும் வலது நாசியில் மாறி மாறி தான் மூச்சுக்காற்று வெளியில் வரும். அப்படி வெளிவரும் மூச்சுக்காற்று இடது நாசி வழியாக வரும் பொழுது நீங்கள் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படுவதாக தாந்திரீக குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது.

face-nose-throat

இடது நாசியில் வரும் மூச்சுக்காற்றை சந்திரகலை என்று கூறுவார்கள். அது போல் வலது நாசியில் மூச்சு காற்று வெளி வரும் பொழுது சூரியகலை என்று கூறுவார்கள். சூரிய கலையில் உஷ்ணமான காற்றும், சந்திர கலையில் குளிர் காற்றும் வருவதாக கூறப்படுகிறது. இரண்டும் அல்லாமல் இரண்டு நாசிகளில் இருந்தும் மூச்சுக்காற்று வெளி வந்தால் அதற்கு சுழிமுனை என்று கூறுவார்கள். இதில் சூரிய கலையில் மூச்சு விடும் பொழுது மனைவிமார்கள் குங்குமம் வைத்துக் கொள்வதால் கணவனுடைய ஆயுளை அதிகரிக்கும். ஜாதக ரீதியான மாங்கல்ய தோஷங்களும் இதன் மூலம் நிவர்த்தி பெறுகிறது. மேலும் அவர்களுக்கு வரும் கண்டங்களும் நீங்க பெரும் என்பது ஐதீகம்.

இதையும் படிக்கலாமே
மகாலட்சுமி விரும்பி வந்து உங்கள் வீட்டு பூஜை அறையில் அமர வேண்டும் என்றால், இந்த 1 பொருள் பூஜை அறையில் கட்டாயம் நிறைவாக இருக்க வேண்டும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.