உங்க வீட்டு மல்லிகை பூச்செடி கொத்துக் கொத்தாக பூத்து குலுங்க ஆசையா இருக்கா? இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்களேன்!

jasmin2

சில பேர் வீட்டில் வைத்திருக்கும் மல்லிகை பூ செடிகளில் மொட்டுக்கள் கொத்துக் கொத்தாக அழகாக பூத்துக் குலுங்கி கொண்டே இருக்கும். சில பேருடைய வீடுகளில் செடிகள் செழிப்பாக வளரும். ஆனால் மொட்டுக்கள் வைக்காது. பூக்கள் பூத்துக் குலுங்காது. உங்கள் வீட்டில் இருக்கும் மல்லிகை பூ செடியை தொட்டியில் வைத்திருந்தாலும் சரி, மண்ணில் வைத்திருந்தாலும் சரி, பின் சொல்லப்படக்கூடிய குறிப்புகளை சரியான முறையில் பின்பற்றினாலே போதும். மல்லிகை பூ செடியில் கொத்து கொத்தாக பூக்கள் பூத்து குலுங்கும்.

malli

முதலில் மல்லிகை பூச்செடி நேரடி வெயிலில் தான் இருக்கவேண்டும். நிழலில் இருந்தால் இலைகள் செழிப்பாக பச்சையாக வளராது. இரண்டாவதாக மல்லிப்பூ செடியை புதியதாக வைத்தவுடன் அது வளர்ந்து வரும்போது, வருடத்திற்கு இரண்டு முறையாவது செடிகளின் இலைகளை நன்றாக வெட்டிவிட வேண்டும். கிளைகளை வெட்ட வெட்ட தான் புதிய துளிர் விட தொடங்கும்.

செடிகள் ஓரளவிற்கு நன்றாக வளர்ந்த பின்பு, வருடத்திற்கு ஒருமுறை அக்டோபர் மாதத்தில் செடிகளின் கிளைகளை நன்றாக வெட்டிவிட்டால், மல்லிகைப்பூ சீசன் வரும்போது உங்கள் வீட்டு செடியில் இருக்கும் அத்தனை கிளைகளிலும் நிச்சயம் மொட்டுக்கள் கொத்துக்கொத்தாக வைக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை.

malli1

மல்லிகைப் பூ செடிக்கு செம்மண் பயன்படுத்துவது மிகவும் நல்லது. 15 நாட்களுக்கு ஒருமுறை மண்ணை நன்றாக கிளறிவிட்டு, உரம் போடவேண்டும். குறிப்பாக வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு இந்த இரண்டையும் செடிகளுக்கு உரமாக கொடுக்கலாம். முந்தைய நாளே இந்த புன்னகை தண்ணீரில் ஊறவைத்து, அந்த தண்ணீரை செடிகளுக்கு கொடுப்பது மிகவும் நல்லது. மண்ணை கிளறி விட மறந்துவிடாதீர்கள்.

- Advertisement -

உங்கள் வீட்டு மல்லி செடிக்கு எறும்புகள் தேடி வருகிறது என்றால், அந்தச் செடிகளை இன்னும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற பூச்சிகளின் முட்டைகள், பூச்சிகள் செத்து போய் இருந்தால் தான் அதை எடுக்க எறும்புகள் வருகை தரும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் செடிகளுக்கு மேலே கொஞ்சமாக மஞ்சள் பொடியை தூவி விடுவது மிகவும் நல்லது.

jasmin1

மல்லிப்பூ செடிகளுக்கு தண்ணீர் அடிக்கும் போது ஒரு ஹோஸ் பைப்பில், பிரஷரோடு வேகமாக தண்ணிர் அடித்தால், இலைகளில் தங்கியிருக்கும் பூச்சிகள் இலைகளை விட்டு நீங்கி விடும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. செடிகள் ஈரமாக இருக்கும் போதே கொஞ்சமாக மஞ்சள் பொடியை செடிகளின் மீது தூவி விட்டால் செடிகளில் இருக்கும் இலைகளில் அந்த மஞ்சள் பொடி ஒட்டிக்கொள்ளும் பூச்சிகள் தாக்க வாய்ப்பு குறையும்.

Turmeric

அடுத்தபடியாக செடிகளுக்கு அமிலத் தன்மை குறைவாக இருந்தாலும், செடிகளில் நிறைய மொட்டுகள் வைக்காது. உங்களுடைய வீட்டுச் செடியில் மொட்டுக்கள் வைக்கவில்லை என்றால், ஒரு லிட்டர் அளவு தண்ணீரில், படிகாரத்தை 10 கிராம் அளவு கலந்து, கரைத்து செடிகளுக்கு வேர் பகுதிகளுக்கு கொடுக்கலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் படிகாரத்தை வாங்கி நன்றாகப் பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

padikaram1

30 நாட்களுக்கு ஒருமுறை இந்த படிகார தண்ணீரை செடிகளுக்கு ஊற்றி வரும் பட்சத்தில், உங்கள் மல்லிகை பூச்செடி நிறைய மொட்டுக்கள் வைக்கும். வெள்ளை நிறத்தில் மல்லிகை பூக்கள் பூத்துக் குலுங்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை. உங்களுக்கு இந்த குறிப்புகள் பிடித்திருந்தால் உங்கள் வீட்டு மல்லிகை செடிகளுக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
சமையலறையில் உப்பை இந்த இடத்தில் மட்டும் வைக்கவே கூடாது. வீட்டில் கஷ்டம் உள்ளவர்கள் இந்த ஒரு மாற்றத்தை மட்டும் செய்து பாருங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.