உங்களுக்கு இருக்கிற கடனை எல்லாம் சீக்கிரமே அடைச்சிட்டு, நிறைய சொத்து வாங்கணும்னு ஆசை இருக்கா? இந்த ஆசை நிறைவேற ஒரு டம்ளர் பால் போதுமே!

milk with mahalashmi

இந்தக் காலகட்டத்தில் நமக்கிருக்கும் பொருளாதார பிரச்சனையும், கடன் பிரச்சினையும், நம்முடைய கழுதை நெரித்துக் கொண்டிருக்கின்றது. நிம்மதியாக மூச்சு விடகூட முடியவில்லை. நிம்மதியாக ஒருவாய் சாப்பாடு கூட சாப்பிட முடியவில்லை. இப்படியிருக்க இந்த பிரச்சனைகளை எல்லாம் சுலபமாக எப்படி தீர்ப்பது? என்பதற்கான ஒரு வழி கிடைத்தால், எல்லோருக்குமே நிம்மதி கிடைக்கும். ஏதேதோ பரிகாரங்கள் செய்தும், கடனை அடைக்க முடியாமல் அவதிப்பட்டு வருபவர்களுக்கு இந்த பதிவு ஒரு நல்ல தீர்வை தரும். மிகவும் சுலபமான பரிகாரம். நம்பிக்கையோடு, பக்தியோடு செய்பவர்களுக்கு 48 நாட்களில் பலனை அடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

donkey milk

இது ஒரு பரிகாரம் என்று கூட சொல்ல முடியாது. மகாலட்சுமியை நினைத்து வழிபடும் வழிபாடு என்று வேண்டுமென்றால் சொல்லலாம். எல்லா பெண்களும் காலை எழுந்தவுடன், வீட்டில் இருப்பவர்களுக்கு குடிப்பதற்காக டீ, காபியில், ஏதாவது ஒன்றை போடுவதற்காக, கட்டாயம் பால் பயன்படுத்துவார்கள். உங்கள் வீட்டில் பயன்படுத்தும் எந்த பாலாக இருந்தாலும் சரி. பசும்பால் ஆக இருந்தால் சிறந்தது. பசும் பால் கிடைக்காத பட்சத்தில், பாக்கெட் பாலாக இருந்தாலும் பரவாயில்லை.

நீங்கள் அடுப்பை பற்ற வைப்பதற்கு முன்பு, அந்த பாலில் இருந்து ஒரு 1/2 டம்ளர் பாலை, தனியாக எடுத்து, உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் மகாலட்சுமிக்கு முதலில் வைத்துவிட்டு, அதன் பின்பு உங்களது சமையலறைக்கு வந்து சமையலை தொடங்க வேண்டும். பூஜை அறையில் பாலை வைத்து விட்டு வந்த பின்புதான், உங்கள் வீட்டு அடுப்பை பற்றவைக்க வேண்டும். அவ்வளவு காலையில் நீங்கள் தீபம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும் என்ற எந்த அவசியம் கூட இல்லை.

milk-boiling-stove

சுத்தபத்தமாக இருக்கும் பட்சத்தில் பெண்கள் காலையில் எழுந்து, பல் தேய்த்து, முகம் கழுவி, தலை சீவி ஒரே ஒரு பொட்டு மட்டும் இட்டுக்கொண்டு, மகாலட்சுமிக்கு இந்த பாலை கொண்டு போய், பூஜையில் வைத்துவிட்டு, உங்களது சமையல் வேலையை தொடங்குங்கள். ஒரு ஒரு மணி நேரம் வரை, உங்களது பூஜை அறையிலேயே அந்த பால் அப்படியே இருக்கட்டும். அதன் பின்பு, எடுத்து அதை காய்ச்சி நீங்கள் குடிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தவறில்லை.

- Advertisement -

காலை வேளையில் சுத்தமான காய்ச்சாத பசும்பாலை, மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய அந்தப் பசும்பாலை, கோமாதாவிடம் இருந்து பெறக்கூடிய அந்த வெண்மை நிறம் கொண்ட பாலை, காய்ச்சாமல் இறைவனுக்குப் படைப்பது நம்முடைய பொருளாதார சூழ்நிலையை மாற்றி விடும் என்று சொல்கிறது சாஸ்திரம். இன்னொன்றையும் உங்க நினைவில் வச்சுக்கோங்க! கறந்த பால், எப்படி கள்ளம்கபடம் இல்லாமல் தூய்மையாக இருக்கிறதோ, அதேபோல் உங்களது மனம், இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பில்லை.

kadan

உங்களுக்கு இருக்கும் எப்படிப்பட்ட கடனாக இருந்தாலும், அதை நீங்கள் அடைப்பதற்கான வழி கிடைத்து விடும். கடன் வாங்குவதற்கான சூழ்நிலை குறையும். பண வருமானம் அதிகரிக்கும். சொத்துக்கள் சேர்வதற்கு நிறைய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிம்மதியான மகிழ்ச்சியான குடும்பமும், அமைதியும் உங்கள் வீட்டைத் தேடி வரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

milk

இதை தொடர்ந்து செய்ய வேண்டும். இடையே இடையே ஒரு சில நாட்கள் விட்டுவிட்டு செய்தால் பலனை உடனடியாக எதிர்பார்க்க முடியாது. பெண்கள் பூஜை அறைக்கு போக முடியாத சமயத்தில், ஒரு அரை டம்ளர் பாலை எடுத்து வீட்டு வாசலில் வைக்கலாம் அல்லது மொட்டை மாடியில் வைக்கலாம் அல்லது உங்கள் சமையலறையில் ஏதாவது ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு, அது மகாலட்சுமிக்கு என்று தனியாக எடுத்து வைத்து விட வேண்டும். அதன் பின்பு, நீங்கள் எப்போதும் போல் எடுத்த அந்த பாலை பயன்படுத்திக்கொள்ளலாம். முயற்சி செய்து தான் பாருங்களேன். 1/2 டம்ளர் பாலை, மகாலட்சுமிகாக எடுத்து வைத்துவிட்டு மீண்டும் பயன்படுத்துவதில் நாம் ஒன்றும் குறைந்து போகப் போவதில்லை. நல்ல பலன் கிடைத்தால் சந்தோசம் தான் அல்லவா?

இதையும் படிக்கலாமே
தெரியாமல் செய்த பாவங்களுக்கு கூட விமோசனம் கிடைக்கும். இவர்களுக்கு தானம் செய்தால்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Mahalakshmi arul pera. Mahalakshmi kadatcham Tamil. Mahalakshmi valipadu in tamil. Mahalakshmi pariharam.