- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமகாலட்சுமி கடாட்சத்தைப் பெற அமாவாசை வழிபாடு

மகாலட்சுமி கடாட்சத்தைப் பெற அமாவாசை வழிபாடு

- Advertisement -

அமாவாசை என்றதும் எப்படி முன்னோர்களின் வழிபாடு நம் நினைவிற்கு வருகிறதோ அதேபோல்தான் மகாலட்சுமி தாயாரின் வழிபாடும் நம் நினைவிற்கு வர வேண்டும். மகாலட்சுமி தாயாரை ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய அமாவாசை தினத்தன்று நாம் வழிபாடு செய்வதன் மூலம் மகாலட்சுமியின் கடாட்சத்தை பரிபூரணமாக பெற முடியும். இந்த வழிபாட்டு முறையை வட இந்தியர்கள் சிறப்பாக செய்வதனால் தான் அவர்கள் செல்வ செழிப்பில் எந்த வித குறையும் இல்லாமல் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு அமாவாசை வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

சந்திர பகவானும் மகாலட்சுமி தாயாரும் திருப்பாற்கடலை கடையும் போது தான் தோன்றினார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. அதனால் இவர்கள் இருவரும் சகோதர சகோதரியாக கருதப்படுகிறார்கள். அதனால் சந்திர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாளில் நாம் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும்பொழுது அந்த வழிபாட்டிற்கு அதிக அளவில் பலன் இருக்கிறது. அந்த வகையில் சித்திரை மாதத்தில் வரக்கூடிய அமாவாசை நாள் அன்று செய்ய வேண்டிய ஒரு எளிமையான மகாலட்சுமி வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

அமாவாசை தினத்தன்று முன்னோர்களை வழிபாடு செய்வதற்கு முன்பாகவோ அல்லது வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வீட்டில் நாம் தீபம் ஏற்றி வைக்கும் வழக்கத்தை வைத்திருப்போம். அப்படி தீபம் ஏற்றுவதற்கு முன்பாக செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையாக தான் இந்த வழிப்பாட்டு முறை திகழ்கிறது. இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு ஐந்து ரூபாய் இருந்தால் போதும். வீட்டில் எந்த விளக்கை நாம் ஏற்றினாலும் அந்த விளக்கை ஏற்றுவதற்கு முன்பாக இந்த வழிபாட்டை நாம் செய்துவிட வேண்டும்.

நாம் வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு வலது கையில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு மகாலட்சுமி தாயாரின் அற்புதமான இந்த ஒரு வரி மந்திரத்தை முழு மனதோடு குறைந்தபட்சம் 10 நிமிடத்தில் இருந்து அதிகபட்சம் அரை மணி நேரம் வரை கூற வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு மகாலட்சுமி தாயாரிடம் செல்வ வளம் அதிகரிக்க வேண்டும் பணவரவில் எந்தவித குறையும் இருக்கக் கூடாது என்று செல்வம் தொடர்பான உங்கள் வேண்டுதலை முன் வைக்க வேண்டும். பிறகு எந்த தீபத்தை ஏற்றப் போகிறீர்களோ அந்த தீபத்தை ஏற்றக்கூடிய விளக்கிற்கு அடியில் இந்த நாணயத்தை வைத்து விட வேண்டும்.

- Advertisement -

இந்த தீபமானது குறைந்தது அரை மணி நேரம் எரிய வேண்டும். பிறகு அதை குளிர வைத்துவிட்டு விளக்கிற்கு அடியில் நாம் வைத்திருந்த ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து ஒரு பேப்பரில் மடித்து பண வைக்கும் இடத்தில் வைத்து விடலாம். இப்படி செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று செல்வ செழிப்புடன் வாழ முடியும்.

மந்திரம்

“ஓம் ஸ்ரீம் ஸ்வர்ணவர்ணம் வசிய வசிய நமஹ”

இதையும் படிக்கலாமே:பித்ரு தோஷம் நீக்கும் சித்திரை அமாவாசை
மகாலட்சுமி தாயாரை பலவிதங்களில் நாம் வழிபாடு செய்யலாம். பொருள் செலவு பெரிதும் இல்லாமல் மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய இந்த வழிபாட்டை அமாவாசை தினத்தன்று செய்து செல்வ செழிப்புடனும் மகாலட்சுமி கடாட்சத்தையும் பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்