- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபித்ரு தோஷம் நீக்கும் சித்திரை அமாவாசை

பித்ரு தோஷம் நீக்கும் சித்திரை அமாவாசை

- Advertisement -

அமாவாசை என்றதும் நம் நினைவிற்கு வருவது முன்னோர்களின் வழிபாடுதான். முன்னோர்களை நாம் வழிபாடு செய்வதன் மூலம் அவர்களின் ஆசீர்வாதத்தை நம்மால் பெற முடியும். இருப்பினும் ஒரு சிலருக்கு முன்னோர்களால் சாபமும் தோஷமும் ஏற்பட்டிருக்கும். அப்படிப்பட்டவர்களும் முறையாக அமாவாசை தினத்தன்று வழிபாடும் பரிகாரமும் தொடர்ச்சியாக செய்வதன் மூலம் விரைவிலேயே அந்த தோஷத்தில் இருந்து விடுபட முடியும். அந்த வகையில் சித்திரை அமாவாசை தினத்தன்று எந்த முறையில் நீராடினால் பித்ரு தோஷம் விலகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சித்திரை அமாவாசை நாளன்று செய்ய வேண்டிய பரிகாரம்

ஒருவருக்கு பித்ரு தோஷம் ஏற்பட்டிருக்கிறது என்றால் அவர்கள் தொட்ட காரியம் எதிலும் வெற்றியை பெற முடியாது. சுப காரியங்களில் தடைகள் உண்டாகும். மேலும் பணம் ரீதியான பிரச்சினைகளும், குடும்பத்தில் சண்டை சச்சரவுகளும், எந்த வித மகிழ்ச்சியும் இல்லாத ஒரு நிலை உண்டாகும். இவை அனைத்திற்கும் காரணம் பித்ரு தோஷம்தான் என்பதால் பித்ரு தோஷத்தை முதலில் நாம் நிவர்த்தி செய்ய வேண்டும். பித்ரு தோஷத்தை நிவர்த்தி செய்வதற்கு பலவிதமான வழிபாட்டு முறைகளும் பரிகாரங்களும் இருக்கின்றன. அவற்றுள் மிகவும் எளிமையான ஒரு பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

பொதுவாகவே அமாவாசை தினத்தன்று நம் வீட்டில் இருந்த முன்னோர்களை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம். ஒரு சிலர் தர்ப்பணம் கூட செய்வார்கள். இன்னும் சிலரோ பசு மாட்டிற்கு அகத்திக்கீரை பழங்கள் போன்றவற்றை வாங்கி தருவார்கள். இன்னும் சிலரோ அன்றைய தினம் வீட்டை சுத்தமாக துடைத்து அசைவத்தை சேர்க்காமல் விரதம் இருந்து சைவ படையலை போட்டு முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வார்கள். அதே போல் காக்கைக்கும் அந்த படையலை எடுத்து வைப்பார்கள். இன்னும் சிலரோ தங்களால் இயன்ற அளவு அன்னதானத்தை அன்றைய தினம் செய்வார்கள்.

இப்படி நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வழிப்பாடாக இருந்தாலும் பரிகாரமாக இருந்தாலும் பித்ருக்களின் ஆசிர்வாதத்தை பெற முடியும். முதலில் பித்ருக்களின் ஆசிர்வாதத்தை பெற வேண்டும் என்றால் பித்ருக்களால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். அப்படி பித்ருக்களின் தோஷத்தை நீக்குவதற்கு அமாவாசை தினத்தன்று நாம் குளிக்கும் முறை என்று ஒரு முறை இருக்கிறது. அந்த முறையை பின்பற்றினாலே பித்ருக்களின் தோஷத்தில் இருந்து நம்மால் வெளியில் வர முடியும்.

- Advertisement -

இந்த முறைக்கு நமக்கு தர்ப்பைப்புல் தேவைப்படும். தர்ப்பைப்புல் அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கக்கூடிய ஒன்றுதான். நாம் குளிக்க செல்வதற்கு முன்பாக பக்கெட்டில் தண்ணீரைப் பிடித்து வைத்து அதில் தர்ப்பை புல்லை போட்டு வைத்து விட வேண்டும். குறைந்தது ஐந்து நிமிடத்தில் இருந்து அதிகபட்சம் அரை மணி நேரம் வரை கூட போட்டு வைக்கலாம். பிறகு அந்த தண்ணீரை பயன்படுத்தி குளிக்க வேண்டும். ஒருவேளை தர்ப்பை புல் கிடைக்கவில்லை என்பவர்கள் அதற்கு பதிலாக அருகம் புல்லை பயன்படுத்தலாம். ஷவரில் குளிக்கும் பழக்கம் இருப்பவர்கள் குளித்து முடித்த பிறகு ஒரு டப்பாவில் தண்ணீரைப் பிடித்து அதில் இந்த புல்லை போட்டு வைத்து கடைசியாக அந்த தண்ணீரை தலையில் இருந்து ஊற்றுவதன் மூலம் பித்ருகளின் தோஷத்தில் இருந்து நிவர்த்தி அடைய முடியும்.

தையும் படிக்கலாமே:பெறக்கூடாத 3 சாபங்கள்

எளிமையான இந்த குளியல் முறையை சித்திரை மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினத்தன்று செய்பவர்களுக்கு அவர்களின் முன்னோர்களின் சாபத்திலிருந்தும் பித்ரு தோஷத்தில் இருந்தும் வெளியில் வர முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்