உங்கள் வாழ்வில் ஏற்படும் எத்தகைய பிரச்சனைகளும் தீர இவற்றை செய்யுங்கள்

vel-poojai

முருகப்பெருமானுக்குரிய ஆயுதமாக இருப்பதுதான் வேல். தீய சக்திகளின் அம்சமான அரக்கர்களை ஒழித்து, நன்மைகளை அருளும் அந்த வேல் முருகனின் அம்சமாகவே பாவிக்கப்பட்டு வணங்கப்படுகிறது. கோயில்களில் செய்யப்படும் வேல் வழிபாட்டை போலவே இல்லங்களிலும் சிறிய அளவில் வைத்து வழிபாடு செய்யும் முறை பல காலமாக பின்பற்றப்பட்டு வந்தாலும், வெகு சிலரே இந்த வேல் வழிபாடு பூஜை முறையை அறிந்திருக்கின்றனர். முருகனுக்குரிய அந்த வேல் வழிபாட்டை நமது இல்லங்களிலும் செய்யும் முறை குறித்தும், அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Lord Murugan

பக்தர்களின் தீமையான வினைகள் அனைத்தையும் அழித்து, நன்மைகளை அருளும் ஆயுதமாகவும், முருகனின் அம்சமாகவும் இருப்பது தான் வேலாயுதம் ஆகும். வேல் வழிபாடு செய்ய விரும்புபவர்கள் ஏதேனும் புகழ்பெற்ற முருகன் கோவில் அல்லது ஆறுபடை முருகன் கோயில்களில் ஏதேனும் ஒன்றிற்கு சென்று, அங்கு விற்கப்படும் பஞ்சலோகத்தில் செய்யப்பட்ட சிறிய அளவிலான வேல் ஒன்றை வாங்கிக் கொள்ள வேண்டும். பின்பு அந்த வேல் வாங்கிய முருகப்பெருமான் தலத்தில், சிறிய வேலாயுதத்தை உங்கள் கையில் வைத்திருந்தபடி முருகப்பெருமானை வழிபட்டு, உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் ஒரு புதிய சிகப்பு நிற துணியை விரித்து, அதன் மீது ஒரு வெள்ளிக் கிண்ணம் அல்லது பித்தளை, செம்பு கிண்ணத்தில், புதிய பச்சரிசியை நிரப்பி அந்த வேலை அதில் நட்டு வைக்க வேண்டும்.

ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்றோ அல்லது சுபமுகூர்த்த நாளிலோ உங்கள் பூஜையறையில் வைக்கப்பட்டிருக்கும் வேலையை கங்கை நீர் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு அந்த வேலுக்கு காய்ச்சப்படாத சுத்தமான பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு சாதாரண நீரை கொண்டு வேலுக்கு அபிஷேகம் செய்து தூய்மைப்படுத்த வேண்டும். இதன் பின்னர் அந்த வேலையை ஒரு தூய்மையான துணி கொண்டு துடைத்து, மீண்டும் வெள்ளிக் கிண்ணத்தில் புதிய பச்சை அரிசி போட்டு நிரப்பி, அதில் அந்த வேல் நட்டு வைக்கப்பட வேண்டும்.

murugan

இதன் பிறகு அரைத்த சந்தனம், மஞ்சள் மற்றும் குங்குமத்தை அந்த வேலின் இரண்டு பக்கமும் பொட்டு வைக்க வேண்டும். அதன் பிறகு வாசமுள்ள விபூதியை அந்த வேலின் மீது அபிஷேக பொடி போன்று சிறிது தூவி விட வேண்டும். இவை எல்லாம் முடிந்ததும் முருகனின் வேல் நட்டு பட்டிருக்கும் கிண்ணத்தில், முருகனுக்கு விருப்பமான பன்னீர் ரோஜாப்பூக்கள் அல்லது செவ்வரளி பூக்களை சமர்ப்பித்து, கற்கண்டு, அவல், பொரி கடலை அல்லது பழங்கள் போன்றவற்றை நைவேத்தியம் வைத்து, தீபதூபம் காட்டி முருகனுக்கு உரிய காயத்ரி மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் அல்லது கந்தசஷ்டி கவசம் படித்து வழிபட வேண்டும்.

- Advertisement -

vel

மேற்கூறிய முறையில் முருகனின் வேலுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் 21 நாட்கள் திட சித்தத்துடன், உடல், மனம், ஆன்மா ஆகியவற்றின் திரிகரண சுத்தியுடன் செய்து வருவதால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் எத்தகைய பிரச்சனைகளும் தீருவதற்கான வழி பிறக்கும். தொழில், வியாபாரம் அல்லது இன்ன பிற விடயங்களில் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். செவ்வாய் தோஷம் ஏற்பட்டு நீண்டகாலமாக திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் அவதிப்பட்டவர்களுக்கு நல்ல அழகான, ஆரோக்கியமான குழந்தைப் பேறு கிடைக்கும். உங்களையும் வீட்டையும் பீடித்திருக்கும் துஷ்ட சக்திகள் ஒழியும். காரியத் தடை, தாமதங்கள் நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
மாந்தி தோஷம் போக்கும் பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vel pooja benefits in Tamil. It is also called as Vel poojai valipadu in Tamil or Murugan valipadu in Tamil or Ethirigal thollai neenga in Tamil or Veetil vel valipadu in Tamil.