பணமெல்லாம் தேவைக்கு அதிகமாகவே இருக்குதுங்க! மனநிம்மதியை பெறுவதற்கு ஏதாவது வழி உண்டா? என்று கேட்பவர்களுக்காக மட்டும் இந்த பதிவு.

perumal

சிலபேருக்கு தேவைக்கு அதிகமாகவே பணம் இருக்கும். சிலபேருக்கு தேவைக்கு ஏற்ப பணம் இருக்கும்‌. ஆனால், மன நிம்மதி என்பது ஒரு துளி கூட இருக்கவே இருக்காது. சில பேருக்கெல்லாம் தேவைக்கு குறைவாக பணம் இருந்தாலும், மன நிம்மதியும், அமைதியான வாழ்க்கையும் நிலவும். உங்களுடைய வாழ்க்கையில் மன நிம்மதியை பெற என்ன வழிபாடு செய்ய வேண்டும். அந்த வழிபாட்டை எந்த முறையில் செய்தால் உடனே பலன் அடையலாம், என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

perumal-1

இந்த வழிபாடு பெருமாலையும் மகாலட்சுமியும் வேண்டி செய்யக்கூடிய வழிபாடு. விஷ்ணு பகவானின் நெஞ்சத்தில், மகாலட்சுமி நிரந்தரமாக நிம்மதியாக வாசம் செய்கின்றாள். ஆகவே, பெருமாளும் தாயாரும் சேர்ந்திருக்கும் திருவுருவப்படம் கட்டாயம் உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்க வேண்டும்.

அந்த திருவுருவப் படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து விட வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று காலையில் எழுந்து, பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே குளித்து முடித்து, சுத்தமாகி விட்டு, இந்த பூஜையை தொடங்கி விட வேண்டும். முடிந்தவரை காலை 7.00 மணிக்கு முன்பாக பூஜையை செய்து முடித்து விடுங்கள்.

perumal

பூஜைக்குத் தேவையான பொருட்கள், வாசனை நிறைந்த மல்லிகை பூ கட்டாயம் 101 இருக்க வேண்டும், சுத்தமான பன்னீர், குங்குமம், மஞ்சள், துளசி இலைகள் 2. ஒரு அகலமான பாத்திரத்தில் கொஞ்சம் பன்னீர் ஊற்றி, அதில் ஒரு சிட்டிகை மஞ்சள், ஒரு சிட்டிகை குங்குமம், துளசி இலைகள், எடுத்து வைத்திருக்கும் மல்லிகை பூ இவைகளை மொத்தமாக போட்டுவிட வேண்டும். 2ஸ்பூன் பன்னீர் இருந்தால் மட்டுமே போதும்.

- Advertisement -

கிண்ணத்திலிருந்து ஒவ்வொரு பூவாக எடுத்து மகாலட்சுமி தாயாருக்கும், பெருமாளுக்கும் அர்ச்சனை செய்ய வேண்டும். குறிப்பாக இந்த மந்திரத்தைச் சொல்லி 101 முறை உச்சரித்து அர்ச்சனை செய்யவேண்டும். இப்படியாக தொடர்ந்து மூன்று வெள்ளிக்கிழமைகள் செய்து பாருங்கள். எப்படிப்பட்ட மன உளைச்சலாக இருந்தாலும், அந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வு கிடைக்கும். உங்களுக்கான மன நிம்மதியை பெற்றுத் தரக்கூடிய மந்திரம் இதோ!

malligai poo

ஓம் வரப்ரதாய நமஹ!
ஓம் பக்தவத்ஸலாய நமஹ!
ஓம் ஆகாச ராஜ வரதாய நமஹ!

happy-family

காசு பணத்தை எப்பாடுபட்டாவது சம்பாதித்து விடலாம். ஆனால், மனநிம்மதியை எங்கு சென்றாலும் காசு கொடுத்து வாங்க முடியாது. அப்படிப்பட்ட மன நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாமல் இன்று பலபேர் தவித்து வருகிறார்கள். கோடி ரூபாய் காசு இருந்தாலும், அதை ஆண்டு அனுபவிக்க மகிழ்ச்சியான சூழ்நிலையில், மன அமைதியும், சந்தோஷமான குடும்பமும் ஒருவருக்கு கட்டாயம் இருக்க வேண்டும். லட்சுமி கடாட்ச தோடு சேர்ந்த, மன அமைதியை விரும்பும் எல்லோரும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
ஆவணி ‘ஞாயிறு’ விரதம் யாரெல்லாம் மேற்கொள்ளலாம்? அன்றைய நாளில் அசைவம் சாப்பிடாமல் இருப்பதன் ரகசிய காரணம் என்ன?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.