மகாலக்ஷ்மி ராஜபோக வாழ்க்கை அமையக் கூடிய ராசிக்காரர்கள்

mahalakshmi astrology
- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகங்களின் பெயர்ச்சியும் 12 ராசிகளுக்கு பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த மாற்றம் சுகமாற்றமாகவும் இருக்கலாம் அல்லது அசுப பலன்களை தரக்கூடிய மாற்றமாகவும் இருக்கலாம். ஆனால் ஏதேனும் ஒரு மாற்றம் நிச்சயமாக நிகழும். அதே போல் ஒரு ராசியில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இணையும் போது அங்கு சில யோகங்கள் உருவாகும். அப்படியான ஒரு யோகம் தான் மகாலட்சுமி ராஜ யோகம்.

கும்ப ராசியில் கடந்த மார்ச் 7ஆம் தேதி சுக்கிரன் பெயற்சியானார். இதற்கு முன்பே அந்த ராசியின் அதிபதியான சனி பகவான் அங்கு அமர்ந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் மார்ச் 15ஆம் தேதி செவ்வாய் பகவானும் கும்ப ராசிக்குள் இணைவதால் மகாலட்சுமி ராஜ யோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் 5 ராசிக்காரர்கள் பெரும் பலனை பெற இருக்கிறார்கள். யார் அந்த ராசிக்காரர்கள் என்பதை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

மகாலட்சுமி ராஜயோகத்தால் யோகம் பெறும் ஐந்து ராசிக்காரர்கள்

மேஷ ராசி

சுக்கிர செவ்வாய் சனியின் இந்த சேர்க்கையானது மேஷ ராசிக்கு பல நல்ல பலன்களை தர உள்ளது. இந்த கிரகங்களின் சேர்க்கையால் இவர்களுக்கு இதுவரை நிலுவையில் இருந்த பணம் கைக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவு பல மடங்கு அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற ஊதியமும் முன்னேற்றமும் நிச்சயம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களும் இந்த கிரகங்களின் சேர்க்கையால் மிக நல்ல பலன்களை பெற உள்ளார்கள். வியாபாரம் செய்பவர்கள் பல மடங்கு வியாபாரத்தை விருத்தி செய்வார்கள். பணி இடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் நிறுவனங்கள் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைப்பதுடன் முன்னேற்றமும் இருக்கும். இந்த காலக்கட்டத்தில் பல அதிர்ஷ்டங்கள் உங்களைத் தேடி வரும்.

- Advertisement -

துலாம் ராசி

துலாம் ராசியின் அதிபதியான சுக்கிரனும் செவ்வாயும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இணைவதால் உங்கள் வாழ்க்கை இருக்கக் கூடிய துன்பங்கள் அனைத்தும் விலகும். வியாபாரம் தொழில் செய்பவர்கள் பல மடங்கு லாபத்தை பெறுவார்கள். உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும். பண வரவில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

விருச்சக ராசி

விருச்சக ராசிகாரர்களும் இந்த கிரகங்களின் இணைவால் நல்ல முன்னேற்றத்தை பெறக் கூடிய வாய்ப்புகள் உள்ளது. வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு அதில் லாபம் அதிகரிக்க கூடிய வாய்ப்பு உள்ளது. புதிய வாய்ப்புகள் அதிகரிக்கும் இதனால் வருமானம் பெருகும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் புதிதாக வண்டி வாகனம் சொத்துக்கள் சேர்க்கக் கூடிய யோகம் அமையும். குடும்பம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். பண வரவில் தாராள தன்மை இருக்கும்.

- Advertisement -

கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த செயற்கையானது பல வெற்றி வாய்ப்புகளை தேடித் தருவதாக உள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடியும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு இதில் வெற்றி கிடைக்கும். பண வரவு பல மடங்கு அதிகரிக்கும். எதிர்காலத்திற்கான முதலீடுகளை சேமிக்க கூடிய காலம் இது. திருமண தடை உள்ளவர்களுக்கு திருமண யோகம் அமையும் தொழில் வியாபாரம் செய்பவர்கள் திருப்தியான மனநிலை பெறுவார்கள்.

இதையும் படிக்கலாமே: புதபகவானால் யோகம் பெறக் கூடிய ராசிகாரர்கள்

ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது தான் இந்த பதிவில் உள்ள கருத்துக்கள். இதுவும் சிற்சில மாற்றங்கள் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -