குக்கர் விசில் வழியாக பருப்பு வெளியே வருகிறதா? எவ்வளவு நேரம் ஆனாலும் குக்கர் விசில் சத்தம் கொடுக்கவில்லையா? அப்படின்னா இத ஃபாலோ பண்ணுங்க!

cooker

நாம் சமைக்கும் சமையலை வெகு விரைவாக நமக்கு செய்து கொடுப்பது இந்த குக்கர் தான். குக்கர் இல்லை என்றால் ஒவ்வொரு சமையலும் செய்வதற்கு நிறைய நேரம் எடுக்கும் என்பதை இந்த நவீன தாய்மார்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும். இத்தகைய குக்கர் வாங்கிய புதிதில் நன்றாக வேலை செய்யும். சிறிது காலம் சென்றவுடன் ஏதாவது ஒரு பிரச்சினைகளைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கும். இத்தகைய குக்கர் பிரச்சினைகளில் இருந்து விடுபட என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

pressure-cooker

குக்கர் சரியாக வேலை செய்ய அதிலிருக்கும் விசில் மற்றும் கேஸ்கட் மிகவும் முக்கியமானது. இந்த இரண்டு இடத்தில் பிரச்சனைகள் இருக்கும் பொழுது தான் குக்கர் சரியாக வேலை செய்யாமல் போகிறது. சில சமயங்களில் அடுப்பில் எவ்வளவு நேரம் வைத்திருந்தாலும், அதில் இருந்து விசில் சத்தமே வராது. அதன் மண்டையில் ‘லொட் லொட்’ என்று தட்டிக் கொண்டிருப்போம். இப்படி செய்தால் உங்கள் குக்கர் பிரஸர் வெளியேற முடியாமல் மூடி மேலே பறக்க வாய்ப்புகள் உள்ளது என்பதால் கவனம் தேவை.

அதே போல குக்கரில் பருப்பு போன்ற சமையல் வகைகளை சமைக்கும் போது விசில் வழியாக வெளியேறி விடும். இதனால் அந்த அடுப்பு முழுவதுமே நாசமாக்கி போய்விடும். இதை சரி செய்வதற்கே நமக்கு நேரம் சரியாக இருக்கும். இந்த பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு நாம் குக்கரை பற்றிய புரிதலை வைத்திருக்க வேண்டும். குக்கர் உடைய கேஸ்கட் சமைத்து முடித்ததும் தனியாக எடுத்து வைத்து விட வேண்டும். அதிலேயே மாட்டி வைத்திருந்தால் வெகுவிரைவாக லூஸ் ஆகி விடும்.

presure-cooker-lid

கேஸ்கட் எவ்வளவு இறுக்கமாக இருக்கிறதோ! அவ்வளவு வேகமாக சமைத்தும் கொடுக்கும். காஸ்கட்டை குக்கரில் இருந்து எடுத்து ஃப்ரீசரில் வைத்து விடுங்கள் உங்களுக்கு தேவைப்படும் பொழுது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் வெகு நாட்களுக்கு கேஸ்கட் மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. குக்கர் சரியாக விசில் விடவில்லை என்றால் விசில் வைக்கும் இடத்தில் ஏதாவது அடைப்பு இருக்கிறது என்று அர்த்தம்.

- Advertisement -

வாங்கிய புதிதில் நன்றாக இருந்தாலும் நாம் சமைக்க சமைக்க அதில் இருக்கும் பொருட்கள் விசில் வழியாக மாட்டிக் கொண்டு காய்ந்து போய் இருக்கலாம். இதனால் விசில் வராமல் போவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளன. இதனை சரி பார்க்க நமக்கு ஒரு வழி உள்ளது. அந்த சிறிய ஓட்டை வழியாக தண்ணீரை விட்டு பாருங்கள். தண்ணீர் நேராக வழிந்தால் எந்த ஒரு அடைப்பும் இல்லை என்று அர்த்தம், சொட்டு சொட்டாக வந்தால் அடைத்திருக்கிறது என்பது தெரிந்து விடும். சிறிய அளவிலான ஊசியை அதில் சொருகி சொருகி எடுத்து பாருங்கள். அதில் இருக்கும் அடைப்புகள் நீங்கி விடும்.

presure-cooker

அது போல காஸ்கட்டை ஒரு முறை எடுத்து தண்ணீரில் கழுவி விட்டு திருப்பிப் போட்டுப் பார்த்தால் அடிக்காத விசில் உடனே அடிக்கும். கேஸ்கட்டை எடுக்காமல் அதை கழுவ கூட இல்லாமல் நிறைய பேர் பயன்படுத்துவார்கள். காஸ்கட் இத்துப் போய் நைந்து போயிருக்கும். இது போல ஒரு பொழுதும் குக்கரை வைத்துக் கொள்ளக் கூடாது. கேஸ்கட்டை எடுத்து விட்டு குக்கர் மூடியை சுத்தமாக கழுவி பராமரிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. இவற்றை தொடர்ந்து கடைபிடித்தால் வெகுநாட்களுக்கு உங்கள் குக்கர் பிரச்சனை கொடுக்காமல் இருக்கும்.

இதையும் படிக்கலாமே
ஒரே ஒரு முறை, உங்கள் உதட்டில் இந்த ஒரு பொருளை மட்டும் தடவி பாருங்கள்! எப்படிப்பட்ட கருப்பான உதடும், நிரந்தரமாக ஒரே நாளில் பிங்க் நிறத்துக்கு மாறும்.

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.