இன்று பஞ்சமி திதி மாலை 5 மணி வரை இருக்கிறது. பஞ்சமி என்றாலே அது வாராகி அம்மனுக்கு உகந்த திதியாக கருதப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமையும் கூட. ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்ந்து வரக்கூடிய பஞ்சமி திதி அன்று வாராஹி அம்மனை நாம் வழிபாடு செய்வது என்பது நமக்கு பல நன்மைகளை தரும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த இந்த நாளில் வாராகி அம்மன் ஆலயத்திற்கு எந்த பொருளை வாங்கி கொடுத்தால் மன மகிழ்ச்சியுடன் நிம்மதியாக வாழ முடியும் என்பதை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மனமகிழ்ச்சி உண்டாக பரிகாரம்
நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி நமக்கு தீங்குகள் விளைவிக்க கூடிய நபர்களை ஒன்றும் இல்லாமல் ஒழிக்கக்கூடிய தெய்வமாக திகழ்பவள் தான் வாராகி அம்மன். நமக்கு எப்பேர்பட்ட கஷ்டங்கள் ஏற்பட்டாலும் அந்த கஷ்டங்கள் அனைத்தையுமே தீர்க்கக்கூடிய அற்புதமான தெய்வம் ஆக தான் வாராகி அம்மன் திகழ்கிறாள். அப்படிப்பட்ட வாராகி அம்மனுக்கு உரிய திதியான பஞ்சமி திதி தான் இன்று மாலை ஐந்து மதிய வரை இருக்கிறது.
அதோடு மட்டுமல்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை கூட. ஞாயிற்றுக்கிழமையுடன் பஞ்சமி திதி சேர்ந்து வரக்கூடிய இந்த நன்னாளில் வாய்ப்பு கிடைப்பவர்கள் அனைவரும் அருகில் இருக்கக்கூடிய வாராகி அம்மனின் ஆலயத்திற்கு சென்று வாராகி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். வீட்டில் வாராஹி அம்மனின் சிலை வைத்து வழிபாடு செய்பவராக இருந்தாலும் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்புக்குரியது.
அப்படி ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்கள் தங்களுடன் தங்களால் இயன்ற அளவு சுத்தமான பசு நெய்யை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். அந்த பசு நெய்யை வாராகி அம்மனின் ஆலயத்தில் வழிபாடு செய்து முடித்துவிட்டு அங்கு கொடுத்துவிட்டு வரவேண்டும். வாராகி அம்மனின் ஆலயம் இல்லை ஆனால் மற்ற ஆலயங்களில் வாராகி அம்மனின் சன்னதி இருக்கிறது என்று நினைப்பவர்கள் வாராகி அம்மனின் சன்னதிக்கு இந்த நெய்யை தர வேண்டும்.
அவர்கள் இந்த நெய்யை விளக்கேற்ற உபயோகப்படுத்தினாலும் பரவாயில்லை, அதேசமயம் சமையலுக்கு உபயோகப்படுத்தினாலும் பரவாயில்லை, அபிஷேகம் செய்வதற்கு உபயோகப்படுத்தினாலும் பரவாயில்லை. ஆனால் மாலை 5 மணிக்குள் அதாவது பஞ்சமி திதி முடிவதற்குள் தங்களால் இயன்ற அளவு பசு நெய்யை வாங்கி வாராகி அம்மனுக்கு தருவதன் மூலம் நம் மனதில் இருக்கக்கூடிய கவலைகள் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் வாழ முடியும்.
இதையும் படிக்கலாமே:வேதனை தீர பஞ்சமி தீபம்
தங்களால் 50 கிராம் நெய் தான் வாங்கி தர முடியும் என்றாலும் பரவாயில்லை, இயன்ற அளவு இன்றைய தினத்தில் வாராகி அம்மனுக்கு பசு நெய்யை வாங்கித் தந்து வழிபாடு செய்வதன் மூலம் வாராகி அம்மனின் அருளால் மன மகிழ்ச்சி பெருகும், நிம்மதி உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.