மகாலட்சுமிக்கு எளிமையாக கலசம் அமைப்பது எப்படி? இந்த குங்குமத்தை மட்டும் தினமும் நெற்றியில் இட்டுக் கொண்டால் உங்களை ஜெய்க்க எவராலும் முடியாது!

மகாலட்சுமிக்கு தெய்வீக கலசம் அமைப்பது என்பது மிகவும் விசேஷமானது. இந்த கலசத்தை கஷ்டப்பட்டு ஒன்றும் நாம் செய்ய தேவையில்லை. எளிதாக மகா லட்சுமி தேவிக்கு கலசம் அமைத்து வழிபட்டு வந்தால் சகல சவுபாக்கியங்களும் நமக்கு கிடைக்கும் என்பது நியதி. வீட்டில் செல்வவளம் பெருகி பண வரவு அதிகரிக்க வெள்ளிக்கிழமையில் கலசம் அமைத்து மகாலட்சுமி வழிபாடு செய்வது உத்தமம். அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

varalakshmi

மகாலட்சுமி தேவிக்கு கலசம் அமைத்தால் அந்த மகாலட்சுமி தேவியே நேரில் வந்து கலசத்தில் ஆவாகனம் ஆவது உறுதி என்கிறது ஆன்மீக சாஸ்திரங்கள். இதற்கு தேவையானது கலசம் அமைக்க கலச சொம்பு அவசியம் தேவை ஆகும். செம்பு அல்லது பித்தளை சொம்பு எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதில் தண்ணீரை நிரப்பி பச்சை கற்பூரத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கலசத்தை சுற்றி அம்மனுக்கு அணிவிக்கும் சிறிய பட்டுப்பாவாடை வாங்கி அணிவித்து கொள்ளலாம். பின்னர் மாவிலைகள் தோரணமாக கழுத்திற்கு கட்டிவிட வேண்டும். சுத்த மஞ்சள் தேய்த்த முழு தேங்காய் ஒன்றை கலசத்திற்கு பிரதிஷ்டை செய்ய வேண்டும். அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர் சாற்றி வைக்க வேண்டும். அவ்வளவு தாங்க எளிமையாக இந்த கலசத்தை தயார் செய்து வைத்துக் கொண்டால் போதும்.

kalasam

பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் மகாலட்சுமி படத்திற்கு வாசனை மிகுந்த மல்லிகை மலர் மாலை சாற்றி, சந்தன திலகம் இட்டு, குங்குமப் பொட்டு வைத்து, கலசத்தை ஆவாஹனம் செய்ய வேண்டும். மகாலட்சுமிக்கு நைவேத்தியம் படைக்க சக்கரை பொங்கல் செய்து வைக்கலாம். அப்படி செய்ய முடியாதவர்கள் சாதாரண கல்கண்டு வைத்தால் கூட போதுமானது. பின்னர் லக்ஷ்மி அஷ்டோத்திரம், விஷ்ணு சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம் ஆகிய ஸ்லோகங்களை உச்சரித்து வர வேண்டும். லக்ஷ்மி அஷ்டோத்திரம் உச்சரிக்கும் பொழுது கலசத்தின் மீது குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். 108 லக்ஷ்மி நாமாவளிகளை சொல்லும் பொழுது 108 முறை குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

குங்கும அர்ச்சனை செய்யும் பொழுது வலது கையின் மோதிர விரல் மற்றும் கட்டை விரலால் குங்குமத்தை எடுத்து அர்ச்சனை செய்வது உத்தமம். 108 முறை குங்குமத்தால் அர்ச்சனை செய்த பின்பு பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். மகா லட்சுமி தேவிக்கு விளக்கு ஏற்றும் பொழுது காமாட்சி அம்மன் விளக்கில் டைமண்ட் கல்கண்டு போட்டு நெய் விளக்கு ஏற்றுவது மிகவும் விசேஷமானது. மேலும் ஐந்து ரூபாய் நாணயத்தை விளக்கிற்கு அடியில் வைத்துக் கொள்ளுங்கள்.

kungumam

நீங்கள் அர்ச்சனை செய்த இந்த குங்குமத்தை தனியே ஒரு பொட்டலத்தில் மடித்து எடுத்து வைத்து விடுங்கள். இதனை தினந்தோறும் உங்களுடைய நெற்றியில் இட்டுக் கொண்டு நீங்கள் வெளியில் சென்று வந்தால் உங்களை ஜெயிக்க யாராலும் முடியாது. எத்தகைய காரியங்களும் சுபமாக வெற்றி அடையும். இப்பரிகாரத்தை தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் செய்து வருபவர்களுக்கு நிச்சயமாக செல்வ வளம் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமைகளில் செய்ய முடியாதவர்கள் பவுர்ணமி நாட்களில் மகாலட்சுமி பூஜை செய்யலாம். மகாலட்சுமிக்கு கலசம் அமைத்து, குங்கும அர்ச்சனை செய்து, அஷ்டோத்திரம் வாசிப்பவர்களுக்கு வாழ்வில் சகல வளங்களும் கிடைக்கும் என்பது தெய்வீக நம்பிக்கை. இவற்றை நீங்களும் செய்து பயனடையலாமே.