திருப்பதி மலை ஏறும்போது இந்த மந்திரத்தை சொன்னால் அருள் நிச்சயம்

tirupathi-balaji

திருப்பதி ஏழுமலையானை நெருங்க நெருங்க, நம் மனதிற்குள் ஆழ்ந்த இன்பம் பெருகுவதும், மனமானது வேண்டுதலை மறந்து இறைவனின் நாமத்தை மட்டுமே ஜெபிப்பதையும் நாம் அவ்வப்போது உணர்வதுண்டு. இதையும் தாண்டி ஏழுமலையானின் முழு அருளையும் பெற ஒரு மந்திரம் உள்ளது. வாருங்கள் அதை பற்றி பார்ப்போம்.

perumaal

மந்திரம்:
ஸ்வர்ணாசல மஹாபுண்ய ஸர்வதேவ நிஷேவித
ப்ரம்மாதயோபி யம்தேவா: ஸே வந்தே ச்ரத்தயாஸஹ
தம் பவந்தம் அஹம் பத்ப்யாம் ஆக்ரமேயம் நகோத்தம
க்ஷமஸ்வ ததகம் மேஸ்த்ய தயயா பாபசேதஸ
த்வன்மூர்த்தநி க்ருதாவாஸம் மாதவம் தர்சயஸ்வமே

புண்ணியங்கள் பல நிறைந்ததும், எல்லா தேவர்களாலும் வணங்கப்பட்டதுமான வேங்கட மலையே. என் பாதங்களை உங்கள் மீது வைத்து ஏறுகிறேன். அதனால் ஏற்படும் பாவங்களை கருணையோடு பொறுத்துக்கொள்ளுமாறு வேண்டுகிறேன். திங்களுடைய சிகரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ வெங்கடேச பெருமாளை காணவே நான் செல்கிறேன், அவரின் தரிசனம் எனக்கு கிடைக்க தாங்கள் அருளுமாறு வேண்டுகிறேன்.

இதையும் படிக்கலாமே:
16 செல்வங்களை பெற உதவும் அபிராமி அந்தாதி பாடல்

திருப்பதி மலை ஏறும்போது இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டு ஏறினால், ஏழுமலையானின் தரிசனம் கிடைப்பதோடு மட்டும் அல்லாமல் அவற்றின் அருளும் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும்