மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி தெரியுமா ?

sivan

மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதி ராத்திரியையே நாம் மகா சிவராத்திரியாக கொண்டாடுகிறோம். இந்த நன்னாளில் சிவனை வேண்டி விரதம் இருப்பதால் எம பயம் நீங்குதல், தீர்த்த நோயில் இருந்து விடுபடுதல் போன்ற பல அறிய பலன்களை பெறலாம். மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

siva lingam

காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு வீட்டில் பூஜை செய்திட்டு அருகில் உள்ள சிவன் கோயிலிற்கு சென்று, “எம்பெருமானே நான் இன்று மகா சிவராத்திரி விரதம் இருக்க போகிறேன். என்னுடைய விரதத்தில் எந்த தடங்கலும் நேராமல் நான் இந்த விரதத்தை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு விரதத்தை தொடங்கலாம்.

விரதம் இருப்பவர்கள் முடிந்தவரை மூன்று வேலையும் உணவு உண்ணாமல் விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள் இருவேளை பால் பழம் மற்றும் ஒரு வேலை உணவு உண்ணலாம். நாள் முழுக்க “ஓம் நமசிவாய” என்னும் மந்திரத்தை ஜபித்தவாறே இருக்க வேண்டும். வேலைக்கு செல்பவர்கள் சிவனை நினைத்துக்கொண்டு வேலையை செய்யலாம்.

sivan

மாலையில் மீண்டும் சிவன் கோயிலிற்கு சென்று சிவனுக்கு நடக்கும் நான்கு கால வழிபாட்டில் கலந்துகொள்வது நல்லது. முதல் காலத்தில் சோமாஸ்கந்தரை வழிபடவேண்டும். இரண்டாம் காலத்தில் தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவரை வழிபடவேண்டும், நான்காம் காலத்தில் சந்திரசேகரரை(ரிஷபாரூடர்) வழிபட வேண்டும்.

sivan

இதையும் படிக்கலாமே:
குகையில் தானாய் தோன்றிய சிவன் வடிவம்.. குகை முழுக்க மர்மங்கள் ! எங்கு தெரியுமா ?

இப்படி முறையாக வழிபடுவதன் மூலம் ஒருவரது மகா சிவராத்திரி விரதம் முழுமையாக நிறைவடையும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் எண்ணிலடங்கா பல அறிய பலன்களை ஒருவர் பெறலாம். மகா சிவராத்திரி விரதம் இருக்கிறேன், சிவ ராத்திரி அன்று கண் விழைகிறேன் என்று கூறிவிட்டு இரவெல்லாம் குடும்ப கதை பேசுவது, சினிமா பார்ப்பது போன்ற செயல்களை செய்வதால் எந்த ஒரு பயனும் பெரிதாக இல்லை என்பதே உண்மை. ஆகையில் மகா சிவராத்திரி அன்று சிவனை முழு மனதோடு வழிபட்டு, சிவபெருமானின் அருளை முழுமையாக பெறுவோம்.