இந்தப் பூஜையை செய்பவர்களது மனது எப்போதும் நல்லதை தேடி செல்லும். தவறு செய்ய வேண்டும் என்ற எண்ணமே உங்களுக்கு வராமல் இருக்க, தொடர்ந்து 48 நாட்கள் இந்த பூஜையை செய்தாலே போதும்.

kali

வாழ்க்கையில் தடுமாறி, தடம் மாறி போனவர்கள், திருந்தி வாழ வேண்டும் என்று நினைத்தால் அவர்களை இந்த உலகம் நல்லபடியாக நல்ல மனிதனாக வாழ விடாது. கெட்டவனாக இருக்கும்போது வாழ்ந்ததை விட, அந்த கெட்டவன் நல்லவனாக மாறி இந்த உலகத்தில் வாழும்போது எதிர்கொள்ள வேண்டிய சோதனைகள் அதிகமாகவே இருக்கும். இந்த இடத்தில் கெட்டது என்பது எதைக் குறிக்கின்றது? உங்களது வாழ்க்கையை புரட்டிப் போடக்கூடிய, குறுக்கு வழியில் செல்லக்கூடிய, எந்த தவறான கெட்ட பழக்கமாக இருந்தாலும் அது உங்களுக்கு கெடுதலை தான் தரும்.

kali siva anger

ஆக இந்தப் பழக்கம், அந்த பழக்கம்  என்று குறிப்பிட்டு சொல்லவில்லை. எந்த தீய பழக்கம் உங்களிடம் இருந்தாலும், அதை நீங்கள் திருத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால், உங்களுக்காக சொல்லப்பட்டுள்ள ஆன்மீகம் காட்டும் ஒரு வழிதான் இது. இந்த பரிகாரத்தை மன உறுதியோடு தொடர்ந்து 48 நாட்கள் செய்து வந்தாலே போதும். கட்டாயம் திருந்த வேண்டும் என்று நினைப்பவர்கள், தனக்குத் தானே தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அடுத்தவர்களுக்காக நம்மால் இந்த பரிகாரத்தை நிச்சயம் செய்ய முடியாது செய்தாலும் முழு பலனை அடையாது.

இந்த வழிபாட்டை கொஞ்சம் கோபமாக உக்ரமாக இருக்கும் அம்மன் தெய்வங்களை நினைத்து தான் வழிபாடு செய்யப் போகின்றோம். அதாவது கெடுதலை அழித்து துவம்சம் செய்வதற்கு, உக்கிர தெய்வங்கள் உடனே கைகொடுக்கும். இந்தப் பூஜையை இரவு நேரங்களில் செய்யவேண்டும். இரவு 8 மணியிலிருந்து 10 மணிக்குள் உங்களால் எப்போது முடியுமோ அப்போது செய்யலாம்.

kaali

இரவு நேரத்தில் பூஜை செய்வதற்கு முன்பாக ஒரு முறை சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். உங்களுடைய பூஜை அறையில், தீபம் ஒன்று ஏற்றிவைத்துவிட்டு, ஒரு மன பலகையை போட்டு அதன் மீது அமர்ந்து கொள்ள வேண்டும். இறைவனுக்கு மிளகினால் செய்யப்பட்ட பிரசாதத்தை நிவேதனமாக வைக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக இந்த பரிகாரத்திற்க்கு ஒரு சிறிய மண் அகல் விளக்கும், காய்ந்த வேப்பம் குச்சிகளும் அவசியம் தேவை. உங்களின் முன்பாக அந்த மண் அகல் விளக்கு வைத்துவிட்டு அதன் உள்ளே ஒரு சூடத்தை போட்டுவிட்டு பற்ற வைத்து விடுங்கள். அது எரியும் போது மூன்று வெப்பம் குச்சிகளை அதனுள்ளே போட்டு எரிய விடவேண்டும். சிறிய யாகம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

veppa-mara-kuchi

சிறிய இந்த யாகத்தில் அந்த வேப்பம் குச்சிகள் கற்பூரத்தோடு எரியும் போது ‘ஓம் க்ரீம் மஹா காளிகாயே சுவாஹா’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மொத்தமாக மூன்று முறை இந்த மந்திரத்தை உச்சரித்தால் கூட போதும். மூன்று முறைக்கு மேல் உங்கள் இஷ்டம். எத்தனை முறை வேண்டுமென்றாலும் மந்திரத்தை உச்சரித்துக் கொள்ளலாம்.

praying-god1

மனதார அந்த மகா காளியை வேண்டிக்கொண்டு, உங்களுக்குள் இருக்கும் தீய எண்ணங்கள், கெட்ட புத்திகள், கெட்ட பழக்கவழக்கங்கள் அழிய வேண்டும். தவறான பாதைக்கு செல்லக்கூடிய எண்ணமே உங்கள் மனதில் எழக்கூடாது என்று என்று, மனதார நினைத்தாலே போதும். உங்கள் மனம் கெடுதலை தவிர்த்து, நல்லதை மட்டுமே நினைக்க தொடங்கிவிடும். இறுதியாக அகல் விளக்கில் வேப்பங்குச்சி எரிந்து சாம்பலாக இருக்கும் அல்லவா? அதை தொட்டு கொஞ்சமாக நெற்றியில் கண்ணுக்குத் தெரியாத அளவு இட்டுக்கொண்டால் மட்டும் போதும். இந்த பூஜையை தொடர்ந்து செய்து பாருங்கள் நிச்சயம் நல்ல வழி பிறக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டில் இந்த வாசம் வீசும் வரை, கெட்ட சக்தி காற்றின் மூலமாக கூட வீட்டிற்குள் நுழைய முடியாது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.