நமக்கு கஷ்டங்கள் ஏற்படும் நேரத்தில் நம்மை அறியாமல் நாம் அழைக்கக்கூடிய ஒரு பெயர் என்றால் அது அம்மா தான். ஐந்தறிவு ஜீவராசிகள் கூட அம்மா என்று அழைக்கின்றனர். அந்த வகையில் இந்த உலகத்திற்கே தாயாக திகழக்கூடியவள் தான் வாராஹி அம்மன். வாராதி அம்மனை ஒருவர் முழுமனதோடு வழிபட்டார் என்றால் அவருடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக விலகி நல்ல ஒரு முன்னேற்றகரமான வாழ்க்கை அமையும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் நம்முடைய வேதனைகள் அனைத்தும் வந்த வழியே திரும்பி செல்வதற்கு ஏற்ற வேண்டிய ஒரு தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வேதனை தீர பஞ்சமி தீபம்
சதுர்த்தி திதி முடிவடைந்த உடன் தொடங்கக்கூடிய திதி தான் பஞ்சமி திதி. பஞ்சமி என்பது வாராகி அம்மனுக்கு உகந்த திதியாக கருதப்படுகிறது. வளர்பிறை பஞ்சமி ஆக இருந்தாலும், தேய்பிறை பஞ்சமியாக இருந்தாலும் இந்த பஞ்சமி திதி வரும் நாட்களில் வாராகி அம்மனை முழுமனதோடு வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. பல முறைகளில் வழிபாடு செய்யும் பழக்கம் என்பது இருக்கும். அந்த வகையில் பஞ்சமி திதியில் நாம் செய்யக்கூடிய ஒரு தீப வழிபாட்டை பற்றி தான் பார்க்க போகிறோம்.
பொதுவாக பஞ்சமி திதி அன்று வாராகி அம்மனுக்கு ஐந்து முக தீபம் ஏற்றி வழிபாடு செய்வது, மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வது என்று பலவகையான தீபங்களை ஏற்றுவோம். ஐந்து முக தீபம் ஏற்ற முடியாதவர்கள் ஐந்து அகல் விளக்கில் தனித்தனியாக தீபம் ஏற்றும் வழிபாடு செய்வார்கள். அதே போல் வாராகி அம்மனுக்கு பிடித்தமான கிழங்கு வகைகள், பானகம் போன்றவற்றை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்யும் வழக்கமும் இருக்கிறது. அந்த வகையில் ஒரு சிறிய தீப வழிபாடு நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய வேதனைகளை தீர்க்கும் என்று கூறப்படுகிறது.
இந்த தீபத்தை பஞ்சமி திதி வரும் நாட்களில் செய்ய வேண்டும். இன்று 3:40 மணிக்கு மேல் பஞ்சமி திதி தொடங்கி நாளை 5 மணி வரை இருக்கிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் வாராகி அம்மனுக்கு இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்யலாம். அதிலும் குறிப்பாக இன்று இரவு தீபம் ஏற்றி வழிபாடு செய்வது என்பது சிறப்பு. அப்படி இன்று இரவு தீபம் ஏற்ற முடியாதவர்கள் நாளை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த தீபத்தை ஏற்றி வைத்து வாராகி அம்மனை வழிபாடு செய்யலாம்.
இதற்கு ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிவப்பு நிற மலர்களை முழுவதுமாக பரப்பி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு அகல் விளக்கில் மூன்று இடங்களில் சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். அந்த அகல் விளக்கை சிவப்பு நிற பூக்களுக்கு நடுவே வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு வடக்கு திசை பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். இப்படி தீபம் ஏற்றி முடித்த பிறகு அந்த தீபத்தை பார்த்தவாறு வாராகி அம்மனிடம் உங்களுடைய வேதனைகள் அனைத்தையும் கூற வேண்டும்.
ஒரு குழந்தை பெற்ற தாயிடம் எந்த அளவிற்கு மனம் விட்டு பேசுவார்களோ அந்த அளவிற்கு வாராகி அம்மனிடம் நாம் பேச வேண்டும். இப்படி நம்முடைய வேதனைகளை நாம் இந்த தீபத்தை ஏற்றி வைத்து கூறும்பொழுது வாராகி அம்மன் மனம் இறங்கி வந்து நம்முடைய வேதனைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பார் என்று கூறப்படுகிறது. இந்த தீபத்தை ஒரு மணி நேரம் எரிய விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே:தரித்திரம் நீங்கி ஐஸ்வர்யம் சேர குரு ஹோரை
மிகவும் எளிமையான இந்த தீப வழிபாட்டை வாராகி அம்மனுக்குரிய பஞ்சமி திதி அன்று வாராஹி அம்மனை மனதார நினைத்து வீட்டில் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய மன வேதனைகள் அனைத்தும் படிப்படியாக நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.