கஷ்டங்களை தீர்க்கக் கூடிய அம்மனாக திகழ்பவள்தான் வாராகி அம்மன். வாராகி அம்மனுக்குரிய திதியாக பஞ்சமி திதி திகழ்கிறது. அதுவும் மாசி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை பஞ்சமி திதியானது பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி மாசி மாதத்தின் 5ஆம் நாள் வருகிறது. அன்றைய தினத்தில் நம்முடைய மனக்குறையை நீக்கவும் பணக்குறையை நீக்குவதற்கும் வாராகி அம்மனை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
மனக்குறையும் பணக்குறையும் தீர
சப்த கன்னிகளில் ஒருவராக திகழக்கூடியவர் வாராகி அம்மன் என்றும் அவள் உக்கிர தெய்வமாக கருதப்படுகிறாள் என்றும் வாராகி அம்மனை முழுமனதோடு வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருக்கக் கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும் என்றும் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் பலரும் பஞ்சமி திதியில் வாராகி அம்மனை வழிபாடு செய்கிறார்கள். அந்த வகையில் திங்கட்கிழமை அன்று மாசி மாதத்தின் தேய்பிறை பஞ்சமி வருகிறது. அன்றைய தினத்தில் நாம் நம்முடைய வீட்டிலேயே வாராகி அம்மனுக்கு இந்த ஒரு மாலையை சாற்றி வழிபாடு செய்தால் போதும்.
வீட்டில் வாராஹி அம்மனின் படம் இருந்தாலும் சிலை இருந்தாலும் இந்த வழிபாட்டை செய்யலாம். ஒரு வேளை படம் சிலை வைக்கும் பழக்கம் இல்லை தீபம் ஏற்றி வைத்து தான் வழிபாடு செய்கிறோம் என்றால் அந்த தீபத்திற்கும் இந்த மாலையை சாற்றி நாம் வழிபாடு செய்யலாம். இந்த மாலையை சாற்றுவதற்கு நமக்கு தேவைப்படக்கூடிய ஒரு பொருள்தான் வசம்பு. இது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதன் பெயரை கூறக்கூடாது என்றும் பெயர் சொல்லாதது என்று தான் கூற வேண்டும் என்றும் நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.
இதற்கு அதிக அளவில் பணத்தை வசியம் செய்யக்கூடிய சக்தி என்பது இருக்கிறது. இதை எந்தவித பேரமும் பேசாமல் நாட்டு மருந்து கடையிலிருந்து வாங்கி வாருங்கள். பெரிய பெரிய துண்டுகளாக தான் இது கிடைக்கும். இதை தண்ணீரில் ஊறவைத்து சிறு சிறு துண்டுகளாக 7, 9, 21 என்ற எண்ணிக்கையில் நறுக்கிக் கொள்ளுங்கள். ஊற வைத்தால் தான் இதை நறுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு இந்த பெயர் சொல்லாததற்கு சந்தனத்தை முழுவதுமாக தடவி அதற்கு நடுவே குங்குமத்தை வைத்து மஞ்சள் நிற நூலால் மாலையாக கட்டிக் கொள்ளுங்கள்.
எந்த நேரத்தில் நீங்கள் பஞ்சமி திதி அன்று வாராஹி அம்மனை வழிபாடு செய்கிறீர்களோ அந்த நேரத்தில் இந்த மாலையை வாராகி அம்மனுக்கு சாற்றி நீங்கள் எப்பொழுதும் எப்படி வழிபாடு செய்வீர்களோ அப்படி வழிபாடு செய்து கொள்ளலாம். வாராகி அம்மனுக்கு பிடித்தமான நெய்வேத்தியங்களை வைத்து பஞ்சமுக தீபமேற்றி வழிபாடு செய்யும் வழக்கம் இருந்தாலும் தேங்காய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் வழக்கம் இருந்தாலும் உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் வழிபாடு செய்து கொள்ளுங்கள். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விடுவீர்கள்.
மூன்றாவது நாள் அதாவது புதன்கிழமை அன்று இந்த மாலையை எடுத்து இந்த பெயர் சொல்லாததை பொடி செய்து சாம்பிராணி தூபம் போடுவதற்காக சாம்பிராணி வைத்திருப்போம் அல்லவா? அதனுடன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். வீட்டில் எப்போதெல்லாம் சாம்பிராணி தூபம் காட்டுகிறீர்களோ அப்பொழுதெல்லாம் இந்த பெயர் சொல்லாததையும் சேர்த்து நாம் காட்டும் பொழுது வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் முற்றிலுமாக நீங்கி வாராகி அம்மனின் அருளால் பணவசியம் உண்டாவதோடு நம்முடைய மனக் குறையும் பணக்குறையும் தீரும்.
இதையும் படிக்கலாமே:பண வரவை அதிகரிக்கும் மாசி சங்கடஹர சதுர்த்தி
பல மருத்துவ குணம் நிறைந்த இந்த ஒரு பொருளை வாராகி அம்மனுக்கு சாற்றி நாம் வழிபாடு செய்வதன் மூலம் யாரிடமும் சொல்ல முடியாத மனக்கவலை கூட முற்றிலும் நீங்குவதோடு பணவரவும் அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.