- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகஷ்டங்கள் தீர மஞ்சள் வராகி வழிபாடு

கஷ்டங்கள் தீர மஞ்சள் வராகி வழிபாடு

- Advertisement -

ஒரு குழந்தை தனக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை வெளியில் சொல்ல முடியாத சூழ்நிலையில் இருந்தாலும் அதன் தாய் அந்த குழந்தையின் சூழ்நிலையை புரிந்து கொண்டு அந்த குழந்தைக்கு தேவையானவற்றை செய்வார். அதுபோல்தான் நமக்கு தேவையானவற்றை வெளியே சொல்ல இயலாத சூழ்நிலையில் இருந்தாலும் நம்மை பெற்ற தாயாக கருதப்படும் வராகி அம்மன் நம்முடைய தேவைகளை புரிந்து கொண்டு நமக்கு உதவி செய்வார். அப்படி அந்த தாய் நமக்கு உதவி செய்வதற்கும் நம்முடைய கஷ்டங்கள் தீரவும் எந்த முறையில் வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

கஷ்டங்கள் பல வகைப்படும். பண கஷ்டம், தொழில் கஷ்டம், மன கஷ்டம், குடும்பத்தில் இருக்கும் நபர்களால் ஏற்படக்கூடிய கஷ்டம், உறவினர்களால் ஏற்படக்கூடிய கஷ்டம், பிள்ளைகளால் ஏற்படக்கூடிய கஷ்டம், வேலையில் கஷ்டம், படிப்பில் கஷ்டம் என்று பல வகைகளில் அனைத்திலும் கஷ்டம் என்பது இருக்கத்தான் செய்யும். அந்த கஷ்டங்களை நம்முடைய கடின உழைப்பாலும் முயற்சியாலும் சரி செய்து கொள்ள வேண்டும். அப்படி முயற்சி செய்தும் நம்மால் அந்த கஷ்டத்தில் இருந்து வெளியில் வர முடியவில்லை என்றால் தெய்வத்தை நாட வேண்டும். அப்படி நம்முடைய கஷ்டத்தை தீர்க்கக் கூடிய அற்புதமான தெய்வமாக திகழ்பவள் வராகித்தாய்.

- Advertisement -

இந்த வழிபாட்டை என்றைக்கு வேண்டுமானாலும் நாம் ஆரம்பிக்கலாம். தொடர்ந்து 12 நாட்கள் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் செய்யலாம். அல்லது மாலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் செய்யலாம். முதல் நாள் எந்த நேரத்தில் இந்த வழிபாட்டை ஆரம்பிக்கிறோமோ அதே நேரத்தில் தான் தொடர்ந்து 12 நாட்களும் செய்ய வேண்டும்.

வீட்டு பூஜை அறையில் வராகி அம்மன் படம் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி படம் இருக்கும் பட்சத்தில் படத்தை துடைத்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். படம் இல்லை என்றாலும் பரவாயில்லை. இப்பொழுது ஒரு சிறிய தாம்பாலத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பாளத்தில் சுத்தமான மஞ்சள் தூளை போட்டு பன்னீர் ஊற்றி பிள்ளையார் பிடிப்பது போல் கொஞ்சம் பெரியதாக பிடித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக ஒரு நிலக்கடலையை எடுத்து அதை இரண்டாக உடைத்து வராகி அம்மனின் கொம்புகள் எப்படி இருக்குமோ அந்த வகையில் மஞ்சளில் வைக்க வேண்டும். அடுத்ததாக வராகி அம்மனுக்கு குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அதாவது நாம் பிள்ளையாரை எப்படி மஞ்சள் பிடித்து வைத்து வழிபாடு செய்கிறோமோ அதே போல் இந்த வழிபாட்டில் வாராகி அம்மனை மஞ்சளில் பிடித்து வைத்து வழிபாடு செய்யப் போகிறோம்.

இப்படி வராகி அம்மனை மஞ்சளில் பிடித்து வைத்துவிட்டு அம்மனுக்கு ஏதாவது ஒரு பழத்தை நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அம்மனுக்கு மலர்களை சூட்டி அம்மனுக்கு என்று தனியாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த தீபத்திற்கு முன்பாக அமர்ந்து “ஓம் வராகிதாயே போற்றி” என்னும் மந்திரத்தை 108 முறை மனதார உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி உச்சரித்த பிறகு உங்களுடைய கஷ்டம் என்னவோ உங்களுடைய கோரிக்கை என்னவோ அதை அம்மனிடம் கூற வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும். இப்படி தினமும் இந்த மஞ்சள் வராகி அம்மனுக்கு தீபமீற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

12 நாட்கள் நிறைவடைந்த பிறகு 13-வது நாள் மஞ்சளில் பிடித்து வைத்த வராகி அம்மனை அப்படியே எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். தினமும் காலையில் இந்த மஞ்சளை தங்களுடைய நெற்றியில் வைத்துக் கொள்வதன் மூலம் எந்தவித எதிர்மறை ஆற்றல்களும் கஷ்டங்களும் நம்மை அணுகாது.

இதையும் படிக்கலாமே: எண்ணிய எண்ணம் நிறைவேற விநாயகர் வழிபாடு

மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படும் வராகி அம்மனை இந்த முறையில் மஞ்சளில் பிடித்து வைத்து வழிபட நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.

சற்று முன்