நோய்கள் நீங்கி, உடல் மனம் பலம் பெற இத்துதியை படியுங்கள்

kaliamman-compressed

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று கூறுவார்கள். பல கோடி மதிப்பு சொத்துகள் இருந்தாலும் கடுமையான உடல் நல பாதிப்பிற்குள்ளான மனிதன் தனது நோய் முற்றிலும் நீங்குவதை பற்றியே அதிகம் சிந்திப்பான். நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு நமது கர்ம வினை பயன்கள் தான் பிரதான காரணம் என்பது ஞானிகள், சித்தர்களின் கருத்தாகும். அப்படி ஏற்படும் எத்தகைய நோய்களையும் போக்கும் “மகாகாளி துதி” இதோ.

Rajakali Amman

மகாகாளி துதி

ஜ்வாலாகராளம் அத்யுக்ரம் அசேஷாஸூர
ஸூதநம் தரிக்குலம்பாது நோ பீதே

பத்ரகாளி நமோஸ்துதே அம்ருதாதி
மகாசக்தி ஸம்வ்ருதாயை நமோ நமஹ

பராசக்தியான அன்னை மகாகாளியின் அற்புதமான துதி இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் துதிப்பது நன்மைகளை தரும். செவ்வாய் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் உக்கிரமான வடிவில் இருக்கும் காளி தேவி கோயிலுக்கு சென்று இந்த துதியை 51 முறை துதித்து காளி தேவியை வழிபடுவதால் எப்படிப்பட்ட உடல் உபாதைகளும் நீங்கும். நீண்ட காலமாக இருக்கும் நோய்கள் சிறிது, சிறிதாக உடலை விட்டு நீங்கும். உடல் மற்றும் மனம் பலம் பெறும். மனோதைரியம் அதிகரிக்கும்.

- Advertisement -

கிடைப்பதற்கு அரிய பிறவி மனித பிறவி. நாம் இந்த மனித உடலை எடுத்து வாழ்வது இயற்கை மற்றும் இயற்கை தந்த வரம் ஆகும். அதிசயங்கள் பலவற்றை தனக்குள் வைத்திருக்கும் மனித உடலானது ஆரோக்கியம் மற்றும் நோய்கள் பாதிப்பின்றி இருந்தால் மட்டுமே பொருள் சார்ந்த உலகில் நன்றாக வாழ்வதோடு ஆன்மீக வாழ்விலும் சிறக்க முடியும். மனிதர்களின் அனைத்து உடல் சார்ந்த துன்பங்களை நீக்கும் இந்த துதியை துதிப்பதால் நன்மைகள் பல உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
குரு மூல மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Mahakali thuthi in Tamil. It is also called Mahakali mantra in Tamil or Mahakali slokam in Tamil or Kali devi mantra in Tamil or Noigal neenga manthiram in Tamil.