இதுக்காகவா பார்லர் போக போறீங்க? இனி அதுக்கெல்லாம் அவசியமே இல்ல,ரொம்ப சிம்பிளா வீட்டிலே மெனிக்யூர் செய்யலாம் வாங்க.

- Advertisement -

நமக்கெல்லாம் கைகளையும் விரல் நகங்கள் இதையெல்லாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நமக்கு சிறு பிள்ளை முதல் நம் வீட்டில் சொல்லி சொல்லி தான் வளர்த்திருப்பார்கள். இப்போது நவீன காலத்தில் அதையே கொஞ்சம் வித்தியாசமாக சுத்தமாக வைத்திருப்பதுடன் சேர்த்து நல்ல நிறமாகவும் பார்க்கவே கண்ணை கவரும் வகையில் அழகாகவும் வைத்திருக்கும் இந்த மெனிக்யூர் முறையை வீட்டில் எப்படி சுலபமாக செய்து கொள்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இந்த மெனிக்யூர் செய்வதற்கு முதலில் உங்கள் விரல்களில் உள்ள நெயில் பாலிசிகளை ஒரு காட்டன் துணி அல்லது காட்டன் பேட் கொண்டு சுத்தமாக துடைத்து எடுத்து விடுங்கள். அதன் பிறகு நெய்ல் கட்டர் வைத்து உங்கள் விரல் நகங்களை சுத்தம் செய்த பிறகு உங்கள் நகங்களை நீங்கள் விரும்பிய சேர்ப்பிற்கு ஷேர் பண்ணிக் கொள்ளுங்கள். அடுத்து உங்கள் விரல்களின் மேல் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் வைத்து நன்றாக மசாஜ் செய்து கொடுங்கள் இதன் மூலம் உங்கள் விரல் நகங்கள் பளபளப்பாக மாறும்.

- Advertisement -

இப்போது ஒரு சின்ன பாத்திரத்தில் கொஞ்சம் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் ஒரு ஸ்பூன் ஷாம்பூ ஆர் ஃபேஸ் வாஷ் எதுவாக இருந்தாலும் சேர்த்து அதில் உங்கள் விரல்களை ஒரு பத்து நிமிடம் ஊற வைத்த பிறகு பிரஷ்சை வைத்து விரல் நகம் நகை எடுத்து போன்றவை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு சின்ன பவுலை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் இரண்டு டீஸ்பூன் அரிசி மாவு, அரை டீஸ்பூன் காபி பவுடர், ரோஜா இதழ்கள் இரண்டு ஸ்பூன், அரை டீஸ்பூன் லெமன் இதை அனைத்தையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல குறைத்துக் கொண்டு அதை உங்கள் கை மற்றும் விரல்களில் தேய்த்து பத்து நிமிடம் மசாஜ் செய்து விடுங்கள். அதன் பிறகு தண்ணீர் வைத்து சுத்தம் செய்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக கொஞ்சம் ரோஜா இதழ்கள் (பன்னீர் ரோஜா இதழாக இருந்தால் நல்லது) அதையும் ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைத்து கொள்ளுங்கள். அரைத்த இந்த பேஸ்டுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக அடித்தப் பிறகு இதை உங்கள் கை மற்றும் விரல்கள் பத்து நிமிடம் தேய்த்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் கையை சுத்தம் செய்து விட்டு நன்றாக ஒரு காட்டன் துணி வைத்து துடைத்த பிறகு உங்களுக்கு பிடித்த நெயில் பாலிஷை வைத்து உங்கள் கை விரல்களை நகங்களில் போட்டுக் கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் இதை செய்வதற்காக இனி நீங்கள் அதிக செலவு செய்து பார்லரை தேடி ஓட வேண்டியதில்லை. நேரம் கிடைக்கும் போது உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்து கொள்ளலாம் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.இனி இதற்காக நீங்கள் பார்லர் செல்லவேண்டிய அவசியமே இருக்காது.

- Advertisement -