மகாலட்சுமி வீட்டில் நிலைக்க உதவும் மந்திரம்

lakshmil

தாமரை பூவில் வாசம் செய்யும் மகாலட்சுமியை மனதார வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும் என்பது ஐதீகம். அந்த வகையில் கடன் தொல்லையில் தவிப்பவர்கள், ஏழ்மை நீங்காது இருப்பவர்கள், நியாயமான வழியில் பண சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கீழே உள்ள லட்சுமி மந்திரம் அதை கூறுவதன் பயனாக நிச்சயம் செல்வம் சேரும்.

Lakshmi

மந்திரம் :
ஸஹஸ்ரதள பத்மஸ்த கர்ணிகா வாஸினீம் பராம்
சரத்பார்வண கோடீந்து ப்ரபாமுஷ்டிகராம் பராம்
ஸ்வதேஜஸா ப்ரஜ்வலந்தீம் ஸுகத்ருச்யாம் மனோஹராம்
ப்ரதப்த காஞ்சனநிப சோபாம் மூர்திமதீம் ஸதீம்
ரத்நபூஷண பூஷாட்யாம் சோபிதாம் பீதவாஸஸா
ஈஷத்தாஸ்ய ப்ரஸன்னாஸ்யாம் சஸ்வத்ஸுஸ்திரயௌவனாம்
ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் ச மஹாலக்ஷ்மீம் பஜே சுபாம்

பொது பொருள் :
தாமரை மலரில் வாசம் செய்பவளும், கோடி சந்திரனின் ஒளிக்கு ஒப்பானவளும் , பக்தர்களின் மனதை ஈர்ப்பவளும், ஆபரணங்கள் பல கொண்டு அற்புதமாக அலங்கரிக்கப்பட்டவளும், ஒளிவீசும் முகம் உடையவளும், தங்கத்தின் பிரகாசத்திற்கு ஒப்பானவளும், பக்தர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களை அருள்பவளுமான மகாலட்சுமியே உங்களை பூஜித்து பணிகிறேன்.

இதையும் படிக்கலாமே:
வாழ்வின் அடுத்த நிலைக்கு உயர உதவும் மந்திரம்

தினமும் மாலை வீட்டில் விளக்கேற்றிவிட்டு இந்த மந்திரத்தை சொல்வதன் பயனாக வீட்டில் மகாலட்சுமி குடிகொள்வாள். அவள் அருளால் வீட்டில் சகல செல்வங்களும் பெருகும். தினமும் இந்த மந்திரத்தை கூற இயலாதவர்கள் வெள்ளிக்கிழமைகளில் இதை ஜெபிக்கவும்.