கோவில் குங்குமத்தில் இருந்து தொடர்ந்து வெளிப்படும் காந்தசக்தி !! – ஆச்சர்யத்தில் ஆய்வாளர்

temple

விபூதி, குங்குமம் வைப்பதால் என்ன பெரிய பலன் இருக்கப்போகிறது என்று நினைக்கும் மனிதர்கள் உண்டு. ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த அறிஞர் சார்லஸ் டபிள்யூ லெட்பீட்டர் என்பவர், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தான் பெற்ற குங்குமத்தை ஆய்விற்கு உட்படுத்தி அதில் இருக்கும் காந்த சக்தியை கண்டு வியந்துபோயுள்ளார். வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.

kungumam

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தை சேர்ந்த அறிஞர் சார்லஸ், மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்தார். சுவாமியை தரிசித்த பின்பு அவருக்கு குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. அதன் பிறகு அவர் சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு சென்றார். அங்கு அவருக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.

கிடைக்கப்பெற்ற விபூதியையும் குங்குமத்தையும் பக்தர்கள் தங்கள் நெற்றியில் வைத்தது போக மீதியை ஒரு காகிதத்தில் மடித்து வைத்ததை கண்ட அவர், தானும் அதையே செய்தார். பின்பு தன் தாய் நாடு திரும்பிய அவரின் மனதில், எதற்காக இதை தமிழர்கள் தங்கள் நெற்றியில் இட்டுக்கொண்டனர் என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது.

vibudhiஒருநாள், தான் மடித்து வைத்த குங்குமத்தையும் விபூதியையும் எடுத்து பரிசோதனை செய்ய ஆரமித்தார். அந்த பரிசோதனையின் முடிவு அவரை வியப்பில் ஆழ்த்தியது. காரணம், அவற்றிலிருந்து காந்தசக்தி வெளிப்பட்டதை அவர் உணர்ந்தார். பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் அந்த குங்குமத்தையும், விபூதியையும் ஆய்வு செய்கிறார். அப்போதும் முன்பு கண்ட அதே அளவில் காந்தசக்தி அதில் இருந்து வெளிப்படுவதை கண்டு அவர் பிரமித்து போயுள்ளார்.

kungumam

தான் எழுதிய தி இன்னர் லைப் என்ற புத்தகத்தில் இது குறித்து அவர் பதிவு செய்திருக்கிறார். மேலும் இது போன்ற ஒரு அதிசயத்தை தான் வேறு எந்த நாட்டிலும் கண்டதில்லை என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

பல அற்புதங்கள் நிறைந்த குங்குமத்தையும், திருநீறையும் இணையாவது நாம் கோவில் தூண்களில் கொட்டிவிட்டு வராமல் முறையாக பயன்படுத்துவோம்.