இந்த ஒரே 1 பொருளை தானம் கொடுத்து வந்தால், உங்கள் வீட்டில் எப்போதும் லக்ஷ்மி கடாட்சம் நிறைந்து இருக்கும். தடையின்றி பணவரவு இருக்கும்.

cash-thanam

எல்லாருக்கும் அவர்களது வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் நிறைந்து இருக்க தான் ஆசை. ஆனால் பிறருக்கு உதவாத மனம் படைத்தோரிடம் மஹாலக்ஷ்மி தங்குவது இல்லை. எப்போதும் மற்றவர்களுக்கு உதவி செய்வதை விருப்பமாக வைத்திருங்கள். இல்லாதவர்களுக்கு உங்களால் முடிந்தவற்றை கொடுத்து உதவுவது லக்ஷ்மி கடாட்சத்தை பெற்றுத் தரும். நீங்கள் உங்களுக்காக செய்ய நினைக்கும் போது பணவரவு தானாகவே தடைபடும். ஆனால் அதுவே மற்றவர்களுக்கு நல்ல உயர்ந்த எண்ணத்தோடு செய்ய நினைத்து பாருங்கள் எங்கிருந்து தான் பணம் வரும் என்று தெரியாது. நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பணவரவு உண்டாகும். இது தான் நிதர்சனம்.

thanam

இந்த ஒரு பொருளை தானமாக வீட்டிற்கு வரும் பெண்களிடம் கொடுத்து வாருங்கள். இதை ஒரு வழக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள். இதுவரை அல்லாத மாற்றத்தை உங்கள் வாழ்க்கையில் காண முடியும் என்கிறது சாஸ்திரம். அப்படி என்ன பொருள் அது என்று இப்பதிவில் கண்டு விடலாம் வாருங்கள். வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு சில பொருட்களை தானமாக கொடுப்பதன் மூலம் மகாலட்சுமியின் அருளைப் பெற முடியும் என்கிறது சாஸ்திரம். இது அனைவரும் அறிந்த ஒன்றே.

இக்காலத்தில் இதை யாரும் பெரிதாக பொருட்படுத்துவதே கிடையாது. இதனால் வறுமையும், துன்பங்களும் வாழ்வில் அதிகரித்து வருகிறது. நமது மூதாதையர்கள் நமக்கு கற்றுக்கொடுத்த பாடத்தை நாம் மறந்து வருகிறோம் என்பதே வேதனைக்குரிய விஷயம் தான். சில பொருட்களை அந்தந்த காலகட்டத்தில் நாம் தானமாக அளிப்பதன் மூலம் நமக்கு நிறைய நன்மைகள் ஏற்படும். உதாரணத்திற்கு கோடை வெயில் காலத்தில் வீட்டின் முன்னே மண்பானையில் தண்ணீர் வைப்பது, நீர் மோர் தானமாக கொடுப்பது பெறற்கரிய பேற்றை பெற்றுத்தரும். இது பல தலைமுறைகள் நன்றாக வாழ்வதற்கு ஆதாரமாக விளங்கியது.

thanneer-panthal

வழிப்போக்கர்களின் தாகத்தை தீர்ப்பது மிகப்பெரிய செயலாக சாஸ்திரங்கள் கூறுகிறது. இது ஒரு சாதாரண விஷயம்தான். ஆனால் இதைப் பின்பற்றுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம் என்றே சொல்லலாம். இவற்றையெல்லாம் நம் பிள்ளைகளுக்கும் நாம் கற்றுக் கொடுப்பது நம்முடைய கடமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் தெருக்களின் மின்கம்பங்களில் சிறிய வாளிகளில் தண்ணீர் வைத்து கட்டி வைப்பதை நாம் பார்த்திருப்போம். இது ஒரு நல்ல செயலாக உள்ளது. தாகம் தீர்க்க வரும் பறவைகளும், விலங்குகளும் இவற்றால் பலன் அடைகின்றன. சிறிய விஷயங்கள் மூலம் மனிதர்கள் புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள முடியும் என்பதை ஆணித்தரமாக கூறலாம். நீங்கள் பெரிதாக எதையும் செய்யத் தேவையில்லை. உங்களால் என்ன முடியுமோ, அதை செய்தாலே போதும். உங்கள் துன்பங்களிலிருந்தும், கஷ்டங்களில் இருந்தும் விடுதலை பெற்று விடலாம்.

- Advertisement -

இவ்வரிசையில் சுமங்கலி பெண்களுக்கு தானமாக அளிக்கும் மஞ்சள், குங்குமம் மிகப்பெரிய நன்மைகளை நமக்கு செய்யும். குறிப்பாக குண்டு மஞ்சளை நீங்கள் தானமாக அளிக்கும் பொழுது பெரும் புண்ணியம் கிட்டும் என்று சாஸ்திர குறிப்புகள் கூறுகின்றன. உங்கள் வீட்டிற்கு கண்டிப்பாக அடிக்கடி சுமங்கலிப் பெண்கள் யாரேனும் வந்து செல்வது வாடிக்கையாக இருக்கும். அவர்கள் உங்கள் உறவினர்களாக இருக்கலாம், நண்பர்களாக இருக்கலாம், தெரிந்தவர், தெரியாதவர் என்று எவராவது வேண்டுமானாலும் இருக்கலாம். இப்படி வரும் சுமங்கலிப் பெண்களுக்கு ஒரே ஒரு குண்டு மஞ்சளை நீங்கள் தானமாக அளித்து ஒரு சொம்பு தண்ணீர் குடிக்கக் கொடுத்தால் போதும். இது மிகப்பெரிய புண்ணியத்தை உங்கள் வம்சத்திற்கே சேர்க்கும்.

manjal-kizhangu

உங்களது அடுத்தடுத்த சந்ததியினர் வளமுடன் வாழ்வதற்கு இந்த சிறு செயலை உபகாரமாக இருக்கும். இதற்காகவே குண்டு மஞ்சளை நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இதை அதிககாலம் உங்களால் பத்திரப்படுத்த முடியாது. வண்டுகள் வந்துவிடும். எனவே நீங்கள் வாரம் ஒரு முறை, ஒரு பத்து மஞ்சளை வாங்கி பத்திரமாக பிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். உங்களிடம் உதவி கேட்க வரும் பெண்களுக்கோ, உரையாட வரும் பெண்களுக்கோ அவர்கள் கிளம்பும் போது ஒரு குண்டு மஞ்சளை கொடுத்து வழி அனுப்புவதை வாடிக்கையாக மாற்றிக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் கட்டாயம் நல்ல மாற்றத்தை நீங்களே உணரலாம்.

இதையும் படிக்கலாமே
உங்க வீட்ல இருக்க, கண்ணுக்குத் தெரியாத எல்லா பிரச்சனைகளையும், இழுத்துக்கொண்டு வந்து, வெளியே போடும் சக்தி இந்த ஒரு பொருளுக்கு உண்டு.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Thanam seivathu eppadi in Tamil. Thanam palangal in Tamil. Thanamum palangalum in Tamil. Dhanam in Tamil. Dhanam palangal in Tamil.