உங்கள் வீட்டு மகாலட்சுமி, வீட்டில் இருந்து வெளியே செல்வதற்கு நீங்கள் செய்யும் இந்த தவறும் ஒரு காரணம் தான்.

mahalakshmi-selvam-gold-coins
- Advertisement -

வீட்டில் மகாலட்சுமி குடியேற வேண்டும் என்பதற்காக நாம் எத்தனையோ பரிகாரங்களை எத்தனையோ பூஜைகளை செய்து வருகின்றோம். ஆனால் அந்த பூஜைகள், அந்த பரிகாரங்கள் அனைத்தும் நமக்கு பலன் தர வேண்டும் என்றால், நாம் சில சாஸ்திர சம்பிரதாய முறைகளை கடைப்பிடித்து தான் ஆக வேண்டும். மகாலட்சுமி வருகைக்காக வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்கின்றோம். ஆனாலும் வீட்டில் இருக்கும் கஷ்டத்திற்கு விடிவு காலமே பிறக்கவில்லையே, என்று சொல்பவர்கள் வீட்டில் இந்த ஒரு விஷயத்தை மட்டும் கடைப்பிடித்து பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய வீட்டின் வறுமை நிலை மாறும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. சரி, நாம் கடைபிடிக்க வேண்டிய அந்த ஒரு விஷயம் என்ன தெரிந்து கொள்வோமா.

brammamuhoortham

மஹாலட்சுமி வீட்டிற்குள் வரக்கூடிய நேரம் என்றால் அது காலை பிரம்ம முகூர்த்த நேரம். அடுத்தபடியாக மகாலட்சுமி நம் வீட்டிற்குள் வரக்கூடிய நேரம் என்றால் மாலை 5.00 மணியிலிருந்து 7.00 மணிக்குள் இருக்கக்கூடிய சந்தியாகாலம் என்று சொல்லப்படும் மாலை நேரம்.

- Advertisement -

பெரும்பாலும் இதில் நிறைய பேர் பிரம்ம முகூர்த்த நேரத்தில் உறங்கிக் கொண்டுதான் இருப்பார்கள். முடிந்தவரை பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து வாசல் கதவைத் திறந்து வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைக்கும் வீட்டில் வறுமை என்ற வார்த்தைக்கு நிச்சயம் இடம் இருக்காது. முதலில் இதை கடைபிடியுங்கள்.

mahalakshmi3

அடுத்தபடியாக சந்தியா காலம் என்று சொல்லப்படும் மாலை 5 மணியிலிருந்து 7 மணிக்குள் மகாலட்சுமி நம் வீட்டிற்குள் வருகைதரும் நேரம். இந்த நேரத்தில், வீட்டின் வாசல் கதவை திறந்து வைத்து பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து மகாலட்சுமியின் நாம் வரவேற்க வேண்டும். குறிப்பிட்டுச் சொல்லப்படும் சந்தியா கால நேரத்தில், அதாவது மாலை 5 மணியிலிருந்து 7 மணிக்குள் உங்களுடைய கைகளால், உங்கள் வீட்டிலிருந்து எந்த பொருளையும் யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

மாலை 5 மணிக்கு முன்பாக கொடுக்க வேண்டிய காசாக இருந்தாலும் கொடுக்க வேண்டிய பொருளாக இருந்தாலும் கொடுத்துவிடுங்கள். அப்படி இல்லையா, மாலை ஏழு மணிக்குப் பிறகு, எட்டு மணிக்கு ஒன்பது மணிக்கு அந்த பொருளை கொடுப்பதன் மூலம் எந்த தவறும் கிடையாது. ஆனால் குறிப்பிட்டு சொல்லப்படும் அந்த சந்தியா காலமான மாலை நேரத்தில் 5 மணியிலிருந்து 7 மணிக்குள் உங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் பொருளை அடுத்தவர்களுக்கு கடனாக கூட கொடுக்கக் கூடாது.

இப்படி மாலை விளக்கு வைக்க கூடிய நேரத்தில் உங்கள் வீட்டில் இருந்து ஏதாவது ஒரு பொருள் வெளியே சென்றால், அந்தப் பொருளின் ரூபத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி வீட்டிலிருந்து வெளியே சென்று விடுவால் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

mahalashmi3

மாலை சந்தியா காலத்தில் நாம் பொருட்களை அடுத்தவர்களுக்கு கொடுப்பதன் மூலமாக மட்டும் பண கஷ்டம் வரும் என்று சொல்ல வரவில்லை. உங்களுடைய நேரமும் காலமும் சரியில்லாத சூழ்நிலையில் உங்களுடைய வீட்டில் வறுமை நிலை இருக்கும் சமயத்தில், இப்படிப்பட்ட தவறுகளை செய்யாமலிருப்பது உங்களுடைய குடும்பத்திற்கு நல்லது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -