மனக் கவலையை மறக்கச் செய்யும் மகா மந்திரம். இந்த ஒரு மந்திரத்தை உச்சரித்து வர உங்களுடைய முகத்தில் சந்தோஷமும் சிரிப்பும் எப்போதும் நிலையாக இருக்கும்.

- Advertisement -

கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால் நமக்கு இருக்கும் துன்பம் நீங்கிவிடும் என்று யார் சொன்னது. ‘துன்பம் வரும் போது சிரி’ என்ற ஒரு பழமொழியை நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் கட்டாயமாக துன்பத்தில் சிரித்தால் அது உண்மையான சிரிப்பாக சந்தோஷமாக இருக்காது. ஆனால் நிஜமாகவே துன்பம் வரும் போது மனதை தேற்றிக் கொண்டு சிரிப்பவர்களுடைய வாழ்வு சிறப்பாகும் என்பது தான் உண்மை. கவலைப்படும் போது முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு மனதை வருத்தி அழுதுகொண்டே இருக்கும் போது கவலை இரட்டிப்பாகுமே தவிர என்றுமே குறையாது.

இந்த கஷ்டம் எதனால் வந்தது, இந்த கஷ்டம் வருவதற்கு நாம் என்ன தவறு செய்தோம் என்று யோசித்து ஆராய்ந்து அதற்கான தீர்வை தேட வேண்டும். அப்போதுதான் கவலை நீங்கும். பொதுவாகவே வாழ்வில் நமக்கு வரக்கூடிய எல்லா வகையான பிரச்சனைக்குமே சித்தர்களால் தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தீர்வு நமக்கு தெரியாமல் இருக்கும். இதுநாள் வரை நமக்குத் தெரியாத சித்தர்களால் அருளப்பட்ட மனநிம்மதியை கொடுக்கக்கூடிய ஒரு அற்புத மந்திரத்தை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

மன கவலையோடு சோர்வோடு முகத்தில் சிரிப்பு இல்லாமல் துன்பமாக எப்போதுமே வாடி வதங்கி தான் உங்கள் முகம் இருக்குமா? அப்ப நீங்க தான் இந்த மந்திரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தை முதலில் நினைத்துக் கொண்டு பின்பு கோரக்கர் சித்தரை மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

பூஜை அறையிலேயே ஒரு விரிப்பு விரித்து அமர்ந்து கொண்டு, முடிந்தால் உங்களுடைய கையில் இரண்டு துளசி இலைகளை வைத்துக் கொண்டு ‘ஓம் கோரட்ச சித்தாய நம’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மனதார கோரக்க சித்தரை நினைத்து இந்த மந்திரத்தை 27 முறை உச்சரித்தால் உங்களுடைய மனக்கவலை நீங்கும். துன்பங்கள் நீங்கும். துன்பம் வந்தாலும் உங்களுடைய முகம் சுருங்கி போகாது. அதை எதிர்கொண்டு எப்படி சமாளிக்க வேண்டும் என்ற தைரியம் கிடைத்துவிடும்.

- Advertisement -

இந்த உலகத்திலேயே மனக்கவலையை விட ஒரு பெரிய வியாதி வேற எதுவுமே கிடையாது. முதலில் நமக்குள் மனக்கவலை வந்துவிட்டால், அதன் பின்பு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய் முடி கொட்டுவது கண் பார்வை குறைவது, தோல் சுருங்கி போவது, ஞாபக சக்தி குறைவது போன்ற எல்லா பிரச்சனைகளும் நம்மைத் தேடி வந்து விடும்.

வாழ்நாள் முழுவதும் நாம் இளமையாக ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் மனக் கவலையில் இருந்து விடுபட்டு எந்த நேரத்திலும் மனதார வாயார சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். ‘என்னுடைய கவலைகள் எல்லாம் தீர்ந்த பின்பு தான் நான் சிரிப்பேன், சந்தோஷமாக இருப்பேன் என்றால்’ அது நிச்சயமாக ஆயுள் முழுதும் நடக்காது. நன்றாக புரிந்துகொள்ளுங்கள், வாழ்வை வாழும்போதே அனுபவிப்பது தான் புத்திசாலித்தனம். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -