உங்க வீட்ல இருக்க, கண்ணுக்குத் தெரியாத எல்லா பிரச்சனைகளையும், இழுத்துக்கொண்டு வந்து, வெளியே போடும் சக்தி இந்த ஒரு பொருளுக்கு உண்டு.

family-deepam

நம்முடைய வீட்டில் சந்தோஷமான சூழ்நிலை நிலவ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? குறிப்பாக சில வீடுகளில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். நோய்நொடிகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். குடும்பம் ஒற்றுமையாக இருக்கவே இருக்காது. குழந்தைகள் சொல்பேச்சு கேட்க மாட்டார்கள். சரியாக படிக்க மாட்டார்கள். இப்படி நம் வீட்டில் இருக்கும் ஆயிரம் பிரச்சினைகளுக்கும், ஒரே தீர்வு நம்மால் கொண்டுவர முடியுமா என்பது சந்தேகம் தான்.

family fight

இருப்பினும், இந்த பிரச்சனைகளை எல்லாம் நம் வீட்டில் இருந்து எப்படி துரத்தி வெளியே அனுப்புவது, என்பதை பற்றிதான் தெரிந்துகொள்ள போகின்றோம். இது ஒரு சுலபமான முறை தான். நீங்கள் சாம்பிராணி தூபம் போடும் போது வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ இந்த முறையைப் பின்பற்றினாலே போதும். அதற்கு தேவைப்படக் கூடிய ஒரு பொருளைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

அதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பாக, உங்கள் வீட்டில் பிரச்சனைகள் வருவதற்கு முதல் காரணமாக இருப்பது நீங்கள், உங்களுடைய குடும்ப விஷயங்களை வெளி நபர்களிடம் அதிகமாகப் பகிர்ந்து கொள்வதன் மூலம் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நம் வீட்டில் இருக்கும் நல்லதை மட்டும் தான் வெளியே சொல்லக்கூடாது என்பது அர்த்தமில்லை. நம் வீட்டில் இருக்கக் கூடிய பிரச்சினைகளைக் கூட வெளியாட்களிடம் சொல்ல கூடாது என்பதை மறக்க வேண்டாம்.

fight-1

நம்முடைய வீடு சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றால், மகாலட்சுமி ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். இதையும் தாண்டி ஆரோக்கியமான வாழ்க்கை, இருந்தால் தான் நம் வீடு பிரச்சினை இல்லாமல் இருக்கும் என்பதும் அவசியமான ஒன்று. அதாவது வீட்டில் இருப்பவர்களுக்கு கோபம் அதிகமாக வந்தாலும் பிரச்சனை ஏற்படும். வீட்டில் இருப்பவர்களுக்கு, அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய், மருத்துவமனைக்கு செலவு பண்ணாலும் பிரச்சனை கட்டாயம் வரும். ஆக, ஒரு வீட்டில் நிம்மதியானது இவை அனைத்திலும் அடங்கியுள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

உங்கள் வீட்டில் இருப்பவர்கள் வயதானவர்களாக இருந்தாலும் கூட, அவர்களை நோய் நொடி தாக்காமல் இருக்கவும், இந்த ஒரு பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த புகையை சுவாசிப்பதன் மூலம் நம்முடைய மனநிலையானது சீர்படுத்த படுகின்றது. இப்படி இருக்கும் பட்சத்தில், நம் வீட்டில் இருப்பவர்கள் உடைய கோபமானது குறைந்தாலே போதும். நம் வீட்டில் சண்டை சச்சரவு ஏற்படாமல் இருக்கும்.

seenthal-kodi

இப்படி எல்லா வகையான பிரச்சினைக்கும் தீர்வு தரக்கூடிய அந்த ஒரு பொருள், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய, ‘சீந்தல் கொடி’ இதை நீங்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். முதலில் சாம்பிராணி துன்பத்திற்கு, தேவையான நெருப்பை தயார் செய்து வைத்துக் கொண்டு, அதில் சாம்பிராணிப் புகை போட்டு விடுங்கள். நன்றாக புகை வரும் போது, இந்த சீந்தல் கொடியை ஒரு கைப்பிடி அளவு போட்டால் போதும்.

happy-family

அந்த நறுமணம் உங்கள் வீடு முழுவதும் வீசும்படி எல்லா இடத்திலும் காட்ட வேண்டும். குறிப்பாக மூளை முடுக்குகளில், இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தாலே போதும். வீட்டில் இருப்பவர்கள் உடல் ஆரோக்கியமும், மன நிலையும் சீராக இருக்கும். வீட்டில் இருக்கக் கூடிய பிரச்சனையானது படிப்படியாக குறைந்து வருவதை கண்கூடாக காணலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
சாப்பிடும் போது இந்த தவறையெல்லாம் நீங்கள் செய்வீங்களான்னு பாருங்க! கட்டாயம் தரித்திரமும், கஷ்டமும் உங்களை இருக்க பிடிக்கத்தான் செய்யும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kanavan manaivi sandai. Prachanai theera. Kudumba prachanaigal theera Tamil. Kudumbathil nimmathi