- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்மாம்பழ அல்வா செய்முறை

மாம்பழ அல்வா செய்முறை

- Advertisement -

முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் இருக்கும் பழ வகைகளிலே சுவை மிகுந்தது என்றே சொல்லலாம் மற்ற எந்த பழங்களும் பிடிக்காது என்பவர்கள் கூட மாம்பழத்தை பிடிக்காது என்று சொல்ல மாட்டார்கள் அந்த அளவிற்கு மாம்பழம் அனைவரையும் கவர்ந்த ஒன்று.

இந்த அருமையான மாம்பழத்தை அப்படியே கொடுத்தாலே குழந்தைகள் முதல் பெரியவர் வரை போட்டி போட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள். அதில் கொஞ்சம் வித்தியாசமாக இந்த மாம்பழ அல்வா செய்து கொடுத்துப் பாருங்கள். உங்கள் வீட்டில் உங்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுவார்கள் அந்த அளவிற்கு இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். இந்த மாம்பழ அல்வா எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் பார்க்கலாம் வாங்க.

- Advertisement -

தேவையான பொருட்கள்

மாம்பழம் கூல் -1 கப்
ரவை – 1/2 கப்
ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்
சர்க்கரை – 1/2 கப்
முந்திரி – 10
நெய் – 1/4 கப்

செய்முறை

இந்த அல்வா செய்வதற்கு முதலில் நல்ல கனிந்த இனிப்பான மாம்பழங்களாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இந்த மாம்பழத்தை தோலை கொட்டை இரண்டையும் எடுத்து விட்டு சதைப்பகுதியை மட்டும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல கூழ் பதத்திற்கு அரைத்து ஒரு கப் வரும் அளவுக்கு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே கப் அளவுக்கு மற்ற பொருள்களையும் அளக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்து அடுப்பில் கடாய் வைத்து சூடான பிறகு முதலில் கொஞ்சமாக நெய் ஊற்றி முந்திரியை தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இன்னும் கொஞ்சம் நெய் ஊற்றி அதில் ரவை சேர்த்து நல்ல வாசம் வரும் வரை வருத்து அதை தனியாக தட்டில் கொட்டி ஆற வைத்து விடுங்கள்.

இதற்கு நீங்கள் வருத்த ரவை, வறுக்காத ரவை எதை சேர்த்தாலும் அதற்கேற்றார் போல் ரவை வறுக்கும் பதத்தில் பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்து சர்க்கரையை கொட்டி சக்கரை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சர்க்கரை கரையும் வரை கொதிக்க விடுங்கள்.

- Advertisement -

சர்க்கரை ஓரளவிற்கு பாகுபதம் வந்த பிறகு ஏற்கனவே வறுத்து ஆற வைத்த ரவையை இதில் சேர்த்து விடுங்கள். இந்த நேரத்தில் ஏலக்காய் தூளையும் சேர்த்து ரவை ஓரளவுக்கு சர்க்கரை பாகுடன் கலந்து வர வேண்டும். அதன் பிறகு மாம்பழக் கூழை இதில் சேர்த்து கிண்ட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: மாம்பழ புலிச்சேரி செய்முறை

ரவையை சேர்த்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாக நெய் ஊற்றி கிளறிக் கொண்டே கிளறுங்கள். அல்வா நன்றாக சுருண்டு நெய் மொத்தமும் பிரிந்து வந்த பிறகு கடைசியாக முந்திரி சேர்த்து இறக்கி விடுங்கள். சுவையான மாம்பழம் அல்வா தயார்.

சற்று முன்