நேற்று விநாயகர் சதுர்த்திக்கு பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையாரை என்ன செய்வது? கஷ்டங்கள் காணாமல் போக, இந்த வருடம், மஞ்சள் பிள்ளையாரை இப்படி கரைத்து பாருங்கள்!

manjal-pillaiyar3

நேற்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை எல்லோரது வீட்டிலும் சிறப்பாக கொண்டாடப் பட்டிருக்கும். சில பேருக்கு மண்ணால் செய்த விநாயகர் சிலை லாக்டவுன் காரணமாக கிடைக்கவில்லை என்பதால், மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து வழிபாடு செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் எந்த குறையும் கிடையாது. மஞ்சள் பிள்ளையாருக்கு இருக்கக்கூடிய மகிமை வேறு எந்த பிள்ளையாருக்கும் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த பிள்ளையார், மஞ்சள் பிள்ளையார்.

vinayagar-chathurthi1

பெரும்பாலானவர்களது வீடுகளில் நேற்று, மஞ்சள் பிள்ளையார் வைத்து பிள்ளையார் சதுர்த்தி வழிபாட்டை செய்ததால், அந்தப் பிள்ளையாரை என்ன செய்ய வேண்டும் என்ற சந்தேகம் நம்மில் நிறைய பேருக்கு உண்டு. இந்த மஞ்சள் பிள்ளையாரை சிலரது வீடுகளில் மூன்றாவது நாள் கரைக்கும் வழக்கம் இருக்கும். சிலரது வீடுகளில் ஐந்தாம் நாள், சிலரது வீடுகளில் 9, 11 இப்படி கணக்கு வைத்திருப்பார்கள். அது அவருடைய வீட்டு வழக்கப்படி இருக்கட்டும்.

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபாடு செய்து வந்தால், உங்கள் வீட்டில் எத்தனை நாள் பிள்ளையாரை வைத்திருந்து வழிபாடு செய்வீர்களோ, அத்தனை நாட்களுக்கும், தினமும் காலையில் புதியதாக மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, ஏதாவது நெய்வேத்தியம் வைத்து தீபாராதனை காட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

manjal-pillaiyar2

உங்கள் வீட்டு பூஜை அறையில் இருந்து எடுத்த பழைய மஞ்சள் பிள்ளையாரை, மீண்டும் தண்ணீர் ஊற்றி குழைத்து, அந்த வீட்டில் இருக்கும் சுமங்கலிப் பெண்கள் அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் வயதுக்கு வந்த பெண் குழந்தைகள் முகத்தில் பூசி குளிப்பது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை தேடித் தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. சுத்தமாக இருக்கும் பெண்கள் மட்டும்தான், மஞ்சள் பிள்ளையாரை குழைத்து பூசி குளிக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

முடிந்தவரை நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குள் அந்த மஞ்சளை முழுமையாகப் பயன்படுத்தி விட வேண்டும். நீண்ட நாட்களுக்கு எடுத்து வைத்துக் கொள்ளக்கூடாது. சுத்தமாக இல்லாத சமயத்தில் கட்டாயம் அந்த மஞ்சளை தொடக் கூடாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. அப்படி இல்லை, தண்ணீரில் தான் கரைக்க வேண்டும் என்றால், எல்லாம் மஞ்சள் பிள்ளையாரையும் சேகரித்து வைத்துக் கொண்டு, ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த பாத்திரம் எச்சில் படாத பாத்திரமா என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

manjal-pillaiyar

அந்தத் தண்ணீரில் இரண்டு துளசி இலைகளை போட்டு, உங்கள் வீட்டில் என்ன பூ இருக்கின்றதோ அந்த பூக்களை உதிர்த்து போட்டு, இரண்டு  அருகம்புல்லை போட்டு, அதன் பின்பாக உங்கள் வீட்டில் இருக்கும் மஞ்சள் பிள்ளையாரை எடுத்து உங்கள் கைகளில் வைத்துக்கொண்டு, உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் கரைந்து போக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு, அதன் பின்பு அந்தப் பிள்ளையாரை தண்ணீரில் போட்டு உங்கள் கைகளால் நன்றாக கரைத்து விட்டு விடுங்கள்.

manjal-pillaiyar1

பின்பு, அந்த தண்ணீரை செடிகளில் அல்லது கால் படாத மண் பாங்கான இடத்திலும் ஊற்றி விடலாம். உங்கள் வீட்டில் மஞ்சள் பிள்ளையார் இருக்கும் வரை, கட்டாயம் அசைவம் சாப்பிடக்கூடாது. இப்படி செய்யும் பட்சத்தில், உங்களுக்கு தீராமல் இருக்கும் கஷ்டங்களுக்கு கூட, கூடிய விரைவில் தீர்வு கிடைக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
5 அரச இலை இருந்தால் போதும்! நீங்கள் நினைத்தது 21 வாரத்திற்குள் நினைத்தபடி அப்படியே நடக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.