27 நாட்கள் தொடர்ந்து இந்த பூஜையை எந்தத் தடையும் ஏற்படாமல் செய்து முடித்து விட்டால், உங்கள் வீட்டில் செல்வம் குவிவதை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது.

vishnu

ஒரு வீட்டில் செல்வ கடாட்சம் என்பது எப்போதுமே நிறைவாக இருக்க வேண்டும். செல்வ கடாட்சத்தை நம்முடைய வீட்டில் நிலை நிறுத்தக் கூடிய அதி அற்புதம் வாய்ந்த ஆன்மீக ரீதியான ஒரு வழிபாட்டை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கையில் பணமே இல்லை என்பவர்களுக்கு ‘பணம் இல்லை’ என்பது மட்டும் தான் ஒரு பிரச்சனையாக இருக்கும். அதுவே நிறைய பணத்தை கையில் வைத்துக்கொண்டு இருப்பவர்களிடம் போய் கேட்டால், ‘பணத்தை தவிர அவர்களுடைய வாழ்க்கையில் மற்ற எல்லாமே கஷ்டமாக பிரச்சினையாகத் தான் அமைந்திருக்கும்’. ஆக இந்த பணத்தை மட்டுமே வாழ்க்கையாக நினைத்து யாரும் வாழக்கூடாது. நம்முடைய வாழ்க்கையை நடத்திச் செல்வதற்கு பணம் தேவை. நிறைவான மகிழ்ச்சியான வாழ்க்கையோடு சேர்த்து, அளவான பணத்தையும், செல்வ வளத்தையும் பெற வேண்டும் என்பவர்கள் அந்தப் பெருமாளை வேண்டி, இந்த பரிகாரத்தை செய்யலாம்.

perumal-1

கொஞ்சம் சிரமப் பட்டாவது காலை 6 மணிக்கு முன்பாகவே இந்த பூஜையை உங்களுடைய வீட்டில் நிறைவு செய்திருக்க வேண்டும். பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் பெருமாளின் திருவுருவப் படத்திற்கு முன்பு நெய் தீபம் ஏற்றி வைத்து, துளசி இலை வாசனை மிகுந்த பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு, உங்களால் முடிந்த பிரசாதத்தை நிவேதனமாக வைத்து விடுங்கள். தினமும் ஒரு பழ வகையை வைத்தால் கூட போதும். 27 நாட்கள் இந்த பூஜை எந்த தடையும் ஏற்படாமல் நடத்தித் தரவேண்டும் என்று முதலில் விநாயகரிடம் மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

பெருமாளும் தாயாரும் சேர்ந்திருக்கும் படமாக இருப்பது மிக மிக நல்லது. பெருமாளின் திரு உருவ படத்திற்கு முன்பாக ஒரு வெற்றிலையை வைத்து விடவேண்டும். உங்களுடைய கையில் ஒரு சிறிய கிண்ணத்தில் வாசம் மிகுந்த தாழம்பு குங்குமத்தை எடுத்து கொள்ளுங்கள். ஒவ்வொரு சிட்டிகை குங்குமம் ஆக எடுத்து வெற்றிலையின் மேல் போட்டு விஷ்ணு பகவானுக்கும் தாயாருக்கும் குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும்.

108 முறை குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை அர்ச்சனை செய்யும் போதும் ‘ஓம் லக்ஷ்மி நாராயணாய நமஹ!’ என்ற மந்திரத்தை மனதார உச்சரியுங்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த பூஜையைச் செய்வது வீட்டிற்கு அத்தனை லட்சுமி கடாட்சத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

- Advertisement -

27 நாட்களில் ஒரு நாள் கூட தடை என்பது வரக்கூடாது. தடைபடாமல் இந்த பூஜையை நிறைவு செய்தால் உங்களுடைய வீட்டில் இருக்கும் கஷ்டங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இறுதியாக தூப தீப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். சரி, அர்ச்சனை செய்த குங்குமத்தை என்ன செய்யலாம். கொஞ்சம் நிறையவே குங்குமம் அர்ச்சனை செய்து நம்முடைய வீட்டில் சேர்ந்து இருக்கும் அல்லவா? அதை அப்படியே வீட்டில் வைத்து வண்டு பிடிக்க விடக்கூடாது.

poojai1

தொடர்ந்து இந்த பூஜையை 27 நாட்கள் முடித்துவிட்டு கொஞ்சம் குங்குமத்தை தினம் தோறும் வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களுடைய நெற்றியில் வைத்துக் கொள்ளலாம். மீதமிருக்கும் குங்குமத்தை உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு கொண்டு போய், அங்கிருக்கும் குருக்களிடம் கொடுத்து விட்டால், அவர் அந்த கோவிலுக்கு வரும் பெண்களுக்கு இந்த குங்குமத்தை பிரசாதமாக கொடுத்துவிடுவார்.

kungumam

இது நமக்கும், நம் வீட்டிற்கும் கோடி புண்ணியத்தை தேடி தரக்கூடிய ஒரு பூஜை. பிரம்ம முகூர்த்தத்தில் இந்த பூஜையை தொடங்கும் போது வீட்டில் சுப்ர பாரதம் ஒலிக்கச் செய்வது சிறப்பானது. 27 நாட்கள் இந்த பூஜையை நிறைவு செய்துவிட்டு அதன் பின்பும், தொடர்ந்து இந்த பூஜையை செய்தாலும் நன்மைதான். நம்பிக்கையோடு இந்த பூஜையை செய்து அனைவரும் பயனடைய வேண்டும் என்று அந்தப் பெருமாளை மனதார வேண்டிக்கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.