ஒரு துளி கூட பக்க விளைவு இல்லாமல், நரை முடியை கருப்பாக மாற்ற இந்த எண்ணெயை தலையில் தேய்த்துக் கொள்ளவும்.

hair12
- Advertisement -

இன்று நம்முடைய ஆரோக்கியம் கெட்டு போகவும், உடல்நலத்தில் பிரச்சனை வருவதற்கும் காரணம் செயற்கையாக தயார் செய்த பொருட்களை தொடர்ந்து நாம் பயன்படுத்துவது தான். ஆரோக்கியத்தில் வரவிருக்கும் பெரிய பெரிய பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க, கூடுமானவரை அன்றாடம் செயற்கையான பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்வது நல்லது. அந்த வரிசையில் செயற்கையான முறையில் ஹேர் டை பயன்படுத்துவதன் மூலமாகவும் நமக்கு பக்க விளைவுகள் அதிகம் ஏற்படுகிறது. செயற்கையான ஹேர் டையை எந்த அளவுக்கு குறைக்க முடியுமோ, அந்த அளவுக்கு குறைத்து விட்டு இயற்கையான முறையில் சொல்லப்படும் ஹேர் டை பயன்படுத்துங்கள்.

இன்றும் நாம் ஒரு இயற்கையான ஹேர் டை பற்றி தான் பார்க்கப் போகின்றோம். இந்த ஹேர் டை உங்களுடைய நரைமுடியை நிரந்தரமாக கருப்பாக மாற்றுமா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. பத்து நாளைக்கு ஒருமுறை இந்த டை பயன்படுத்தினால் உங்களுடைய நரைமுடி வெளியே தெரியாமல் கருப்பாக இருக்கும். அவ்வளவு தான்.

- Advertisement -

இந்த ஹேர் டை தயார் செய்ய நமக்கு தேவையான பொருட்கள். சுத்தமான மஞ்சள் தூள், விளக்கெண்ணெய், கடுகு எண்ணெய், இந்த மூன்று பொருட்கள் போதும். கடுகு எண்ணெய் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் சுத்தமான மரச்செக்கு தேங்காய் எண்ணெயை கூட பயன்படுத்தலாம்.

முதலில் இரண்டிலிருந்து மூன்று டேபிள் ஸ்பூன் அளவு சுத்தமான மஞ்சள் தூள் எடுத்து ஒரு இரும்பு கடாயில் போட்டு வறுக்க தொடங்குங்கள். மஞ்சள் நிறத்தில் இருக்கும் மஞ்சள் பொடி, காபி பவுடர் நிறத்திற்கு சிவந்து நமக்கு வரவேண்டும். அந்த அளவிற்கு அதை வறுத்து அடுப்பை அணைத்து விட்டு, நன்றாக சூடினை ஆற வைத்து விடுங்கள்.

- Advertisement -

நன்றாக ஆறிய பிரவுன் நிறத்திற்கு வந்த இந்த மஞ்சள் பொடியில் 1 ஸ்பூன் அளவு மட்டும் விளக்கெண்ணெய் ஊற்றி, அந்த மஞ்சள் பொடியை கலக்குவதற்கு தேவையான தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொள்ள வேண்டும். ஓரளவுக்கு திக்கான ஆயில் கருப்பு நிறத்தில் நமக்கு கிடைத்திருக்கும். இதை அப்படியே ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து கொள்ளுங்கள்.

இந்த எண்ணெயை தலையில் தேய்த்தால் உங்களுடைய வெள்ளை முடி கருப்பாக மாறிவிடும். (தினமும் இந்த எண்ணெயை தலையில் தேய்த்துக் கொண்டாலும் தவறு கிடையாது.) எந்தெந்த இடங்களில் எல்லாம் நரைமுடி இருக்கிறதோ அந்தந்த இடத்தில் எல்லாம் இந்த எண்ணெயை லேசாக அப்ளை செய்து கொள்ளுங்கள். நீங்கள் வீட்டிலேயே இருப்பதாக இருந்தால் தலைக்கு கூட குளிக்க வேண்டாம். அப்படியே விட்டு விடுங்கள். வெளியில் செல்வதாக இருந்தால் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து தலையை பேபி ஷாம்பு போன்ற மயில்டான ஷாம்பு போட்டு அலசி விடுங்கள்.

- Advertisement -

நிறைய பேருக்கு இதில் ஒரு சந்தேகம். மஞ்சளை முகத்தில் இருக்கக்கூடிய தேவையற்ற முடி உதிர்வுக்காக தானே பயன்படுத்துகின்றோம். இதை தலையில் போட்டால் முடி கொட்டாதா என்று. மஞ்சளை நாம் நன்றாக வறுக்கும்போது அதன் தன்மை மாறிவிடும். இதனால் முடி உதிர்வு, பக்க விளைவுகளோ எதுவும் ஏற்படாது. உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே: கறுத்துப் போன வெள்ளி கொலுசை தேய்க்காமலே வெள்ளை ஆக்கலாம்ன்னு சொன்னா நம்பற மாதிரியா இருக்கு. உண்மையாகவே கை வலிக்க தேய்க்காமல் வெள்ளி கொலுசை வெள்ளையாக்கலாங்க. வாங்க அதையும் தெஞ்சிக்கலாம்.

பின்குறிப்பு: இந்த வறுத்த மஞ்சள் பொடியை அப்படியே ஒரு பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து, தேவையான போது அந்த மஞ்சள் பொடியை 1 ஸ்பூன் எடுத்து சின்ன கிண்ணத்தில் போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல கலந்து ஹேர்டை போல பயன்படுத்தலாம். சில பேருக்கு எண்ணெய் பிசுபிசுப்பு பிடிக்காது அல்லவா.

- Advertisement -