புதுசா ஒரு விஷயத்தில் அடி எடுத்து வைப்பதற்கே, உங்கள் மனம் பயப்படுமா? தடுமாற்றம் இல்லாத, உறுதியான முடிவெடுக்கும் துணிச்சல் பெற, இந்த வழிபாட்டை செய்து பாருங்கள்!

mudra temple

ஜெயிப்பது தோற்பது என்பது இரண்டாவது விஷயம். முதலில் நம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு முயற்சியை எடுக்கின்றோமா என்பதை முதலில் நாம் சிந்திக்க வேண்டும். சிலரெல்லாம், சில விஷயங்களை தொடங்கிய பின்பு, தோல்வி அடைவார்கள். அது பரவாயில்லை! எதுவுமே செய்யாமல் சும்மாவே இருந்து தோற்றுப் போவதை விட, எதையாவது முயற்சி செய்து தோல்வி அடைவது என்பது ரொம்ப நல்ல விஷயம். உங்களுடைய மனசு எந்த செயலை தொடங்குவதற்கு முன்பாகவும், அலைபாய்ந்து கொண்டே, பயந்து கொண்டே இருக்குமா? எந்த ஒரு காரியத்தையும் விரைவாகத் தொடங்க, துணிச்சலும், தைரியமும் உங்களிடம் இல்லையா? தோற்று விடுவோமோ என்ற பயம், உங்கள் வாழ்க்கையை முன்னேற விடாமல் தடுக்கின்றதா? துணிச்சலான மனதை பெற, தொடர்ந்து 21 நாட்கள் இந்த பரிகாரத்தை முயற்சி செய்து தான் பாருங்களேன்!

virutcham-temple

இந்தப் பரிகாரத்தை செய்ய தொடங்கிய பின்பு, உங்களுடைய மனதில் தைரியம் துணிச்சல் அதிகரிப்பது போல உணர்வை நீங்கள் அடைந்தால், தொடர்ந்து பரிகாரத்தை செய்து வரலாம். இது ஒரு பரிகாரம் கூட அல்ல. மனநிறைவான வழிபாடு. மன நிறைவான தியான பயிற்சி. எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம். அது என்ன பயிற்சி?எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாமா?

கட்டாயம் நம்முடைய வீட்டின் அருகில் கோவில்கள் இருக்கும். குறிப்பிட்டு சொல்லப்போனால், கொஞ்சம் பழமை வாய்ந்த கோவில்களில் தலவிருட்சங்கள் இல்லாமல் இருக்காது. குறைந்தபட்சம் வேப்பமரம் மட்டுமாவது இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. மிகவும் பழமையான கோவில்களில் வன்னி, மரம், வில்வ மரம், ஆல மரம், அரச மரம், அத்தி மரம், வேப்ப மரம், போன்ற பழமையான மரங்களை தலவிருட்சமாக வைத்திருப்பார்கள்.

thalavirutcham

நீங்கள் செய்ய வேண்டியது காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, 6.30 மணியிலிருந்து 7.30 முப்பது மணிக்குள் தல விருட்சம் இருக்கும் கோவிலுக்கு செல்ல வேண்டும். ஒரு டம்ளர் அளவு பசும்பால் கிடைத்தால் கூட போதும். அந்த பசும்பாலை கொண்டு போய் அந்த தல விருட்சத்தின் வேர்ப்பகுதியில் ஊற்றிவிட்டு, அந்த மரத்தடியிலேயே அமர்ந்து உங்களுக்கு விருப்பமான கடவுளை மனதில் நினைத்து, எந்த மந்திரம் உங்களுக்கு தெரியுமோ அந்த மந்திரத்தை உச்சரிக்கலாம்.

- Advertisement -

ஸ்ரீராமஜெயம், ஓம்சக்தி, ஓம் முருகா, ஓம் நமசிவாய, இப்படியாக உங்களுக்கு தெரிந்த இறைவனின் பெயரை சொல்லி கண்களை மூடி பத்து நிமிடங்கள் அமர்ந்து மூச்சை உள்வாங்கி விட்டாலே போதும். உடல் ஆரோக்கியம் பெறும். உங்கள் உடம்பிலும், மனதிலும் உள்ள கேட்டது வெளியே பறந்து போய்விடும். நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். மன உறுதி, தைரியம் துணிச்சல் தானாக உங்கள் உடம்புக்குள் வந்துவிடும். பிறகென்ன? நீங்கள் எடுக்கக் கூடிய காரியங்கள் எல்லாமே வெற்றிதான்.

shivan

நான்கிலிருந்து ஐந்து நாட்கள் தொடர்ந்து இந்த வழிபாட்டை செய்து வரும்போதே உங்கள் உள்உணர்வு ஒரு புத்துணர்ச்சி பெற்று, உங்களை அறியாமலேயே தினம்தோறும் இந்த தியானத்தை செய்ய வேண்டும் என்று, உங்களுடைய ஆழ்மனது நினைக்கத் தொடங்கி விடும். கஷ்டப்பட்டு பத்து நாட்கள் தொடர்ந்து செய்து விடுங்கள். அதன் பின்பு, உங்கள் கால்கள் தானாக,  தினம் தோறும் கோவிலை தேடி செல்லும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
கோயிலில் கொடுக்கப்படும் குங்கும பிரசாதத்தை இனி தெரியாமல் கூட இப்படி செய்து விடாதீர்கள். அதிர்ஷ்டம் போய்விடுமாம்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.