16 நாட்கள், எந்த வித தடங்களும் இல்லாமல், இந்த பூஜையை செய்தால் நீங்கள் நினைத்தது நிறைவேறும்.

perumal-2
- Advertisement -

நம் வீடு சுபிட்சம் அடைய, வருமானம் அதிகரிக்க, கடன் பிரச்சனை தீர, வீண் விரயங்களை குறைக்க, இறைவழிபாட்டை செய்து கொண்டேதான் இருக்கின்றோம். ஆனால் பிரச்சினைகள் குறையவே இல்லை. என்னதான் செய்வது? கையில் வரும் வருமானம், வருகின்ற வழியே தெரியாமல் திரும்பி சென்று விடுகிறது. ஒரு ரூபாயை கூட, சேமிப்பில் வைக்க முடியவில்லை. இதற்கு என்னதான் தீர்வு? பெருமாளையும், மகாலட்சுமியையும் வேண்டி செய்யக்கூடிய சுலபமான, ஒரு அருமையான பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Perumal

இந்த பரிகாரத்திற்க்கு உங்கள் வீட்டில் கட்டாயம் பெருமாளோடு சேர்ந்த லட்சுமி தாயாரின் திருவுருவப்படம் இருக்கவேண்டும். உங்கள் வீட்டில் கலசம் வைக்கும் பழக்கம் இருந்தால், ஒரு பித்தளை சொம்பில், மாயிலை வைத்து, மஞ்சள் தேங்காயை நிறுத்தி, பட்டு ஆடை அணிவித்து, அந்த கலசத்தை அம்மனாக பாவித்து கூட, இந்த பூஜையை தொடங்கலாம். பூஜையை ஒரு நல்ல நாளாக பார்த்து தொடங்க வேண்டும். தொடங்கிய நாள் முதல் 16 நாட்கள் முடியும் வரை, இடையில் எந்த ஒரு தடையும் ஏற்படக்கூடாது. பெண்கள் பூஜை செய்ய கூடாத நாட்கள் எப்போது வரும் என்பதை அறிந்துகொண்டு, பூஜையை தொடங்க வேண்டும்.

- Advertisement -

காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் உள்ள படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, தீபம் ஏற்றிவைத்து அதன்பின், சுப்ரபாதத்தை ஒலிக்கச் செய்யுங்கள். உங்கள் வீட்டில் சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டிருக்கின்ற, நேரம் பிரம்ம முகூர்த்த நேரமாக இருக்க வேண்டும்.

perumal-1

அடுத்தபடியாக கொஞ்சம் மஞ்சளை எடுத்து, தண்ணீர் ஊற்றி பிசைந்து, மஞ்சள் பிள்ளையாரை பிடித்து, ஒரு வெற்றிலையில் வைத்து, அதற்கு குங்கும பொட்டு வைத்து, பூ வைத்து நீங்கள் தொடங்கப் போகும் இந்த பூஜையானது 16 நாட்களும் எந்தவித தடையும் இல்லாமல் முடிய வேண்டும் என்று வேண்டுதலை வைக்க வேண்டும். இதோடு சேர்த்து மகாலட்சுமியின் திருவுருவ படத்திற்கு முன்பாக கொஞ்சம் வெட்டிவேரையும் வைத்துக் கொள்ளுங்கள். 16 நாட்கள் இந்த பூஜை நடந்து முடியும்வரை, அந்த வெட்டிவேர் மகாலட்சுமியின் பாதத்திற்கு கீழ் இருக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக, ஒரு சிறிய கிண்ணத்தில் குங்குமத்தை எடுத்துக்கொண்டு, வெங்கடாசலபதியையும், மகாலட்சுமி தேவியையும், மனதார நினைத்து, 108முறை குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும் ‘ஓம் லக்ஷ்மி நாராயணாய நமஹ’ இந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே அர்ச்சனையை தொடங்குங்கள்.

vettiver

குங்கும அர்ச்சனை முடிந்தவுடன் விஷ்ணு சஹஸ்ரநாமம், லக்ஷ்மி அஷ்டோத்திரம் உச்சரிப்பது மிகவும் நல்லது. உச்சரிக்க முடியவில்லை என்றால் ஒலிக்கச் செய்து கேளுங்கள். 16 நாட்களும் தினசரி பூஜையை முறைப்படி செய்து முடித்துவிட்டு, உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். (உங்கள் பூஜையானது காலை 7.00 மணிக்கு முன்பாகவே முழுமை அடைந்து இருக்க வேண்டும்.) இந்த 16 நாட்களில், உங்களுக்கு மனநிறைவு ஏற்பட்டால், உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் குறைவதாக தோன்றினால், இந்தப் பூஜையை நீங்கள் தொடர்ந்து செய்து வரலாம். 16 நாட்களோடு நிறுத்திவிட வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.

- Advertisement -

ranganathar perumal

கட்டாயம் பிரச்சனைகள் குறையும். 16வது நாள் இந்த பூஜை நிறைவடைந்த பின்பு மகாலட்சுமி பாதத்தின் முன்பு வைத்திருக்கும் வெட்டி வேரை எடுத்து, ஒரு மஞ்சள் கயிறு அல்லது சிவப்பு கயிறு கட்டி உங்கள் நில வாசப்படியில் தொங்க விட்டு விடுங்கள். வீட்டிற்கு உள்ளே எதிர்மறை ஆற்றல் நுழையாது. நேர்மறை ஆற்றல் அதிகரித்து, உங்கள் வீடு செல்வ வளத்தோடு, சந்தோஷம் நிறைந்த, நிம்மதி நிறைந்த வீடாக இருக்கும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த 3 பொருட்களையும் உங்கள் கைகளில் எடுத்து சென்றால், எந்த காரியத்திலும் தடை ஏற்படாது. உங்கள் முயற்சி எல்லாம் வெற்றிதான்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -