மாங்கல்ய பலம் பெற திருவாதிரை நாளில் பெண்கள் இந்த ஐந்து முக்கியமான விஷயங்களை தவறாமல் செய்துவிட வேண்டும்

thiruvathirai-viratham-mangalyam
- Advertisement -

வருடந்தோறும் மார்கழி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் தான் திருவாதிரை விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய நாளில் சிவனின் விசேஷமான கோவில்களில் சிவனுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்படுகிறது. இன்றைய தினம் பெண்கள் தாலி கயிறை மாற்றுவதன் மூலம் அவர்களின் கணவரின் ஆயுட்காலம் நீட்டிக்கப்படுகிறது. இந்த வருடம் மார்கழி மாதம் 19 – 12 – 21 மாலை 5 மணியில் இருந்து 20 – 12 – 21 மாலை 7 மணி வரை திருவாதிரை நட்சத்திரம் இருக்கிறது. இன்றைய தினத்தில் பெண்கள் விரதமிருந்து சிவனை வழிபடுவதன் மூலம் தங்களின் மாங்கல்ய பலத்தை வலுப்படுத்த முடியும். இவ்வாறு மாங்கல்ய பலம் கொடுக்கும் திருவாதிரை நோன்பன்று விரதம் இருக்க வேண்டிய முறைகள் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

sivan-god2

ஒவ்வொரு திருவாதிரை திருநாள் அன்றும் சிவபெருமானுக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டு, அனைத்து கோவில்களிலும் சிவபெருமான் பச்சை நிறத்தில் தோற்றமளிப்பார். அன்றைய தினம் சிவபெருமான் கோவிலுக்கு சென்று சிவனை வழிபட்டு வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் ஆயுட் காலம் அதிகரிப்பதற்காக மேற்கொள்கின்றனர்.

- Advertisement -

திருமணம் ஆகாத பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் ஆக வேண்டும் என்பதற்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்கின்றனர். விரதம் இருக்கும் பெண்கள் காலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, பூஜை அறையை சுத்தம் செய்து, மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, பூ அலங்காரம் செய்து ,களி நைவேத்தியம் செய்து, சிவனுக்கு படைத்து பூஜை செய்ய வேண்டும்.

thiruvathirai-kali3

பின்னர் உணவு எதுவும் உண்ணாமல் காலை முதல் மாலை வரை விரதமிருந்து மாலை பால், பழம் உண்டு தனது விரதத்தை முடித்துக் கொள்ளலாம். பின்னர் மாலை பூஜை செய்வதற்காக 7 அல்லது 18 வகையான காய்கறிகளை கொண்டு குழம்பு வைத்து நைவேத்தியம் படைக்க வேண்டும்.

- Advertisement -

முக்கியமாக இன்றைய நாளில் தாலி கயிறு மாற்ற நல்ல நேரம் பார்த்து செய்ய வேண்டும். அவ்வாறு திங்கட்கிழமை காலை 6 மணி முதல் 7.20 மணிக்குள் தாலிக் கயிறு மாற்றிக் கொள்ளலாம். அல்லது காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் மாற்றிக்கொள்ளலாம். இன்றைய தினத்தில் தாலிக் கயிறை கணவரின் கையால் மாற்றிக்கொண்டு கணவரிடம் ஆசீர்வாதம் பெறுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

food

கணவர் வீட்டில் இல்லாத சூழ்நிலையாக இருந்தால் வீட்டில் உள்ள பெரியவர்களின் கையால் தாலிக் கயிறு மாற்றிக் கொள்ளலாம். திருமணமாகாத பெண்கள் மாலை பூஜை முடிந்ததும் பூஜையில் வைத்துள்ள நோன்பு கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் விரைவில் இவர்களுக்கு நல்ல வரன் அமையும். பெண்கள் இந்த திருவாதிரை நோன்பு இருப்பதன் மூலம் அவர்களின் கணவரின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆயுட்காலம் அதிகரிக்கும். வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் செல்வம் நிரம்பி வழியும்.

- Advertisement -