சமையலறையில் இந்த பொருட்கள் எல்லாம் நிறைந்திருந்தாலே போதும். பீரோவில் இருக்கும் பணத்திற்கு குறைவே வராது.

mahalashmi2

நம்முடைய வீட்டில் பண கஷ்டம் வரக்கூடாது என்பதற்காக நாம் பல பரிகாரங்களை செய்தாலும், அந்த பரிகாரங்கள் பலன் அளிக்க வேண்டும் என்றால், நாம் சில மாற்றங்களை நாம் வீட்டில் கொண்டு வந்து தான் ஆக வேண்டும். அந்த வரிசையில் நம் வீட்டு சமையல் அறையில் எப்போதும் நிறைந்திருக்க வேண்டிய சில பொருட்களின் பட்டியலில், இன்னும் சில பொருட்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். எப்படி கல் உப்பை நிறைவாக பார்த்து கொள்கிறீர்களோ, அதேபோல் இந்த பதிவில் குறிப்பிட போகும், இந்த பொருட்களையும் உங்களுடைய வீட்டில் நிறைவாக வைத்துப் பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.

butter-milk

அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வீட்டிற்கு வருபவர்களுக்கு குடிக்க நீர் மோர் கொடுப்பார்கள். எப்போதுமே பரண்மேல் உருளி தொங்கிக் கொண்டே இருக்கும். அதாவது மண்பானையில் மோரை நிரம்ப வைத்துக்கொண்டே இருப்பார்கள். வீட்டிற்கு வருபவர்களுடைய மனமும் வயிறும் குளிரும் அளவிற்கு ஒரு டம்ளர் மோரைக் கொடுத்து தங்களுடைய வாழ்க்கையை நிறைவாக வாழ்ந்து முடித்து விட்டார்கள்.

ஒரு வீட்டில் நிச்சயம் கட்டாயம் இருக்க வேண்டிய பொருட்களில் இந்த தயிரையும் மோரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். வீட்டிற்கு வருபவர்களுடைய மனம் குளிர்ந்தால் போதும். நாம் நன்றாக வாழ்ந்து விடலாம். பாலில் இருந்து எடுக்கப்படும் தையிரிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறார்கள் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான்.

milk

சரிங்க, உங்களால தயிரை பக்குவமாக உரை போட முடியவில்லை. தயிரிலிருந்த கடைந்தெடுத்த மோரும் தெரியவில்லை. இருப்பினும் வீட்டிற்கு வருபவர்களுக்கு இந்த காலத்திற்கு ஏற்ப காபி, டீ கொடுக்கும் வகையில் ஃப்ரிட்ஜில் பால் மட்டுமாவது தீராமல் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வீட்டிற்கு வருகை தருபவர்களுக்கு, குடிக்கக் கொடுக்க, பால் இல்லை, வீட்டில் தயிரும் இல்லை, மோரும் இல்லை என்ற வார்த்தையை வீட்டில் இருக்கும் பெண்களுடைய வாயிலிருந்து வராமல் இருப்பது நல்லது.

- Advertisement -

இதற்கு அடுத்தபடியாக சொல்வது ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்க வேண்டுமென்றால் அந்த வீட்டில் நெய்யும் தீராமல் தான் இருக்க வேண்டும். நெய் ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சத்தை தேடித்தரும் பொருள். பால் தயிராக, தயிர் மோராக, வெண்ணை எடுக்கப்பட்டு அதை உருக்கி நெய் செய்யப்படுகின்றது. ஒரு வீட்டில் நெய்யும் அவசியம் தேவைப்படும் ஒரு பொருள் தான். நம்முடைய சாப்பாட்டில் தினம்தோறும் ஒரு சொட்டு நெய் சேர்த்து சாப்பிடுவது நம் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

ghee

இதையெல்லாம் வீட்டில் வைத்து விட்டால் பணம் காசு தங்கி விடுமா என்ற சந்தேகங்கள் மனதில் எழுந்தால், இது உங்களுக்கான பதிவு அல்ல. வீட்டில் மகாலட்சுமி குடிகொள்ள, வீட்டில் செல்வம் நிலைத்திருக்க, வறுமை நீங்க, வீடு எப்போதுமே சுபிட்சமாக இருக்க கட்டாயம் வீடு என்று இருந்தால், பால் தயிர் மோர் நெய் வெண்ணெய் இப்படிப்பட்ட பொருட்களும் நிறைந்து இருக்க வேண்டியது அவசியம்.

annapoorani

இதோடு சேர்த்து முடிந்தால் உங்கள் வீட்டு அரிசி மூட்டை அல்லது அரிசி கொட்டி வைத்திருக்கும் டிரம்மில் ஒரு சிறிய அளவில், அன்னபூரணியின் சிலையை வாங்கி வையுங்கள். இது மேலும் சிறப்பினை தேடித்தரும். சிறிய அன்னபூரணியின் சிலையை வாங்கி அரிசியில் புதைத்து வைக்கும் போது, அந்த சிலையை படுக்க வைக்கக்கூடாது. அமர்ந்த நிலையில் வையுங்கள். வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் தூபம் போடும் போது அந்த அரிசி பானைக்கும் சேர்த்து ஒரு தூக்கத்தை போடுங்கள். உங்களுடைய வீடு காலாகாலத்திற்கும் வறுமையே பார்க்காமல் இருக்க இது ஒன்று மட்டுமே போதும். முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
ஒருபோதும் இப்படி மட்டும் இருந்து விடாதீர்கள்! உங்களிடம் முகராசி இல்லை என்றால் நடப்பதெல்லாம் பீடை பிடித்தது போல் ஆகிவிடும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.