14ஆண்டுகள் கழித்து நான் இப்படியெல்லாம் சொல்லகூடாது -தொடர்நாயகன் விருதினை பெற்ற தோனி பேட்டி

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று (18-01-2019) நடந்து முடிந்தது. இந்திய அணி இந்தப்போட்டியை வெற்றிகரமாக முடித்து இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்தது.இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடு கிரிக்கெட் வீரர்களும், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகிய அனைவரும் இந்திய அணியை சமூக வலைத்தளம் வாழ்த்திய படி உள்ளனர்.

msd

நேற்று நடந்த பரிசளிப்பு விழாவின் போது தொடர் நாயகன் விருதினை மஹேந்திர சிங் தோனிக்கு அறிவித்தனர். பிறகு, விருதினை பெற்றுக்கொண்ட தோனியிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது அவை அனைத்திற்கும் பதிலளித்தார் தோனி. அந்த கேள்விகள் மற்றும் தோனியின் பதில்கள் இதோ

- Advertisement -

கேள்வி – நீங்கள் உலககோப்பையில் எந்த வரிசையில் களமிறங்குவீர்கள்? தோனி – நான் எந்த இடத்தில இறங்குகிறேன் என்பது ஒரு பிரச்சனை இல்லை. நான் அணியின் தேவைக்காக எந்த இடத்திலும் களமிறங்கி விளையாட தயார். அணியின் நலம் கருதி என்னை எந்த இடத்தில் பேட் செய்ய பணித்தாலும் நான் களமிறங்குவேன் என்றார்.

ms

கேள்வி – இந்த இடத்தில தான் ஆட வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? தோனி – நான் கடந்த 14 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடிவருகிறேன். அணியின் தேவைக்கேற்ப வெவ்வேறு இடத்தில் களமிறங்கினேன். ஆனால், இப்போது 14ஆண்டுகள் கழித்து எனக்கு 6ஆம் வரிசை பேட்டிங் தேவையில்லை. 4ஆம் வரிசை பேட்டிங் தான் வேண்டும் அப்படி என்றெல்லாம் என்னால் சொல்ல இயலாது. எனவே, எந்த இடத்திலும் நான் இறங்க தயார் என்று கூறினார் தல தோனி.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

நியூசிலாந்து தொடருக்கு முன் ஒரு நாள் விடுப்பு எடுத்த கோலி. எங்கு சென்றிருக்கிறார் தெரியுமா ? அதுவும் இவருடனா ?

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -